வரலாற்று திரிபுகளில் கலைஞர் கருணாநிதியின் "தென்பாண்டி சிங்கம்"
சோழ வள நாட்டில் தஞ்சையை தலைநகராக்கி ஆண்ட வீரகுடியாம் முத்தரையர் குடியில் தோன்றிய "அம்பலகாரர்" என்ற இனம் நீண்ட நெடுங்காலமாக சோழ நாட்டில் வாழ்ந்து வருவது யாவரும் அறிந்ததுதான், ஆனால் தமிழகத்தில் நீண்டகாலம் முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஒரு வரலாற்று திரிபுகளால் நிரப்பிய ஒரு புதினத்தை 1983 ஆம் ஆண்டு "தென்பாண்டி சிங்கம்" என்ற பெயரில் எழுதி இருக்கிறார் அதில்
" பல ஊர்களை இணைத்து ஒரு நாடாகி அந்த நாட்டுக்கு ஒரு ஆற்றல் மிக்க தலைவன் "அம்பலக்காரர்" என்ற பெயரால் அழைக்கப்பட்டு அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு மக்கள் வாழ்ந்திடுவர்.
அம்பலக்காரர் என்பது ஒரு வகுப்பாரைக் குறிக்கும் சொல்லாகச் சில நேரங்களில் பயன்படுத்தப்பட்டாலும் கூட " (பக்கம் – 2)
இந்த இடத்தில்தான் தனது தில்லுமுல்லு அரசியலை நுழைக்கிறார், இன்று ஈழ
மக்களை துரோகத்தால் கொன்றொழித்ததாக சொல்லப்படும் கருணாநிதி ஒரு
இனத்திற்க்கு தொடர்ந்து செய்துவரும் துரோகம் இங்கு யாராலும் கண்டுக்
கொள்ளப்படுவதில்லை, இதுவரை இவர் எழுதிய ஏராளமான சோழ வரலாறுகளில் ஒருபோதும்
"முத்தரையர்” இனம் பற்றியோ, அதன் பெருமைப் பற்றியோ மறந்தும்கூட எழுதாமல்
அரசியல் ரீதியாக அந்த இனம் எந்த பலனையும் அடையவிடாமல் தொடர்ந்து தனது
துரோகத்தை பதிவு செய்துவருகிறார்,
இதனுடைய உச்சமாக கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டிற்க்கு முன்பாக
தஞ்சைப்பகுதியில் கிடைத்த ஒரு செப்பேட்டை ஆதாராமாக்கி "பிற்கால சோழர்களின்
முதல் அரசன் விஜயாலயசோழன் முத்தரையர்களிடமிருந்து அல்ல
பல்லவர்களிடமிருந்துதான் தஞ்சையை கைப்பற்றினான்" என்று போகிற போக்கில் ஒரு
வரலாறையே மாற்றிவிட நினைக்கிறாரே தவிர இதனை ஆராய்ச்சிபூர்வமாக அறிய அவர்
ஒருபோதும் முயன்றது இல்லை...
இந்த புதினத்திலும் மேலே சொல்வதை கவனியுங்கள் "சில நேரங்களில் பயன்படுத்தப்பட்டாலும் கூட"
என்ன ஒரு விசமம் ? ஏன் சில நேரங்களில் ? மீதி நேரங்களில் என்னவானது ?
முழுமையாக ஒரு இனக்குழுவாக வாழ்ந்துவரும் இந்த மக்கள் ஏன் "அம்பலக்காரர்"
என்று அழைக்கப்படுகின்றனர் ? இதன் பிண்ணனி என்ன ? இதுக்குறித்து தான்
எழுதியதோ, ஆராய்ந்ததோ உண்டா ? என்ன நோக்கத்தில் "சில நேரங்களில்"
என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டது ? இதே கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது
முத்தரையர் சமூகத்தின் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் சுமார் 20 -25
வருடங்களுக்கு முன்பு சட்டசபையில் பேசும்போது "முத்தரையர்கள் நாங்கள் ஒரு கோடி பேர் தமிழகத்தில் இருக்கிறோம்" என்று சொல்ல, எந்த இனமும் சகித்துக்கொள்ளாத ரீதியில் கிண்டலாக "ஒரு கோடியா ? ஒரு கோடியிலா?" என்று சொன்னவர்தான் இந்த கருணாநிதி.
முத்தரையர் இனம் வாழ்க்கைத்தரத்தில், பொருளாதாரத்தில், கல்வியில் பின் தங்கியதற்க்கு முழுமுதல் காரணங்களில் இவரும் ஒருவர், இதுவரை சட்டசபையில் வன்னியர்களுக்கு, முக்குலத்தவருக்கு, தலித்களுக்கு, கொங்கு வேளாளர்களுக்கு என்று தமிழகத்தில் இருக்கும் அத்தனை சாதிகளுக்கும் தான் இன்னனென்ன செய்ததாக பட்டியலிடுள்ள கருணாநிதி "முத்தரையர்களைப்" பற்றி மட்டும் எதுவுமே சொன்னது கிடையாது, காரணம் அவர் எதுவும் செய்ததும் கிடையாது..!
அய்யோ பாவம் கருணாநிதி...!!
இந்த புதினத்திலும்.. ஒரு பெரும்போர் பட்டமங்களத்துக்கும், பாகனேரிக்கும் நடந்து கொண்டு இருக்கிறது, உறங்காப்புலி எனும் வீரனின் கை துண்டிக்கப்படுகிறது, அன்றிரவு அவன் மயங்கி ஓய்வில் இருக்கும்போது அவனுடைய மனைவியும் உடன் இருக்கிறாள், மயக்கம் தெளிந்து எழுந்த உறங்காப்புலி யாரையோ எதிர்பார்த்திருந்தான், கைவிரலை சொடுக்கினான்....? என்று வருகிறது கையே துண்டிக்கப்பட்டவன் எப்படி கைவிரலை சொடுக்கி இருக்க முடியும்...?? இப்படிதானே இருக்க முடியும் இவர் எழுதிய எல்லா புதினங்களும் ? இந்த எழுத்தை ஆதாரமாக்கி இதனை ஒரு வரலாறாக எடுத்துக்கொள்ள "கள்ளர்" சமூகம் முயலாது என்று நம்புவோம்.
இதில்
சில கள்ளர் குலத்தின் தலைமைப் பதவியான "அம்பலக்காரர்கள்" பற்றி உயர்வாக
சொன்னாலும், (கவனிக்க : இது கள்ளர்கள் உள்ளிட்ட முக்குலத்தோருக்கும்,
வல்லம்பர்களுக்கும் பதவி மட்டும்தான், அவர்களின் சாதி அல்ல...!) பொதுவான
கருத்தோற்றம் புதுக்கோட்டை தொண்டைமான் (இவரும் கள்ளர்தான்) உள்ளிட்ட
பெரும்பாலானவர்களை இவர் துரோகி என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்,
அதுமட்டுமல்லாமல் கள்ளர் நாடுகள் அனைத்துமே எதோ " நாயக்கர்களுக்கு"
அடிபணிந்து இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார் அதாவது அவரின்
(கருணாநிதியின்) இனப்பாசம்.. (!?) இதில் ஒட்டுமொத்தமாக கள்ளர் குலத்தை
விவேகமற்ற வீரர்கள் என்று சாடைமாடையாக சொல்லி இருக்கிறார் எனக்கு தெரிந்து
எந்த கள்ளர் குல அறிஞர்களும் இதனை மறுத்ததாக தெரியவில்லை மாறாக இதனை
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதுபோல தெரிகிறது.. ! எல்லா முக்குலத்தவரும்
தீரத்துடன் ஆங்கிலயோரை எதிர்த்ததாகதான் நான் நினைத்துக்கொண்டுள்ளேன்.
சரி இது வேறு ஒரு இனம் தொடர்பானது இதில் நாம் கருத்துச் சொல்வது அவ்வளவு நல்லதல்ல...
ஆனால்
இதில் அவசியமே இல்லாமல் ஒரு இனத்தை முத்தரையர்களை) பற்றி எழுத வேண்டியதன்
அவசியத்தைதான் நாம் அதே இனத்தை சார்ந்தவன் என்ற முறையில் கேள்வி
கேட்கவேண்டி இருக்கிறது, இனியும் துரோகங்கள் பொருத்துக்கொள்ள முடியாது, அரசியல் ரீதியான வஞ்சகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது..! இன்னும் ஏமாற எம்மக்கள் தயாரில்லை...!!
- சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக