சனி, 5 அக்டோபர், 2013

மக்கள் மறுமலர்ச்சி மன்ற கல்வி பரிசளிப்பு, விருது வழங்கும் விழா....!!!










     கடந்த 02/10/2013  நாள் நடைபெற்ற கல்வி பரிசளிப்பு விழாவில் அமரர் தியாகி பாதரப்பேட்டை வி முத்தையா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது, நமது இனத்திற்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியதில் அவருக்கு பெரும் பங்குண்டு, அவர் சார்பாக அவரது மருமகள் விருதினைப் பெற்றுக்கொண்டார், சூது கவ்வும் திரைப்பட இயக்குனர் திரு.நலனுடைய தந்தை ஆடிட்டர் திரு.குமாரசாமி அவர்கள் விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்.

     புதுகை புலவர் பு.சி. தமிழரசன்அய்யா அவர்களுக்கு "இனப்பணி ஏந்தல்" எனும் விருது அவரது பன்முகப் பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்டது, இவ்விருதினை முன்னாள் வனத்துறை அமைச்சர் பொறிஞர் .செல்வராஜ் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள், "முது பெரும் முத்தரையர் சான்றோர் விருது" விடுதலை போராட்ட வீரர் தீவிர காந்தியவாதி திரு.காந்தி பித்தன் அவர்களுக்கு வழங்கப்பெற்றது, இவ்விருதினை முன்னாள் தொட்டியம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் திரு.ராஜசேகரன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார், மகளிருக்கு சுயதொழில்பயிற்சி அரசு மான்யத்துடன் இலவசமாக அளித்து வரும் நாமக்கல் ரீப் அறக்கட்டளையின் முதல்வர் திருமதி சுபத்ரா ஸ்ரீதர் அவார்களின் சீரியப்பணிகளைப்பாராட்டி "முத்தரையர் மாதரசி" எனும் விருது வழங்கப்பட்டது, அம்மையார் உடல் நலமின்மையால் அவர் சார்பில் அவரது தந்தை திரு டி.ஆர்.செல்வராஜ் அவர்கள் அவ்விருதினைப் பெற்றுகொண்டார்.

      தென்மண்டல ஜூனியர் சாம்பியனாக தேர்வு பெற்றுள்ள மாணவர் செல்வன் .அருண் மோதி அவார்களுக்கு "மலரும் சாதனையாளர்" எனும் விருது வழங்கப்பட்டது,  இவ்விருதினை சேலம் முத்தரையர் நலச்சங்கத்தின் தலைவர் திரு இளையபெருமாள் அவர்கள் வழங்கி நம் இளவலை வாழ்த்தினார், கல்வி பரிசளிப்பு விழாவினில் விருதுகளை வழங்கி நம் இனத்திலுள்ள சான்றோர்களை சாதனையாளர்களை பரிசுபெறும் மாணவர்களுக்கு காட்சியாக்கி அவர்களை ஊக்குவித்தது மக்கள் மறுமலர்ச்சி மன்றம்.
     
           மேலும் இவ்வாண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற நம் சொந்தங்களுக்கு மக்கள் மறுமலர்ச்சி மன்றம் பாராட்டு செய்து மகிழ்ந்தது, தலைமை ஆசிரியர் நாச்சி அவர்களும், தலைமை ஆசிரியர் செல்வன் அவர்களும் வந்திருந்தனர் அவர்களை மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளையின் செலாளர் ஆசிரியர் .மாரிமுத்து அவர்கள் பாராட்டிதழ் வாசித்து பெருமை படுத்தினார். நாலடியாரில் நம் இனப்பெருமை கூறும் இரு பாடல்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரொக்க பரிசளித்து மகிழ்ந்தார் ஆசிரியர் சோழங்கநல்லூர் முருகேசன் அவர்கள் 17 மாணவர்கள் சிறப்பக ஒப்புவித்து அப்பரிசினைபெற்றனர் .இரண்டு மாணவர்களுக்கு தலா ரூபாய் மூவாயிரம் கல்வி நிதி உதவியாயக வழங்கப்பட்டது .பிற செய்திகள் பின்னர் அளிப்பேன் நன்றி

- டாக்டர் பெரியசாமி லோக நாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக