திங்கள், 8 ஜூலை, 2013

முத்தரையர் கல்வி பரிசளிப்பு விழா

முத்தரையர் கல்வி பரிசளிப்பு விழா

வணக்கத்திற்க்குறிய முத்தரையர் உறவுகளே...!! 07.07.2013 (ஞாயிற்றுக்கிழமைநேற்று பட்டுக்கோட்டை குட்டாள் திருமண மண்டபத்தில், (நாடியம்மன் கோவில் ரோடு, பேருந்து நிலையம் அருகில்) 2012 - 2013 கல்வியாண்டில் "பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில்பத்தாம் வகுப்பில்(SSLC) 450 மதிப்பெண்களும்பன்னிரெண்டாம் வகுப்பில் (HSC) 1000  மதிப்பெண்களும் பெற்ற"முத்தரையர் மாணவமாணவியருக்குமுத்தரையர் கல்வி ஆர்வலர்கள் – ஆசிரியர் அரசு ஊழியர்கூட்டமைப்பு இணைந்து "கல்வி பரிசுவழங்கியது.

இதில் சுமார் 40 மாணவ - மாணவியர் பரிசு பெற்றனர்மாணவர்களுக்கு தலா ரூ. 1000 /- ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது, மேலும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற (பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு) தலா இருவருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது

மாணவ மாணவியர்களுடன் அவர்தம் பெற்றோரும்இனஆர்வலர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்இந்த விழா சிறக்கஒத்துழைத்த அனைவருக்கும்பரிசில் வழங்கிய சமுதாய புரவலர்களுக்கும்விழா சிறப்பாக நடந்தேற வழிகாட்டிய ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்பினருக்கும்பட்டுக்கோட்டை வட்ட முத்தரையர் கல்வி அறக்கட்டளை  சார்பாகநன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றியுடன் ஒருங்கிணைப்புக் குழு

காந்திவசந்த் தேவா (சுரேஸ், பாலசிங்கம்பாலாபாரதி



இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் பரிசு வழங்குபவர் தலைவர். திரு. தேவா (எ) சுரேஷ்

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்த முத்தரையர் சமூக மாணவி.

இளம் சிங்கங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் செயலாளர் திரு. காந்தி பரிசு வழங்கியபோது






பட்டுக்கோட்டை வட்ட கல்வி அறக்கட்டளையின் அமைப்பாளர் ஆசிரியர் திரு. அன்பரசன் அவர்கள் உரை ஆற்றியப்போது. 











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக