முத்தரையர்களின் அரசியல் களம்
உறவுகள் அனைவருக்கும் எனது
பணிவான வணக்கங்கள்,
அரசியல்…
இது என் இனம் இன்று வீழ்ந்துகிடக்கும்
ஒரு களமாக இருக்கிறது, எப்படி வீழ்ந்துபோனோம்..? நமக்கு அரசியல் புரியவில்லையா..? என்று
கேட்டால்… சற்று நம்முடைய பழைய வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்
ஏறக்குறைய களப்பிரர்கள்
எனும் முத்தரையர்களாகிய நம்முடைய ஆட்சி நடந்த
காலகட்டத்திற்க்கு முன்பாக வடக்கே சந்திரகுப்தனின் மெளரிய பேரரசு இருந்ததை நீங்கள்
அறிவீர்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் தொடங்கி வங்காளம் வரை பரவி இருந்த சந்திரகுப்தனின்
மெளரிய பேரரசு சந்திரகுப்தனால் உருவானதல்ல, சாணக்கியனால் உருவானது, கடைசிவரை சாணக்கியன்
தன்னை அதிகாரத்தோடு பொருத்திக்கொள்ளவில்லை அதே போன்றுதான் நம்முடைய மூதாதையர் மூன்று
நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணை ஆண்டபோதும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
இந்த மண்ணை ஆட்சி செய்தார்கள், எந்த குழப்பமும் இல்லாமலே, அதனால்தான் இன்று வரலாறு
எழுத முயன்ற சிலர் இதனை வாய்ப்பாக கொண்டு வரலாற்றை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்,
இப்படி சந்திரகுப்தனுக்கு சற்றும்குறையாத ஆட்சியை, சாணக்கியனுக்கு ஈடான அறிவோடு ஒரு
பேரரசை உருவாக்கிய முத்தரையர்கள் நாம் இன்று அரசியல் அறியாமல் இருப்பது யாருடைய தவறு..?
உறவுகளே நாம் அரசியலில்
ஓராயிரம் வாய்ப்புகளையும், உரிமைகளையும் இழந்துவிட்டு நிற்க்கிறோம், இது யாரோ நமக்கு
செய்த தூரோகம் என்பதைவிட நம்முடைய அறியாமை என்றும் சொல்லலாம், வாய்புள்ள, உரிமையுள்ள
எதையும் கேட்டுப்பெறக்கூடிய சாதாரண அரசியல் அறிவை கூட நாம் பெறவில்லை என்பதை நம்முடைய
சக சமூகங்களின் அரசியல் வளர்ச்சி நமக்கு சுட்டிக்காட்டுகிறது, ஆனால் மனது அந்த கருத்தை
உள்வாங்கிக் கொள்ள மறுக்கிறது, எது அரசியல்..? எப்படியான முன்னெடுப்புகள் தேவை ? என்ற
எந்த திட்டமிடலும் நம்மிடமில்லை, அதே நேரம் நம்மைப்போன்ற சாமர்த்தியசாலிகள் உலகத்திலேயே
இல்லை என்றும் சொல்ல முடியும்...
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா..?
உண்மைதான் உறவுகளே நாம்
எதை செய்யவேண்டுமோ அதை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை, அதே நேரம் நம்முடைய கடமையை,
நாம் செய்திருக்க வேண்டியதை யாரேனும் செய்ய முனைந்தாலோ, முதலில் அவரை நாம் தனிமைப்படுத்துவோம்,
அவருக்கு எதிரானவரோடு இணைந்து செயல்படுவோம், அவரைப்பற்றிய அவதூரைப் பரப்புவோம்
உறவுகளே நீங்கள் யார் வேண்டுமானாலும்
எந்த அரசியல் கட்சிகளிலும் இருங்கள், ஆனால் குறைந்தபட்சம் ஒரு ஒன்றிய பொருப்பு, முடிந்தால்
ஒரு மாவட்ட பொருப்பு, திறமையிருந்தால் மாநில பொருப்பு என்று இருங்கள், இது எதுவும்
முடியாது என்பவர்களுக்கு எங்களது பணிவான வேண்டுகோள் உங்களுக்கு அரசியல் வேண்டாம்...
குடும்பம், பிள்ளைகள், சொந்து, வேலை என்று உங்கள் நேரத்தை செலவிட்டு சந்தோசமாக வாழுங்கள்,
இதே நமது சாதியில் பிறந்து யாரேனும் நாம் சொன்ன எதேனும் ஒரு பதவியில், பொருப்பில் இருப்பார்கள்
அவர் நல்லவரா..? கொட்டவரா..? என்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டு அவரை ஆதரியுங்கள்,
1300 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாண்ட வம்சம் இன்று அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இன்று கையெறு
நிலையில் நிற்பதற்க்கு யார் காரணம்..? நீங்கள் எல்லோருமே செய்தித்தாள்களை தினமும் பார்த்திருப்பீர்கள்,
தினசரி பல நாளேடுகளிலும் நாடாளுமன்ற தொகுதி நிலவரம்
என்று பரபரப்பாக எழுதி வருகிறார்கள், நன்றாக கவனியுங்கள் நம் அரசியல் உரிமை எவ்வளவு
நுணுக்கமாக பறிக்கப்படுகிறது என்று, எல்லா நாடாளுமன்ற தொகுதியிலும் பரந்துபட்டு வாழும்
ஒரெ இனமான இருந்தும், ஒரு வார்த்தைக்காகக் கூட நம்முடைய இருப்பை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை,
இதுதான் அரசியல், இப்படிதான் நாம் புறக்கணிக்கப்படுகிறோம், ஆனால் இதுவரை இந்த புறக்கணிப்பை
நாம் உணரவே இல்லை என்பதுதான் வேடிக்கை
யார் மீதும் வருத்தப்படுவதனாலோ,
கோபப்படுவதனாலோ, பொறாமைக்கொள்வதாலோ இழந்த நம் உரிமையை மீட்டுவிட முடியாது, நிதானம்,
பொறுமை, திட்டமிடுதல், ஒரு அணியாய் திரளுதல் இவைதான் நாம் வெற்றியடைய, இழந்த நமது உரிமையை
மீட்க வழி, அதனால் நம்மவர்கள் வழக்கம்போல மற்றவரை குறைச்சொல்லும் வழிமுறையிலிருந்து
நாங்கள் சற்று மாறுபடுகிறோம், எதுவுமே முயற்சியின்றி கிடைக்காது, கிடைத்தாலும் அதன்
அருமை புரியாது,
தேர்தல் அரசியல் எங்கள்
நோக்கமல்ல, அதே நேரம் நம்முடைய உரிமை பறிக்கப்பட தேர்தல் அதிகாரம் பிரதானமாக இருப்பதால்
அதை நாம் உதாசினப்படுத்திவிட முடியாது, எங்களுக்கு தெரியும் நாங்கள் வெற்றி பெறுவது
எளிதல்ல என்று அதனால் ஒதுங்கி இருந்து வேடிக்கைப்பார்ப்பது இளம் சிங்கங்களுக்கு அழகல்ல,
எதுவானாலும் களத்தில் சந்திப்போம் என்பதை மையமாக வைத்துதான் இன்று தஞ்சாவூர் நாடாளுமன்ற
தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்து செயல்படுகிறோம், இதனால் என்ன சாதித்துவிட
முடியும் ? என்பது சோம்பேரிகளின் கேள்வி எங்கள் இலக்கு தெளிவானது, இன்றைய நிலையில்
அரசியல் அதிகாரம் மட்டும்தான் இழந்த நம் உரிமையை மீட்க ஒரெ வழி என்பதில் தெளிவாக இருக்கிறோம்,
நம் சமூகத்திற்க்கு வாய்பளிக்க மறுக்கும் அரசியல் இயக்கம் எதுவானாலும் புறக்கணிப்போம்,
நம்மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறும்வரை இந்த தேர்தல் மட்டுமல்ல இனிவரும் எல்லா
தேர்தல்களிலும் குறிப்பாக வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் நம்மக்கள் பெரும்பாண்மையாக
இருக்கும் 40 தொகுதிகளில் இனத்தின் விழிப்புணர்விற்க்காக, முத்தரையர் சமுதாயத்திற்க்கு
வாய்பளிக்க மறுக்கும் அரசியல்கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி அரசியலில்
புறக்கணிக்கப்படும் நம் இனத்தின் விடிவை நோக்கி பயணிப்போம்
நிறைவாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள
விரும்புகிறேன், நிச்சயமாக நாம் இழந்த அத்தனை உரிமைகளுக்கும் நாம் ஒவ்வொருவரும்தான்
காரணம், முடிந்தால் அரசியலை முழுவதுமாக கற்று அரசியல் செய்ய வாருங்கள், கொடி பிடித்து
கோசம் போட போகாதீர்கள், நமக்கான உரிமையை நாமே பெற என்ன செய்ய வேண்டும் என்று மனம் திறந்து
விவாதிக்க வாருங்கள் என்று என்றும் எனது பாட்டன் பேரரசன் பெரும்பிடுகு முத்தரையனின்
புகழ்பாடுவதில் பெருமை கொண்டு விடை பெறுகிறேன். நன்றி
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்