கேரளாவில் நடைபெறும்
சர்வதேச படவிழாவில், 4 இந்திய படங்கள் போட்டி
‘சூது கவ்வும்’ படமும் திரையிடப்படுகிறது
திருவனந்தபுரம், அக்.15-
கேரளாவில் நடைபெறும் சர்வதேச படவிழாவில்,
போட்டி பிரிவில் 4 இந்திய படங்கள் திரையிடப்படுகின்றன. ‘இன்றைய இந்திய சினிமா’
என்ற பிரிவில், ‘சூது கவ்வும்’ என்ற தமிழ் படம் திரையிடப்படுகிறது.
சர்வதேச படவிழா
18-வது சர்வதேச திரைப்படவிழா, கேரள மாநிலம்
திருவனந்தபுரத்தில் வருகிற டிசம்பர் மாதம் 6-ந்தேதி தொடங்கி, 13-ந்தேதி வரை 8
நாட்கள் நடக்கிறது. அதில், போட்டி பிரிவில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின்
அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் தயாரான படங்கள் கலந்துகொள்கின்றன.
கேப்சரிங் டாட் (ஜப்பான்), அர்பானி (இஸ்ரேல்),
தெர்சியா மற்றும் கிளப் சான்ட்விச் (மெக்சிகோ), எர்ராட்டா (அர்ஜென்டினா),
ஜொனதாஸ் பாரஸ்ட் (பிரேசில்), பர்விஸ் மற்றும் தாஜ் மகால் (ஈரான்), தி பாட்டில்
ஆப் டபாட்டோ (போர்ச்சுக்கல்), கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (கஜகஸ்தான்) ஆகிய 10 வெளிநாட்டு
படங்களும் அதில் அடங்கும்.
4 இந்திய படங்கள்
போட்டி பிரிவில் திரையிடுவதற்கு 2 மலையாள
படங்கள் உள்பட 4 இந்திய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மெகே தாக தாரா
(வங்காளம்), அஸ்து (மராட்டி), 101 சோடியங்கள் (மலையாளம்), களியச்சன் (மலையாளம்)
ஆகிய 4 படங்களே அவை.
‘இன்றைய இந்திய சினிமா’ என்ற பிரிவில், நளன்
குமாரசாமி இயக்கிய ‘சூது கவ்வும்’ (தமிழ்) உள்பட 6 படங்கள் திரையிடப்படுகின்றன.
‘இன்றைய மலையாள சினிமா’ என்ற பிரிவில்,
செலுலாய்ட், அன்னயும் ரெசூலும் உள்பட 7 மலையாள படங்கள் கலந்து கொள்கின்றன.
|
News Source : DINATHANTHI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக