ஊர்வலமாக செல்ல போலீசார் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தனர். கதர் துறை அமைச்சர் பூனாட்சி தலைமையில், அரசு சார்பில், முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன் கடந்த முறை போல் இல்லாமல், ஆரவாரமின்றி மாலை அணிவித்துச் சென்றார்.
அனுமதியின்றி, உணர்ச்சியை தூண்டும் வகையில் வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸ் பேனர்களை நேற்று முன்தினம் போலீசார் அகற்றினர். போலீஸ் கெடுபிடி, பலத்த சோதனை காரணமாக நேற்று மாலை, 5:00 மணி வரை, எவ்வித பிரச்னையுமின்றி சதயவிழா நடந்தது.
News From : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக