முதல் வெற்றி...!!
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் முதன்முதலாக தஞ்சாவூர் நாடாளுமன்ற
தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து அதிரடியாக களம் இறங்கியது நண்பர்கள் அறிந்ததுதான்,
இதுவரை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுப்போடுவதை தவிர வேறு எந்த முன்னெடுப்புக்களையும்
செய்யாத "முத்தரையர்” சமூதாயத்திற்க்கு அரசியல்
விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுதான் “இளம் சிங்கங்களின்
எழுச்சி இயக்கத்தின்” பிரதான நோக்கம், அடுத்ததாக
அரசியல்கட்சிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பதும் நமது நோக்கமாக இருந்தது, இந்த விவரங்களையெல்லாம்
நாம் வேட்பாளரை அறிவித்தபோதே தெளிவாக அறிவித்துவிட்டோம்.
இந்த நிலையில்
நம்முடைய முதல் வெற்றியாக இதுவரை இந்த தொகுதின் முக்கியத்துவத்தை அறியாமல், அல்லது
கண்டும் காணாமலும் இருந்த நம்முடைய சங்கங்களில் இரண்டு பிரதான சங்கங்கள் சார்பில் பட்டுக்கோட்டை
பகுதியில் இருந்து ஒருவரும், பேராவூரணி பகுதியில் இருந்து முக்கியமான ஒருவரும், வேட்பாளர்களாக
நிறுத்தப்படுவதற்க்கான வாய்ப்புகளும், அதேபோல நம்முடைய
சமுதாயத்தை இலக்காக கொண்டு இயங்கும் இரண்டு அரசியல் கட்சிகளின் சார்பில் மன்னார்குடி
பகுதியிலிருந்து ஒருவரும், ஒரத்தநாடு பகுதியிலிருந்து ஒருவரும் வேட்பாளராக்கப்படும்
வாய்ப்புகளும், அதே போல கடந்த சில தேர்தல் களங்களில் போதிய பிரச்சாரமோ, அறிமுகமோ இல்லாமல்
போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும், இவையெல்லாவற்றிற்க்கும் மேலாக அடுத்து மத்தியில்
ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ள ஒரு தேசிய கட்சியின் சார்பில் ஒருவர் வேட்பாளராக்கப்படக்கூடும்
என்ற பலத்த எதிர்பார்ப்பும் உண்டு, இவர்களெல்லாம் போட்டியிடுவதற்க்கான ஆயத்தத்தில்
ஈடுபட்டிருப்பது பொதுப்பார்வையில் நமக்கு வருத்தத்தை தந்திருக்க வேண்டும், ஆனால் இது,
இந்த விழிப்புணர்வு நமக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது, இதைதான், இந்த விழிப்புணர்வைதான்
நம்முடைய பிரதான நோக்கமாக கொண்டிருந்தோம், அதன் முதல்கட்டத்தில் நாம் வெற்றியடைந்திருக்கிறோம்.
அதே நேரத்தில்
வழக்கமாக தேர்தல்காலங்களில் இதுபோல பரபரப்பிற்க்காகவோ, ஆதாயம் அடையும் நோக்கத்திற்க்காகவோ
நம்மில் சிலர் இதுபோல அறிவிப்பது நாம் அறிந்ததுதான், அதனால் இந்த விழிப்புணர்வினை வரவேற்க்கும்
அதே நேரம், இந்த விழிப்புணர்வினை யாரும் ஆதாயத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ளக் கூடாது
என்பதால் நாமும் களத்திலேயே இருக்கிறோம், இப்போது நம்முடைய வேட்பாளரை தவிர்த்து போட்டியிடக்கூடும்
என் எதிர்பார்க்கப்படும் ஐந்து அல்லது ஆறு வேட்பாளர்களில் யாரெல்லாம் கடைசிவரை போட்டியில்
இருக்கிறார்கள், யாரெல்லாம் உண்மையான சமூக அக்கறையில் போட்டியிடுகிறார்கள், என்று முழுமையான
கண்காணிப்பின் இறுதியில் நமக்கு திருப்திதரும் வகையில் போட்டியில் உறுதியாக இருப்பவர்
யார் என்பதை கவனித்து அவசியம் ஏற்படுமேயானால் நம்முடைய வேட்பாளரை விலக்கி கொண்டு நம்முடைய
ஆதரவினை தர நாம் தயாராக இருக்கிறோம், அதேபோல எந்த அரசியல் கட்சியும் வேட்பாளரை அறிவிக்குமானால்
நிபந்தனையின்றி நாம் போட்டியிலிருந்து விலகிவிடுவோம்.
இது தவிர்த்து
வேறு எந்த அச்சுறுத்தல்களுக்கோ, அல்லது இனத்தை அடகு வைத்துவிட்டோ நாம் போட்டியிலிருந்து
விலகப்போவதில்லை என்பதை உறுதியோடு அறிவித்துக்கொள்கிறோம்.
முத்தரையர் ஓட்டு முத்தரையருக்கே...
அன்புடன்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி
இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக