திருச்சி, : திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,338வது சதய விழாவையொட்டி அரசு தரப்பு மற்றும் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,338வது சதய விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் பூனாட்சி காலை 9 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கலெக்டர் ஜெயஸ்ரீ, அரசு தலைமை கொறடா மனோகரன், எம்.பி குமார், எம்.எல்.ஏக் கள் சிவபதி, பரஞ்சோதி, சந்திரசேகர், இந்திராகாந்தி, மேயர் ஜெயா, அதிமுக புற நகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் கே.கே.பாலசுப்பிரமணியன், அண் ணாவி, கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், மனோ கரன், லதா, நாகநாதர் பாண்டி, அன்பில் காமராஜ், வக்கீல் ஜெயராமன், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் ஆர்.விஸ்வநாதன், துணைத்தலைவர் மங்களா செல்லதுரை, வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திமுக சார்பில் முன் னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் கட்சியினர் முத்தரையர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேக ரன், மாநகர செயலாளர் அன்பழகன், பொருளாளர் கே.கே.எம்.தங்கராசா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தன், பகுதி செயலாளர்கள் காஜா மலை விஜய், கணேசன், மண்டி சேகர், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், அம்பிகாபதி, முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தலைமையிலும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கைக்குடி சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியில் மாநகர் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்ட செய லாளர் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், பாரி, தேமுதிகவில் மாவட்ட செயலாளர் விஜயராஜன், வர்த்தக அணி செயலாளர் விஜயகுமார், பாஜவில் மாநில துணை தலைவர் இன்ஜினியர் சுப்பிரமணியன், மண்டல் தலைவர் இள.கண் ணன், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் மலர்மன்னன்(மாநகர்) சேரன் (புறநகர்), வெல்லமண்டி சோமு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயலாளர் மரு.பாஸ்கரன், பேரரசர் இளைஞர் நற்பணி இயக்கம் தட்சிணாமூர்த்தி, மறுமலர்ச்சி மக்கள் மன்றம் லோகநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சார் பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா ஆண்டுதோறும் மே 23ம் தேதி கொண்டாடப்படும். இதையொட்டி முத்தரையர் சங்கத்தினர் மற்றும் பல் வேறு அமைப்புகள் ஊர் வலம் நடத்தி அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
முன்னதாக விழா தொடங்குவதற்கு முன்ன தாக மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் அங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
துணை கமிஷனர் செல்வக்குமார் தலைமை யில் மாநகரில் பல்வேறு பகுதிகளில் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.
ஊர்வலத்துக்கு தடை
கடந்த ஆண்டு நடந்த சதய விழாவில் பயங்கர கலவரம் ஏற்பட்டு கடைகள், பஸ்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட முத்தரையரின் சதய விழாவில், முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஊர்வலம் நடத்த போலீசில் நேற்று முன்தினம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை காரணம் காட்டி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்காமல் தடை விதித்தனர்.
முத்தரையர் சிலையை சுற்றி மாலை அணிவிக்க வசதியாக பலகையால் ஆன மேடை அமைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பலகை மேடை அமைக்க போலீசார் தடை விதித்ததுடன், சிலையை சுற்றி புதிதாக ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. இதனால் சில நபர்களே சிலை அருகே நிற்க முடியும் நிலை ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக