செவ்வாய், 21 மே, 2013

முத்தரையர்கள் சங்க ஆலோசனை கூட்டம்



ஆலங்குடி, : ஆலங்குடி அடுத்த வடகாட்டில் தமிழ் நாடு முத்தரையர் சங்க கிளைக்கூட்டம் நிர்வாகி முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. இளைஞர் அணி நிர்வாகிகள் பிரபாகரன், தமிழ்குமரன், பத்மநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சாத்தையா, அன்பழகன் தீர்மானங்களை விளக்கிப் பேசினர். கூட்டத்தில், வரும் 23ம் தேதி திருச்சியில் நடைபெறும் முத்தரையர் சதய விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வது.
முத்தரையர்களுக்கு இடஒதுக்கீடு கோரி அரசை வலியுறுத்துவது. தமிழக அமைச்சரவையில் முத்தரையர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தி முதல்வரை கேட்டுக்கொள்வது. மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென்றல்செல்வம் நன்றி கூறினார்.

News From : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக