நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1338 - வது சதயவிழா இன்று சிறப்பாக தமிழகம் முழுவதும்நடைபெற குறிப்பாக திருச்சி மாநகரில் அமைதியாக நடைப்பெற ஒத்துழைத்த எனது மதிப்புமிக்கஉறவுகளுக்கும், அரசு விழாவாக கொண்டாடிய "தமிழக அரசுக்கும்", எம் சமூகத் தலைவர்களுக்கும்,அனைத்துக் கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்களுக்கும், மாவட்ட, மாநில அரசுஅதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இளம் சிங்கங்களின் எழுச்சிஇயக்கம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாக எம் குல இளைஞர்கள் அமைதியுடனும், மிகுந்த நாகரீகமாகவும் நடந்துக் கொண்டது ஏனைய சக சமூகங்களுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்திடும் வகையில் இருந்ததை பெருமிதமாகஉணர்கிறோம். இனி வரும் காலங்களிலும் இதே போன்ற விவேகத்துடன் செயல்பட்டு எதிர்காலத்தில்தமிழகத்தில் தவிர்க்க முடியாத இளைஞர் சக்தியாக "முத்தரையர் இளைஞர்கள்" இருக்க வேண்டும்என்று அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றியுடன்....
சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக