செவ்வாய், 28 மே, 2013

ஏழை மாணவர்களுக்கு உதவ முடிவு - முத்தரையர் சங்கம் முடிவு

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது என பொன்னமராவதியில் நடைபெற்ற தமிழ்நாடு முத்தரையர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கே. செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் பூ.சி. தமிழரசன், மாவட்டச் செயலர் இரா. திருமலைநம்பி, பொருளாளர் சத்தியமூர்த்தி, அமைப்பாளர் வஞ்சித்தேவன் ஆகியோர் சங்கத்தின் வளர்ச்சி குறித்து பேசினர். கூட்டத்தில், கிராமங்கள்தோறும் சங்க கிளைகள் அமைத்து கொடியேற்றுவது, ஏழை மாணவர்கள் பள்ளிப் படிப்பை தொடர உதவுவது, நாடாளுமன்ற தேர்தலில் முத்தரையர் சமுதாயத்திற்கு போதிய இடங்களை அனைத்து கட்சிகளும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய துணைச் செயலர் வி. மணி, ஒன்றியக் குழு உறுப்பினர் சிவசாமி, ஊராட்சித் தலைவர்கள் மாணிக்கம், குமார், நிர்வாகிகள் பரமன், பழனிச்சாமி, ராஜா, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் எ. மாணிக்கம் நன்றி கூறினார்.

NEWS FROM : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக