மதுரை, : அகில இந்திய முத்தரையர் எழுச்சிப் பேரவை மற்றும் முத்தரையர் வக்கீல் சங்கத்தின் அவசர கூட்டம், அதன் தலைவர் பாண்டிப்பெருமாள் தலைமையில் மதுரையில் நடந்தது.
நிர்வாகிகள் கண்ணன், சிங்கராஜன், திரவியம்பிள்ளை, பெரியகருப்பன், ராமலிங்கம், திருமேனி, ஜெயராஜ், கோவிந்தன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பெரும்பிடுகு மன்னரின் 1339 சதய விழாவை திருச்சியில் அரசு சார்பில் கொண்டுவதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். திருச்சியில் உள்ளது போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் முத்தரையர் மன்னர் சிலையை அரசு அமைக்க வேண்டும்,
முத்தரையர் சமுதாயத்தினருக்கு கல்வி, அரசு வேலையில் தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். முத்தரையர் புனரமைப் புக்கு தனி சட்டம் நிறை வேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
News From : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக