செவ்வாய், 8 அக்டோபர், 2013

மாஜி அமைச்சர் நினைவஞ்சலி


ஆலங்குடி: ஆலங்குடி அருகே வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் ஆலங்குடி தொகுதியில் அ.தி.மு.க., வில் 3 முறை எம்.எல்.ஏ.,வாகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

மறைந்த வெங்கடாசலம் நினைவாக ஆண்டுதோறும் நினைவு அஞ்சலி நடக்கிறது. இந்த ஆண்டு வடகாடு பெரிய கடைவீதியிலிருந்து ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ., கு.ப.கிருஷ்ணன் தலைமையில் மவுன ஊர்வலமாக சென்று வெங்கடாசலம் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

நினைவு அஞ்சலி ஏற்பாடுகளை வெங்கடாசலம் மகன் ராஜபாண்டியன் செய்திருந்தார்.

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக