ஆச்சர்யம்...
ஒரு தம்பி சொன்னதில் அவ்வளவு
நம்பிக்கையற்றே இரத்தவகை தொடர்பான கருத்துக்கணிப்பை நடத்தினோம், கருத்துக்கணிப்பின்
முடிவு உண்மையிலேயே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, இதுகூட சாத்தியமா.. ? என்று இன்னும்
ஆச்சர்யத்திலேயே இருக்கிறேன், தம்பியின் கருத்து முத்தரையர்களில் பெரும்பாலனருக்கு
B+ வகை இரத்தப்பிரிவே இருக்கிறது என்பதுதான், 100 பேரிடம் கருத்துக்கேட்டதன் முடிவு
இப்படியாக இருக்கிறது (பார்க்க படம்), இதில் B+ மற்றும் O+ இரத்தவகை சுமார் 71 % முத்தரையர்களுக்கு
இருக்கிறது (B+ மற்றும் O+ இரண்டிற்க்கு அதிக வேறுபாடுகள் இல்லை மற்றும் பெற்றோர் இருவருக்கும்
B+ இரத்த வகை இருக்குமானால் குழந்தைக்கு O+ அல்லது B+ இரத்த வகையே இருக்கும்) இதுபோன்று
வேறு எந்த சாதியிலும் இருக்கிறதா ? என்று தெரியவில்லை, நம்மிடையே இருக்கும் இந்த ஒற்றுமை
ஒரு விசயத்தை நினைவுறுத்துகிறது, இரத்தத்தால்கூட நம்மிடையே வேற்றுமைகள் இல்லை, இதைவிட
பெருமைப்பட நமக்கு வேறு காரணங்கள் தேவையும் இல்லை, இரத்தவகை என்பது மரபு வழியாகவே உருவாகிறது,
அந்த வகையில் நம்முடைய மரபு வழியினரில் பெரும்பாலானவர்கள் ஒரெ வகையான இரத்தப்பிரிவினை
கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் சராசரியாக B+ இரத்தவகை கொண்டவர் எண்ணிக்கை 30.9 %
மட்டுமே, ஆனால் நம்முடைய சாதியினருக்கு அது 41% இருக்கிறது (தோராயமாக), அதே போல O+
இரத்தவகை இந்தியாவில் சராசரி 36.5% இருக்கிறது நம்மக்களிடமோ 30 % (தோராயமாக) இருக்கிறது.
இதுவரை இன்டர்நேஷனல் சொசைடி ஆப் ப்ளட் ட்ரான்ஸ்ப்யூஷன் (ISBT) மொத்தம்
30 மனித இரத்த பிரிவு அமைப்புகளை அங்கீகரித்து உள்ளது, இதில் நம்மக்களிடம் எடுக்கப்பட்ட
சிறிய கணக்கெடுப்பில் 9 வகை இரத்தப்பிரிவுகள் நம்மக்களிடம் இருக்கிறது. இருந்தாலும்
மரபுவழி சார்ந்து B+ மற்றும் O+ இரத்தவகை அதிகமானவர்களுக்கு உண்டு. ஏனைய இரத்தப்பிரிவுகள்
29 % இருந்தாலும் இதுவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதான் அதற்கு அறிவியல் ரீதியாக
ஆயிரம் காரணங்கள் இருக்கிறது, (அறிவியல் அறிந்தவர்களிடம் விளக்கம் பெறலாம்) இந்த நேரத்தில்
இந்த கருத்துகணிப்பு வெருமனே இரத்தப்பிரிவின்
ஒற்றுமையை காண்பதற்க்காக மட்டும்தான் கேட்கப்பட்டதா...?
என்றால் முக்கியமாக அதற்க்காகதான் என்றாலும் வேறு ஒரு அதிமுக்கிய காரணமும் ;) இந்த
கருத்துக்கணிப்பில் இருக்கிறது, அது...
நாலடியார் நம் சாதியின்
பெருமையை இப்படி சொல்கிறது, " பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும் கருனைச் சோறார்வர்
கயவர்; - கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும்.
" அதாவது “முயற்சியற்ற கீழ்மக்கள்
பெருமுத்தரையர் என்னும் செல்வர் மகிழ்ந்து தரும் கறிகளோடு கூடிய உணவை உண்டு மகிழ்வர்.
கறியின் பேரையும் அறியாத மேலோர் தாம் மிகவும் விரும்பிச் செய்த முயற்சியால் வந்தது
நீர் உணவாயினும் அதனை அமிழ்தமாக உண்பர்” ஆகவே இருந்தாலும் இல்லாவிட்டாலும்
கொடுப்பது முத்தரையர்களின் குணமாக இருக்கிறது, இப்படி கொடுத்து கொடுத்து இன்று ஒன்றும்
இல்லாமல் போனாலும், கொடுக்கும் மனது மட்டும் அப்படியே இருக்கிறது, எதையாவது கொடுத்துக்கொண்டே
இருப்பது நம் சாதியின் பெருமை இப்போது கொடுக்கும் அளவிற்க்கு ஒன்றும் இல்லையே, எதை கொடுப்பது ? என்று வருத்தத்தில் இருக்கும் "முத்தரையர் சிங்கங்களே"
பொருளாக கொடுக்கத்தானே நம்மிடம் ஒன்றும் இல்லை இருப்பதை கொடுப்போமே..! நாம் கொடுத்து
பழகியவர்கள், பழக்கத்தை மாற்ற வேண்டாம், இரத்ததானம் செய்வோம், குறிப்பாக நமது பேரரசரின்
பிறந்த நாளான மே மாதம் 23 - ம் நாள் தமிழகம் முழுவதும் இரத்த தானம் செய்ய வேண்டும்,
இது ஒரு நாள் கூத்தா என்றால்
இல்லை, தொடர்ந்து இரத்தவங்கிகளோடு தொடர்பில் இருங்கள், தேவையான சமயங்களில் எல்லாம்
இரத்தத்தை தானமாக தர தாயாராய் இருங்கள், கொடுத்துப்பழகிய நம்மிடம் வாங்கி இன்று வளம்கொழிக்க
வாழ்பவர் யாரும் இப்படி செய்வதில்லை என்றாலும் இன்னும் நாம் கொடுக்கவும், நம்மிடம்
வாங்கவும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இரத்த தானம் செய்வோம்...! இனப்பெருமை காப்போம்...!!
அன்புடன்...
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக