ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

அன்புடன் குறும்படம்...


அன்புடன் குறும்படம்...

 நமது பாசமிகு தம்பி சிவா முத்தரையரின் நடிப்பில்..

தம்பி இன்னும் பல வாய்ப்புக்களைப் பெற்று முன்னேற "அன்புடன்" வாழ்த்துகிறோம்..

- இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

குன்னாண்டார் கோயில்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை


குகைக் கோயிலால் சிறப்புப் பெற்ற ஊர் குன்னாண்டார் கோயிலாகும். 

அமைவிடம்
இது புதுக்கோட்டைக்கு 25 கி.மீ வடக்கே உள்ளது. 

சிறப்பு
திருக்குன்றக்குடி என்றழைக்கப்படும் இவ்வூரில் இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இது கருவறையையும் ஒரு சிறிய மண்டபத்தையும் கொண்டுள்ளது. இக்குடைவரை முத்தரையர் படைப்பாகக் கருதப்படுகின்றது. 

கருவறையின் வெளிப்பக்கச் சுவரில் வலம்புரி விநாயகரும், சிவன்-பார்வதி சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. 

இக்குகைக் கோயிலின் முன்புள்ள போத்தரையன் மண்டபம், நாட்டிய மண்டபம் போன்றவை முத்தரையர்கள் காலத்திலும், நூற்றுக் கால் மண்டபம் விஜயநகர காலத்திலும் கட்டப்பட்டவையாகும். 

இங்கே பல்லவர், பிற்காலப் பாண்டியர், சாளுக்கிய சோழர் மற்றும் விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல உள்ளன. 

மேற்கோள் நூல்
ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு சென்னை, அரசு அருங்காட்சியகம்.

News Source : TAMILVU

சனி, 28 செப்டம்பர், 2013

மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அழைக்கிறது.

    முத்தரையர் சொந்தங்களே வருகின்ற அக்டோபர் 2 ஆம் நாள் திருச்சியில் புத்தூர் 4 ரோடு சண்முகா திருமண மண்டபத்தில் பத்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடை பெறுகிறது . மங்களா . செல்லத்துரை அவர்கள் மன்றக்கொடி ஏற்ற அய்யா ஆர் வி அவர்கள் வாழ்த்துரை வழங்க முன்னாள் அமைச்சர்கள் மாண்பு மிகு என் செல்வராசு மாண்புமிகு கு கிருஷ்ணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு ராஜசேகரன் திரு பிரின்ஸ் தங்கவேலு காமாட்சி பாலிடெக்நிக் கல்லூரி பெருநதலைவர் திரு செல்வராசு இமயம் கல்லூரிகள் பெருந்தலைவர் திரு பெரியண்ணன் சென்னை சென்றல் டிரேடர்ஸ் திரு ஜெகன்னாதன் நவீன் ஏர் ட்ரவல்ஸ் திரு வெங்கடாசலம் சென்னை அக்ஷயா சூபெர்மார்கட் திரு டி ஆர் செல்வராசு ஆகியோர் கலந்துகொண்டு அமாரர் பாதர் பேட்டை முத்தையா அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது திரு காந்திபித்தன் அவர்களுக்கு முத்தரையர் இனப்பணி ஏநதல் விருது புதுகை புலவர் பு சி தமிழரசன் அவர்களுக்கு முதுபெரும் முத்தரையர் சான்றோர் விருது திருமதி சுபத்ரா ஸ்ரீதருக்கு முத்தரையர் மாதரசி விருது செல்வன் அருண் மோதிக்கு மலரும் சாதனையாளர் விருது எனப்பல விருதுகளை வழங்கியும் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்பிக்க இருக்கின்றனர் .சொந்தங்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வாருகை புரியுமாறு அன்புடன் வேண்டுகிறேன்

அன்புடன்

டாக்டர். பெரியசாமி லோகநாதன்

தம்பிக்கு ஒரு கடிதம்

நேற்றைய தினம் ஒரு தம்பி என்னை தொடர்பு கொண்டு அவர் பணிபுரியும் இடத்தில் அவரோடு சேர்த்து இரண்டு பேர் முத்தரையர்கள் வேலை பார்ப்பதாகவும், அவர் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் சக சமூகத்தை சேர்ந்த இருபதிற்க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்ப்பதாகவும், நம்மவர்களை வைத்துக்கொண்டே அவர்களுக்குள்ளாக நமது சமூகத்தை அவமதிக்கும் விதமாக பேசிக்கொள்வதாகவும், தங்களால் ஒன்றும் செய்யவோ, பதிலுரைக்கவோ முடியாமல் இருப்பதாகவும் சொன்னார், தம்பி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நமது தம்பிக்கு உதவுவதுதான் அந்த "உயர்ந்தவர்களின் (!?)" வேலையே...!!



அவருக்கு நான் அளித்த பதில் :



“ தம்பி நீங்கள் குறிப்பிடும் சமூகத்திற்க்கு என்று வரலாறே கிடையாது, அடுத்தவனின் வரலாற்றை திருடி தங்களுடையது என்பது அவர்கள் வழக்கம், மேலும் அவர்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்க்கு பெருமைகள் எதுவும் கிடையாது, அதனால் வழக்கமாக எவர் ஒருவர் பெருமைக்கொள்ளும், பொறாமை கொள்ளும் வரலாற்றினை கொண்டு இருக்கிறார்களோ அவர்களில் "தங்களின் சொந்த வரலாறை கூட" தெரிந்துக் கொள்ளாதவர்களின் முன்பு அவர்களை அவமானப்படுத்துவதாக நினைத்து தங்களிடம் அல்லது தன் சமூகம் எப்போதும் கொண்டிறாத பெருமைகளை சொல்லி நம்மவர்களை சிறுமைபடுத்தும் முயற்சியில் இறங்குவார்கள், அத்தகைய நேரங்களில் மிக மிக அற்பமான ஒரு பார்வையையும், அலட்சியமாக ஒரு புன்னகையையும் உதிர்த்துவிட்டு வாருங்கள், அந்த அற்பங்கள் புழுவைப்போல நெளிவதை காண முடியும்..” இதுதான் நான் தம்பியிடம் சொன்ன பதில்..



இன்னும் ஒன்றும் நான் அந்த தம்பியிடம் சொன்னேன், அவர்கள் இவ்வாறு பேசினாலும் ஒருபோதும் அவர்கள் சமூகத்தை கிண்டல் செய்ய கூடாது, இது அவர்களை மட்டுமல்ல வேறு எந்த சமூகமாக இருந்தாலும் அவர்களை அவமதிப்பது நமது சமூகத்திற்க்கு இழுக்கு என்றும் சொன்னேன், இதுதான் நமது குலப்பெருமை, பிறரை அவமானப்படுத்தி பெருமைக்கொள்ளும் அளவிற்க்கு அற்பமானது கிடையாது முத்தரையர் பரம்பரை அள்ளிக் கொடுத்ததால் தான் 1500 ஆண்டுகளுக்கு முன்பே நாலடியாரில் புகழப்பட்ட, பெருமிதப்படுத்தப்பட்ட ஒரே இனமாக "முத்தரையர்" இனம் இருக்கிறது.,



வெறும் 50 ஆண்டுகளுக்குள் வரலாறை வைத்துக்கொண்டு சிலரின் பிணத்தல்களை நாம் கண்டுக்கொள்ள வேண்டியதில்லை, அதே நேரம் நம் வரலாறை தேடி படியுங்கள் யாராவது சொல்லுவார்கள் என்று காத்திருக்காதீர்கள், வரலாறை படித்தால்தான் தேவையற்ற "தாழ்வு மனப்பான்மை" ஏற்படுவதை தவிர்க்க முடியும், அந்த குறிப்பிட்ட இனத்தவருக்கு நம்மைப் போலவே எந்த சமூகமெல்லாம் வளர்ந்து வருகிறதோ அவர்களை காணும்போது பொறாமை கொள்ளும் சுபாவம் எப்போதும் உண்டு. சமீபத்திய ஒரு ஆய்வு சொல்கிறது தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களில் அந்த சமூகத்தவர்தான் அதிகம் என்று.. அதாவது தன்னுடைய உண்மை உருவத்தினை மறைக்க இவர்கள் இடும் வெளி வேசத்திற்க்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மவர்கள் பலியாகி எதோ அவர்கள்தான் உயர்ந்தவர்கள் போல என்று நம்பிவிடுகின்றார்கள்



அதே நேரம் நேரடியாக இதுபோன்று சொல்வார்களேயானால் நாசூக்காக சொல்லி விடுங்கள் "அவர்களின் தொடக்க வரலாறு முதல் சமீபத்திய வரலாறு வரை" நமக்கு தெரியும் என்று, உண்மையிலேயே அவர்களுக்கு அவர்களின் வரலாறு தெரிந்திருக்குமானால் "வாயடைத்துப்போவார்கள்" பின்னர் வீண்வம்புக்கே வர மாட்டார்கள், அனாவசியமாக, நேரடியான வாக்குவாதமோ, வம்பு வழக்குகளோ தேவையற்றது அதிலும் சரிசமமான எண்ணிக்கையில் நம்மவர்கள் இல்லாத இடங்களில் நான் ஏற்கனவே சொன்னதுபோல அலட்சியமாக ஒரு புன்னைகை போதுமானது.



இது இந்த தம்பிக்கு சொன்ன பதிலாக இருந்தாலும், இதே காரணத்தால்தான் பெரும்பாண்மையான நம்மினத்தவர் "தாம் எந்த சாதியை" சேர்ந்தவன் என்று வெளியில் சொல்வது கிடையாது என்பது அறியக்கூடியதாக இருக்கிறது, அறிவை வளத்துக்கொள்ளுங்கள், அதிகமாக வரலாற்றினை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள், இன்னும் அடுத்த தலைமுறைக்கும் இனத்தின் பெருமையை எடுத்துச் செல்லுங்கள்



ஒரே ஒரு விசயம் போதும் நம்முடைய வரலாற்றினை அறிந்துக் கொள்ள இங்கு பெருமை பேசும் எந்த இனத்தவரிடமும் இந்த கேள்வியை கேளுங்கள், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு யார் நடத்துவது ? யார் காளைகளை அடக்குவது என்று தெரியுமா ? என்று கேளுங்கள்" நிச்சயமாக அவர்களிடம் பதில் இருக்காது, சில நேரம் உங்களுக்கே பதில் தெரிந்து இருக்காது தெரிந்துக்கொள்ளுங்கள் "பண்டைய தமிழனின் வீரத்தின் அடையாளமாக இன்றும் இருக்கும் ஒரே அடையாளமாம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டை நடத்துவது, காளைகளை அடக்குவதும் வீரக்குடியாம் முத்தரையர் குடிதான்" என்று பதிலுரையுங்கள்.



ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமையாகவோ, அடிபணியவோ, யாரையும் அடிமைபடுத்தவோ நினைக்காதீர்கள், குலப்பெருமையை தெரிந்துக் கொள்ளுங்கள்



என்றென்றும் முத்தரையர் என்ற உயர்குடி பிறப்பென்ற பெருமையுடன்..



உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்.

ஒருங்கிணைப்பாளர்,

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

முத்தரையர் வரலாற்றின் மறுபக்கம்...!! (உண்மையின் தரிசனம்)

வேட்டையசாமி துணை
மறைக்கப்பட்டசரித்திரம்...!                                                         அழிக்கப்பட்ட சரித்திரம்...!!
வரலாற்றின் மறுபக்கம்...!! (உண்மையின் தரிசனம்)

வாழ்க சோழ நாட்டு பல்லவ நாட்டு முத்தரையர்கள்
வெல்க சோழ நாட்டு வீர சோழ மூப்பர்களின் வீரம்
சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், முத்தரையர்கள் இந்த நான்கு மாமன்னர்களும் நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்களே
தமிழக வரலாற்றில் 40 க்கும் மேற்பட்ட போர்களை சந்தித்தவர்கள் முத்தரையர்கள் என்ற சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்களே...
மூப்பர் என்றால் மன்னர்களின் சேனை தலைவர்கள் என்று அர்த்தம்.
மூப்பனார் என்றால் பகவான் கந்தன் முருகனின் (வீரபாகு) சேனைத்தலைவர்கள் என்று அர்த்தம்
பதிமூன்று தலைமுறைகளாக சேர, சோழ, பாண்டிய, பல்லவ மாமன்னர்களை போரில் வென்று தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்கள் முத்தரையர்களே, 60 தலைமுறைகளாக பாளையகாரர்களாகவும் இருந்தவர்கள் முத்தரையர்கள்.
சோழ வம்சம் (தஞ்சாவூர்)
பாண்டிய வம்சம் (மதுரை)
பல்லவ வம்சம் (காஞ்சிபுரம்)
 நாயக்க வம்சம் (விஜய நகர பேரரசு)
எள்ளாலன் வம்சம் (ஈழ நாடு மணிபல்லவ தீவு (இலங்கை)
சிங்கள வம்சம் (அனுராதபுரம், கண்டி) (இலங்கை)
ஆற்க்காட்டு நவாப் கான்சாகிப்
ஜாக்சன் துரை (பிரிட்டன் தளபதி)
வெல்ஷ் துரை (பிரிட்டம் தளபதி)
மறவர் நாட்டு மாமன்னன் (மறவர் நாடு என்பது இப்போதைய சிவகங்கை) உடையத்தேவர், இத்தனை பேரிடமும் அமைச்சர்களாகவும், அரசியல் சதுரங்கவாதிகளாகவும் போர்படை தளபதிகளாகவும், சேனை தலைவர்களாகவும், சிப்பாய்களாகவும் இருந்தவர்கள் பல்லவ நாட்டு சோழ நாட்டு வீர சோழ மூப்பர்கள் என்ற முத்தரையர்கள்
12 ஆம் நூற்றாண்டில் மராட்டியர்களின் படையெடுப்பாலும், முஸ்லீம்களின் படையெடுப்பாலும் சோழ சாம்ராஜ்ஜியம், பல்லவ சாம்ராஜ்ஜியம் சிதறி போனது சோழர்கள், பல்லவர்கள் பாதிபேர் கொல்லப்பட்டும் மீதிபேர் அடிமைகளாகவும், பாதிபேர் காடுகளில் வேட்டையர்களாகவும் மீதிபேர் குறு நில மன்னர்களுக்கு அமைச்சர்களாகவும், தளபதிகளாகவும், சேனை தலைவர்களாகவும், சிப்பாய்களாகவும் வாழ்ந்த்தார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.

ராஜேந்திர சோழன் இலங்கை, அந்தமான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளின் மீது படையெடுத்த போது அப்போரில் பெரும்பாண்மையாக இருந்தவர்கள் முத்தரையர்கள் என்ற சோழ நாட்டு வீர சோழ மூப்பர் சமுதாய மக்களே..!

ஒரு மூப்பர் சமுதாயத்தை சேர்ந்தவன் போர்களத்தில் ஒரு யானையை அடக்கும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

சோழ நாட்டு வீட சோழ மூப்பர்கள் வீரம், விவேகம், முரட்டு குணம், போர்குணம் உடையவர்களாக இருந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.
மதுரைக்கு கிழக்கு, மேற்கு, தெற்காக வாழும் சோழ நாட்டு, பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்களின் வரலாற்று சரித்திரம் வருமாறு...

1772 - ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் நாட்டின் தலைமை அரசராக இருந்தவர் ஆற்காடு நவாப், அப்பொழுது தமிழ் நிலம் 27 பாளையங்களாக, 27 நாடுகளாக இருந்தது, 27 பாளையங்களுக்கும் பேரரசாக இருந்தவர் ஆற்காடு நவாப், அவருடைய போர்படையில் தலைமை தளபதியாக இருந்தவர் கான்சாஹிப் அவருடைய துணை தளபதியாக இருந்தவர்கள் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த கான்சாஹிப்பின் கையிலிருந்து "சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள்" என்ற பட்டமும், பட்டயமும் பெற்ற முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் பதினைந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முத்தரையர் சமுதாய மக்கள் கான்சாஹிப்பின் போர்படையில் அதாவது யானைபடை, குதிரைபடை, தரைபடை, வில் அம்பு படை, என்று எல்லா போர் படைகளிலும் இருந்தவர்கள் பல்லவ நாட்டு, சோழ நாட்டு வீர சோழ மூப்பர் என்ற "முத்தரையர்களே", காண்சாஹிப்பின் துணை தளபதியாக விளங்கிய முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் மூவருமே "வளரிகலை" கற்றவர்கள் அதாவது "போதிதர்மனுக்கு" இணை ஆனவர்கள் என்பது தமிழக மக்கள் அறியாத தகவல்.

1785 ஆம் ஆண்டு வாக்கில் ஆற்காடு நவாப் பிரிட்டிஷ்சாரிடம் வாங்கிய கடனை திருப்பித்தர முடியாமல் போனதால் ஆற்காடு நவாப்பின் பேரரசுக்கு உட்பட்டு இருந்த 27 பாளையக்காரர்களிடமும் (குறு நில மன்னர்கள்) வரி வசூலிக்கும் உரிமையையும், தன்னிடம் இருந்த போர்படை தளபதிகள் கான்சாஹிப், முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் உள்ளிட்டோருடன் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட படை பரிவாரங்களையும் ஆங்கிலேயருக்கே அளித்தார் ஆற்காடு நவாப், கான்சாஹிப், முத்தழகு மூப்பர், வீரணன் மூப்பர், ஆதியான் மூப்பர் ஆகியோர் ஆங்கிலேயருடன் இணைந்து வரி கொடுக்க மறுத்த பாளையக்காரர்களுடன் போர் புரியும் கட்டாயம் ஏற்பட்டது, போர்களத்தில் இந்த தளபதிகள் எதிர்கொண்ட பாளையக்காரர்கள் விபரம் வருமாறு.
1)   நெல்கட்டும் சேவல் பாளையக்காரர் (மன்னர்) புலித்தேவர் தளபதி ஒன்டிவீரன் இவர்களை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(i)        கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 6000
(ii)       பிரிட்டிஷ் சிப்பாய்கள் - 3000
(iii)       முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 4000

2)   மறவர் நாடு என்று அழைக்கப்பட்ட (சிவகங்கை சீமை) மகாராணியார் வீரமறத்தி வேலு நாச்சியார் அவரது தளபதிகள் சின்ன மருது, பெரிய மருது இவர்களை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(iv)       கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 5000
(v)       பிரிட்டிஷ் சிப்பாய்கள் - 2000
(vi)       முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 3500

3)   பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் (மன்னர்) வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைதுரை தளபதிகள் வெள்ளையத்தேவன் சுந்தரலிங்கம், தானாபதிபிள்ளை இவர்களை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(vii)      கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 4500
(viii)      பிரிட்டிஷ் சிப்பாய்கள் (ஜாக்சன் துரை தலைமையில்) - 3000
(ix)       முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 4000

4)   விருப்பாச்சி பாளையக்காரர் (மன்னர்) கோபால் நாயக்கர் இவரை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(x)       கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 3500
(xi)       பிரிட்டிஷ் சிப்பாய்கள் - 2000
(xii)      முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 1500

5)   மறவர் நாட்டை (சிவகங்கை சீமை) ஆண்ட வீரமறத்தி வேலு நாச்சியாரின் மறைவிற்க்கு பிறகு அவரின் வளர்ப்பு மகன் உடையத்தேவனுக்கு கிடைக்க வேண்டிய ராஜபட்டத்தை மருது பாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் ஆத்திரம் அடைந்த உடையத்தேவன் பிரிட்டிஷ்சாரின் உதவியை நாடி சின்ன மருது, பெரிய மருது பாண்டியர்களை எதிர்த்து போரிட்டார். மருது சகோதரர்களை வென்ற போரில் உடையத்தேவன்,  பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(xiii)      கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 2500
(xiv)      பிரிட்டிஷ் சிப்பாய்கள் (பிரிட்டிஷ் தளபதி வெல்ஸ் துரை தலைமையில்) - 4000
(xv)      முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 9000

6)   எட்டயபுரம் பாளையக்காரர் (மன்னர்) ஜெகவீரபாண்டிய நாயக்கர் அவரது போர்படைத் தளபதி அழகுமுத்துக்கோன் (யாதவ்) இவர்களை வென்ற போரில் பிரிட்டிஷ்சார், கான்சாஹிப் கூட்டுப் போர்படையில் இருந்த போர் வீரர்கள் (சிப்பாய்கள்) விபரம்
(xvi)      கான்சாஹிப்பின் முஸ்லீம் சிப்பாய்கள் - 6000
(xvii)     பிரிட்டிஷ் சிப்பாய்கள்  - 2500
(xviii)     முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் இவர்கள் தலைமையில் இருந்த முத்தரைய சிப்பாய்கள் – 4000
இத்தனை பாளையக்காரர்களையும் (மன்னர்களையும்), தளபதிகளையும் வெற்றி பெற்ற போரில் பெரும்பாண்மையாக இருந்தவர்கள் கான்சாஹிப்பின் முஸ்லீம் மக்களும், சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள் எனப்படும் முத்தரையர் சமுதாய மக்களே, இந்த எல்லா போர்முனையிலும் ஆங்கிலேயப்படை என்பது குறைவானதாகவே இருந்தது. இத்தனை பாளையக்காரர்களையும் (மன்னர்களையும்), தளபதிகளையும் போர்களத்தில் வென்ற பெருமையும், புகழும் கான்சாஹிப்பையும், சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்களாகிய முத்தழகு மூப்பர், ஆதியான் மூப்பர், வீரணன் மூப்பர் தலைமையில் இருந்த முத்தரையர்களையே சாரும். இதில் கான்சாஹிப் பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் அவர் ஒரு பச்சை தமிழன்
மேலே குறிப்பிட்ட எல்லா மன்னர்களின் பெயரிலும் இன்று ஒவ்வொரு சாதிய அமைப்புகள் உண்டு, இந்த எல்லா மன்னர்களும் நடந்த போர்களில் வெற்றி பெற்றார்களா ? தோல்வி அடைந்தார்களா ? என்பதை எல்லா சமூகங்களும் ஒரு முறை சிந்தித்துப் பார்க்கட்டும். தமிழனின் போர்களத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா, உள் நாட்டவர், வெளி நாட்டவர் என்ற பாகுபாடு கிடையாது, வெற்றியா..!!! தோல்வியா...!!! என்பதுதான் விசயம், இதுதான் தமிழனின் வீரம், இந்த போர்கள் எல்லாம் நடந்தது சேர, சோழ, பாண்டிய, பல்லவ பேரரசுகள் வீழ்ந்து சுமார் 450 ஆண்டுகளுக்கு பின் இத்தனை மன்னர்களையும், தளபதிகளையும் போர்களத்தில் வென்றவர்கள் முத்தரையர்கள், மொத்தத்தில் முத்தரையர் சமுதாய மக்கள் 1600 ஆண்டுகளுக்கு முன்னால் சேர, சோழ, பாண்டிய மண்களை வென்ற மூன்றுதரையர்களாகவும், வளை எறி வீச்சில் வல்லவர்களாகவும், நாட்டை ஆளுவதில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களாகவும் இருந்தார்கள் என்ற வரலாறு மறைக்கப்பட்டது

இப்படிக்கு
கான்சாஹிப்பின் துணை தளபதிகள்
முத்தழகு மூப்பர் (வீர சோழ மூப்பர்)
ஆதியான் மூப்பர் ( பல்லவ நாட்டு மூப்பர்)
வீரணன் மூப்பர் (பாண்டிய நாட்டு மூப்பர்)
 இவர்களின் எட்டாவது தலைமுறை வம்சாவளி பேரன்

ஆர். சிங்கராஜ், மலேசியா
தொலைபேசி : 0175676917

இத்தனை மாமன்னர்களையும், தளபதிகளையும் போர்களத்தில் வென்ற முத்தரையர்கள் புதைக்கப்பட்டார்களா ? விதைக்கப்பட்டார்களா ?

கான்சாஹிப், பிரிட்டிஷ்சார் கூட்டாக ஏற்படுத்திய போர்படை தளங்கள் இன்றும் உள்ளது அவையாவன.
வீர சோழன் சிவகங்கை மாவட்டம்
சோழவந்தான் புதூர் - தூத்துக்குடி மாவட்டம்
சோழங்குருனை ஆணையூர் - மதுரை மாவட்டம்

இன்னும் நூற்றுக்கணக்கான ஊர்கள் உள்ளது.
 





முத்தரையர் வரலாற்றின் மறுபக்கம்...!! (உண்மையின் தரிசனம்)