பலிக்கு பலி...!
தமிழகத்தை சமீபத்தில் பதற வைத்த மதுரை படுகொலையை சக சமூகமாக இருந்து கண்டும் காணாமலும் போக நம்மால் முடியவில்லை..! பலிக்கு பலியாக தொடரும் இந்த வன்முறை சரியானதுதானா... ? இதனால் இந்த இரு சமூகங்களும் பெற்ற பயன்கள் என்று எதுவும் உண்டா.. ? ஒரு தரப்பு தவறு செய்தது, பதிலுக்கு மற்றொரு தரப்பும் தவறு செய்தது, தவறுக்கு தவறுதான் தீர்வா.. ? இது வழக்கம்போல ஒரு கொலையாக இருந்தால் இவ்வளவு அச்சம் இருக்காது, இதில் சாதி என்னும் இருவேறு இனக்குழுக்களின் பங்களிப்பு இருப்பதால் நமக்கு பதற்றமாக் இருக்கிறது, இது தொடர்கதை ஆனால்... ? இரு தரப்பிலுமே அரசியல் ஆதாயத்திற்க்காக யாரோ சிலர் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வெறும் 20 ம் 25 வயதும் உள்ள இளம் இரத்தங்கள் வெட்டி சாகின்றன..
கொலையை ஆதரிக்கும், தூண்டிவிடும் முதலைகள் எங்கோ ஒழிந்துக் கொள்கின்றன
இருவர் தரப்பிலுமே தவறுகள் இருக்கிறது, இது தீர்ப்பு சொல்லும் நேரம்
கிடையாது, தீர்வு காண வேண்டிய நேரம் இரண்டு தரப்பிலும் இருக்கும் அரசியல்
சாராத, இனத்தின்பால் உண்மையான அக்கறையுடைய சமூகப் பெரியவர்கள் கூடி பேசி
தீர்வுகாண முயல வேண்டும் இல்லாத பட்சத்தில் ஏற்கனவே சாதியை குறை கூறுவதை
மட்டும் தொழிலாக கொண்ட "சமூக ஆர்வலர்கள்" இதனை ஒரு பிரச்சாரமாக
முன்னெடுக்கும் வாய்ப்புகள் அதிகம், அதனால் பாதிக்கப்படுவது எல்லா
சமூகங்களிலும் அதனதன் உரிமைக்காக உண்மையாக போராடி வருபவர்கள்தான், அந்த போராட்டங்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும்,
ஆகவே நடந்தது நடந்துவிட்டது இதனை மேலும் வளர்க்காமல் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
எந்த சமூகமும் மதிக்கப்படுவது கொலைகளால் அல்ல அந்த சமூகம் பெரும் கல்வி, செய்யும் சாதனை, மற்றவரை மதிக்கும் பாங்கு இவற்றால்தான் ஆகவே இந்த பிரச்சனைக்கு பேசி தீர்வுகண்டு நம் தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ள பல சிக்கல்களையும் களைய எல்லா சமூகங்களும் இணைந்து பணியாற்ற முன் வரவேண்டும்
அரசாங்கத்தை பொருத்தவரை நீ செத்தாலும் 5 லட்சம் அவன் செத்தாலும் 5 லட்சம்
அவ்வளவுதான், இங்கே உயிரின், இன மானத்தின் விலையும் வெறும் 5 லட்சம்தான்
திராவிடர்களில்
யார் ஆண்டாலும் பிரச்சனையை தீர்க்க ஒருபோதும் அவர்களை முன்வரப் போவதில்லை
அவர்களுக்கு தேவையே நமக்குள் அடித்துக்கொண்டு சாக வேண்டும் என்பதை தாண்டி
எதுவும் கிடையாது ஆகவே அரசாங்கம் இந்த பிரச்சனையை தீர்க்கும் என்று பகல்
கனவு காணாமல் நமக்குள்ளாகவே பிரச்சனையை தீர்க்க அனைவரும் முன் வர வேண்டும்
இது இந்த இரண்டு சமூகங்களுக்கு மட்டுமான கருத்தல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா
இனங்களுக்கும் பொதுவானதாகவே இதனை சொல்கிறோம்
அடித்துக்கொண்டு சாவதை விட்டு.. விட்டுக்கொடுத்து வாழ முயற்சிக்குமா தமிழ் சமூகம்.... ?
ஆதங்கத்துடனும், வருத்ததுடனும்
சஞ்சய்காந்தி அம்பலகாரர்
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக