"தியாகி
இம்மானுவேல் சேகரன்" நினைவு நாள் இன்று
பரமக்குடியில் அன்சரிக்கப்பட்டது, கடந்த சில வருடங்களாக
சில விரும்பதாகாத சம்பவங்கள் நடந்ததினால் இந்த ஆண்டு பல
கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது, அதற்கேற்ப இன்று விழா சிறப்பாக
அமைதியாக நடந்து முடிந்துள்ளது, விழாவினை
அமைதியாக நடத்த ஒத்துழைத்த "தேவேந்திரகுல
வேளாளர்களுக்கும்", தமிழக அரசுக்கும், காவல்துறையினருக்கும்,
அரசு அலுவலர்களுக்கும், ஏனைய பொதுமக்களுக்கும் முத்தரையர் சமூகம் சார்பாக "இளம்
சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறது.
இதே போன்று
எதிர்வரும் "தேவர் ஜெயந்தியை" யும்
அமைதியாக நடத்திட முக்குலத்து மக்கள்
அரசுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும், இது
இந்த இரண்டு தலைவர்களுக்கும் செய்யும்
மரியாதை மட்டுமல்ல ஏனைய சமூகங்கள் பிரச்சனையின்றி
தங்கள் சமூக விழாக்களை நடத்திட
உதவும்.
நன்றியுடன்...
உங்கள்
சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம்
சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக