ஓய்வு பெற்ற ஆணையர் திருமலைநம்பி, வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ராஜசேகரதங்கமணி, புதுகை மாமன்னர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் சுந்தரம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் விருது பெற்ற சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் சாந்தி சிறப்புரையாற்றினார்..
அப்போது அவர் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோதெல்லாம் குறுநில மன்னர்களாக இருந்து தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டு வந்தவர்கள் முத்தரைய மன்னர்கள்தான். அதேபோல் அவர்கள் கட்டிய கோயில்களில் பலவற்றை சோழ மன்னர்கள் கட்டியதாகச் சொல்லப் படுகிறது. கல்வெட்டுகளை சரியாக ஆய்வு மேற்கொள்ளும்போது முத்தரையர்கள்தான் கட்டியிருக்கிறார்கள் என்பதற்கான அந்த ஆவணங்கள் கிடைக்கப் பெறுகின்றன. உதாரணத்திற்கு நார்த்தாமலைக் கோயில்.
நாடாண்ட இனம் இப்போது கல்வியில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. பழங்காலத்தில் ஆண் புலவர்களுக்கு இணையாக பெண்பாற்புலவர் பெருமக்கள் இருந்து பாடல்களை இயற்றியிருக்கிறார்கள். காவியங்கள் படைத்திருக்கிறார்கள். இலக்கியப் பணிகளில் தீவிரமாக இருந்து சாதனைகள் உருவாக்கியிருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப் பட்டு ஆண்கள் மட்டுமே கல்வி கற்கும் நிலை வந்ததால் பெண்கள் மிகவும் பின்னுக்கு வந்து விட்டார்கள். அதில் முத்தரையர் மட்டுமல்ல நாட்டு மக்களே கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னர்களும் மன்னர்களின் வாரிசுகளும் படைத்தளபதிகளின் வாரிசுகளும் மற்றும் கல்வி கேள்வியில் சிறந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. மற்றவர்கள் நாடு செழிக்கவும் பாதுகாக்கவும் உழைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துலெட்சுமி கல்வி கற்பதற்கும் மருத்துவராவதற்கும் என்ன பாடுபட்டார் என்பது கடந்த நூற்றாண்டு வரலாறு பேசுகிறது. பெண்களைவிடவும் கல்வி மறுக்கப் பட்ட நிலையில் முத்தரையர் இனம் இருந்ததால்தான் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள். இங்கு 275-பேர் மாவட்ட அளவில் வந்து பரிசு பெறுகிறார்கள். ஆனால் பத்தாம் வகுப்பில் 492-மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவர் இங்கு கல்வியில் முன்னேற்றமடைந்தவர்களுக்கு மேலும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்குவதையும் அதைப் பெறவேண்டும் என்பதையும் அறியாமலயே இருந்திருக்கிறார் என்ற அளவிற்கு சமூகத்தில் பின் தங்கியே வந்திருக்கிறார்கள்.
அந்த நிலையை மாற்றுவதற்கும் அரசின் கல்விக் கொள்கையை முழுமையாக அடைந்து நல்ல உயர் கல்வி கற்று சமூகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் முதலில் கல்வியில் உயர வேண்டும். அதற்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான். இலக்கிய காலங்களிலும் முத்தரைய ஆட்சிக் காலத்திலும் முன்னேறியிருந்த நிலைக்கு மீண்டும் கல்வியில் உயர வேண்டும் என்று பேசினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக