வெள்ளி, 15 நவம்பர், 2013

மலைக்க வைத்த மதுரை உறவுகள்...!!!

மலைக்க வைத்த மதுரை உறவுகள்...!!!

      வீரத்திலும், ரோசத்திலும் மாத்திரமல்ல... பாசத்திலும், உபசரிப்பிலும் முரட்டுதனமானவர்கள் என் வீர குல வலையர் பட்டம் கொண்ட மதுரை மாவட்ட முத்தரையர் சிங்கங்கள்..!!!
    கடந்த (03/11/2013) காலையில் பட்டுக்கோட்டையில் இருந்து நண்பர்கள் காந்தி, தேவா, குமரவேல், சுரேந்திரன், மோகன்தாஸ், ஸ்ரீதர், மணிகண்டன், பிரதிப், கோபு, கார்திக், துரை.ராஜகுமரன், மற்றும் நான் (சஞ்சய்காந்தி அம்பலகாரர்) உட்பட அனைவரும் வடகாடு மண்ணின் மைந்தன் வீர முத்தரையர் அண்ணன் அருளின் வாகன ஏற்பாட்டில் மதுரையை நோக்கிய பயணத்தினை மேற்கொண்டோம்,

       வீரத்தின் அடையாளமாம் எங்கள் குல கொழுந்து முன்னாள் தமிழக அமைச்சர் ஆலங்குடி ஏ.வெங்கடாசலம் சேர்வை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு பயணத்தை தொடங்கினோம்,













      புதுக்கோட்டை தொடக்கத்திலேயே சகோதரர் ஹரிபாலாவை சந்தித்து உரையாடிவிட்டு பயணத்தை தொடர்ந்தோம், சிவகங்கை மாவட்ட எல்லையில் திருப்பத்தூரை அடுத்த எஸ்.எஸ்.கோட்டையில் அன்பு சகோதர் முருகேசன் ஏற்பாட்டில் முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணன் அழகர்சாமி (சருகுவலையப்பட்டி. மதுரை) தலைமையில், எஸ்.எஸ்.கோட்டை முத்தரையர்கள் ஆண் - பெண் என பெரும்திரளாக திரண்டிருந்து மிகப்பெரிய வரவேற்பினை தந்தார்கள்



     












சாதாரணமான ஒரு பயணத்தில் கூட நாங்கள் முத்தரையர்கள் வருகிறோம் என்ற ஒரு வார்த்தைக்காக எங்கள் தகுதிக்கு மீறிய வரவேற்பினை தந்து அவர்களின் அன்பில் எங்களை திணரவைத்துவிட்டார்கள் என்றால் மிகையாகாது

எஸ்.எஸ்.கோட்டை முத்தரையர்களின் அன்பில் திணறி பயணம் தொடர்ந்தது அங்கிருந்து நம்மோடு இணைந்துக் கொண்ட திரு.முருகேஷ் கடைசிவரை நம் பயணத்தில் வந்து உபசரித்து என்றென்றும் நம்மை அவரின் அன்பிற்க்கு அடிமையாக்கி அனுப்பிவைத்தார்,



     
மேலூரில் இன உணர்வாளர் அரசு ஊழியர் திரு. அழகுராஜாவை சந்தித்தபிறகு பயணம் வேகமெடுத்து மதுரை மாநகரில் கத்திருந்த இன உணர்வாளர் திரு.திருச்சி முத்தரையர் மகாராஜாவையும் எங்களோடு இணைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு புகழ் "அலங்காநல்லூருக்குள்" நுழைந்தோம் அங்கு நம் வருகைக்காக காத்திருந்த அன்பு உறவுகள் திரு.மகேஷ் முத்தரையர், திரு. தீபக் மூப்பனார் (எ) சுப்ரமணி, திரு. தங்கம் முத்தரையர், திரு. முத்துராஜா, திரு.ஏ.கே.கபிலன் ஆகியோரின் வழி நடத்தலில் முதலில் வீரத்தின் முகவரி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலை கண்டபோது எனது வீரக்குடியின் பெருமை நம்மையும் அறியாமல் நமக்கு சிறிது தலைகணத்தை ஏற்படுத்தியது என்றால் அதில் மிகை இல்லை..!!





   அங்கிருந்து புறப்பட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை பார்வையிட்டு அதே ஊரில் அமைக்கப்பட்டுள்ள "முத்தரையர் சமுதாயக் கூடத்தில்" நம் மக்கள் அளித்த வரவேற்பினை ஏற்றுக் கொண்டு பயணம் சாரந்தாங்கியை நோக்கி சென்றது,











    அங்கே நம்மை வரவேற்ற நம் மக்களின் பாதுகாவலனாய், தொடர்ந்து நான்கு முறை ஊராட்சி மன்ற தலைவராகவும், எதிர்காலத்தில் மதுரை(அ)திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சட்டமன்றம் செல்லவிருக்கும் அண்ணன் திரு.முத்தையன், 
















 ஒன்றிய கவுன்சிலர் திரு. அய்யங்காளை, மற்றும் சாரந்தாங்கி உறவுகளின் மிரட்டலான வரவேற்பினை பெற்றுக் கொண்டு அங்கே கம்பீரமாய் நிற்க்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மரியாதை செலுத்திய பிறகு அன்பு சகோதரர் திரு. ஏ.கே.கபிலன் மற்றும் மகேஸ் மற்றும் நண்பர்கள் மதுரை பயணத்தின் நினைவாக அளித்த "சிங்கத்தினை" பெற்றுக் கொண்டு அந்த மண்ணை பிரிய மணமில்லாமல் திரும்பும் போது சகோதரர் தீபக் மூப்பனார் (எ) சுப்ரமணி அவர்கள் சிறிய விபத்தில் சிக்கி காயமடைந்தது மிகுந்த வேதனையை அளித்தது,

     காயமடைந்தும் மதுரைக்கே உரிய முரட்டு பிடிவாதத்தோடு எங்களை வழியனுப்ப வந்தே தீருவேன் என்று வந்த அந்த சகோதரருக்கு என்றென்றும் நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம், கடைசிவரை பயணத்தில் கலந்து கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் எங்களை உபசரித்து வழியனுப்பிய அன்பு சகோதரர் மகேஸ், முருகேசன், தங்கம் ஆகியோருக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்


என்றும் நன்றியுடன்....
சஞ்சய்காந்தி அம்பலகாரர்
ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

5 கருத்துகள்:

  1. i feel lot of times, i can't create awareness about my community rights to my community people because my work nature, but you successfully done that through this site i feel very proud of you please refer our community rights to all and inform to be unity.flex banners,posters,dialogues was not a proof for our unity but prove our strength in politics to do that improve our educational knowledge ,encourage our lions to record in various field and please don't fight with in our community organizations(this is information kindly to our respected leaders)...thank you
    again i proud of you brother sanjai gandhi

    பதிலளிநீக்கு
  2. என் அன்பு உறவுகளுக்கு வணக்கம்...

    உங்கள் இந்த எழுச்சி பயணம் தொடர என் வாழ்த்துக்கள் ..

    இதுபோன்ற நிகழ்வுகளில் என்னையும் இணைத்துககுகொள்ள விரும்புகிறேன்..

    நமது உறவுகள் சம்மந்தப்பட்ட நிகவுகள் நடந்தால் என் அழைபேசியில்

    தொடர்பு கொள்ளவும்...

    விருப்பதுடன்

    நத்தம் ராஜா .......

    9626077486

    பதிலளிநீக்கு