புதன், 5 மார்ச், 2014

ஒரு வேண்டுகோள்..



ஒரு வேண்டுகோள்..
முத்தரையர்கள் அனைவரின் பங்களிப்பும் அவசியம்
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் நம்மக்கள் பெரும்பாண்மையாக இருந்தும், இதுவரை இருக்கக்கூடிய அரசியல் நிலவரங்களை காணும்போது எந்த அரசியல்கட்சியும் வரும் தேர்தலில் நம் சமூகத்தில் ஒருவருக்கு வாய்பளிக்க தயாராக இல்லை, அதேபோல நமது சமூக சங்கங்கள் எந்த முன்முயற்சியிலும் இதுவரை ஈடுபடவில்லை, இவர்களுக்கு உணர்வை கொண்டுவரும் வண்ணம் நாம் வேட்பாளரை அறிவித்தது அனைவரும் அறிந்ததே.... இந்த நிலையில் மிகுந்த தயக்கத்திற்க்கும், ஆலோசனைக்கும் பிறகு இந்த வேண்டுகோளை வெளியிடுகிறோம்.
பல சமூக உணர்வாளர்களும் வெறுமனே தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு கெளரவமான வாக்குகளை பெறாவிட்டால் போட்டியிடுவதில் அர்த்தமில்லை என்று சொன்ன ஆலோசனைக்குப்பிறகு, அவ்வாறு கெளரவமான வாக்குகளை பெற வேண்டுமானால் (குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்குகள்) ஒரளவிற்க்கு நாம் செலவுகளை செய்தால் மாத்திரமே நம்மக்களிடம் நம்முடைய நோக்கத்தை கொண்டு சேர்க்க முடியும் என்ற நிலையில், 12 லட்சம் வாக்காளர்களை கொண்ட தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகள், மற்றும் வேட்பாளர்கள் கடந்த தேர்தல்காலங்களில் ஒரு வாக்குக்கு அளித்த தொகை 500 ரூபாய், அப்படியானால் இந்த தேர்தலில் எவ்வளவு பணத்தினை அவர்கள் கொடுப்பார்கள், மற்றும் ஏனைய செலவுகளை செய்வார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள், இப்போதைய நிலவரப்படி அரசியல்கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் "கோடிஸ்வரர்கள்", இந்த நிலையில் இந்த சமூகத்தின் விழிப்புணர்விற்க்காக யாரிடமும் கையேந்தாமல், யாருடைய துணையும் இல்லாமல், எந்த பின்புலமும் இல்லாமல் போட்டியிட தீர்மானித்தப்போது இதில் நம் சமூகத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும். நாம் எல்லோரும் இணைந்தே இந்த பணியினை செய்ய முடியும் என்ற நிலையில், தேர்தல்களத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க உங்களின் ஒத்துழைப்பினை எதிர் நோக்கி இருக்கிறோம்.
இதுவரை நாம் முன்னெடுத்த எந்த விசயங்களுக்கும் யாரிடமும் எந்த பொருளாதார உதவியும் பெறாதது அனைவரும் அறிந்ததே, அதே நேரம் இது மற்ற பணிகளைப்போல எளிதானதல்ல சுமார்  12 லட்சம் வாக்காளர்களை சென்றடையும் வண்ணம் பிரச்சாரமும், ஆறு சட்டமன்ற தொகுதியிலும் நாம் பிரச்சாரபணிகளை செய்யவும் பொருளாதார ரீதியாக உங்களிடம் உதவிகளை எதிர்பார்கிறோம்,  நம்முடைய வேண்டுகோளை கொச்சைப்படுத்த சிலர் முனைவார்கள் என்பது தெரியும், அவர்கள் நமது இலக்கல்ல... நம்முடைய நோக்கம் தெளிவானது, ஏற்கனவே பலரும் தொடர்புகொண்டு தாங்கள் பொருளாதார ரீதியாக உதவத்தயார் என்று சொல்லியப்பிறகும் நீண்ட தயக்கம்/யோசனைக்கு பிறகு அந்த வேண்டுக்கோளினை ஏற்று வெளிப்படையாக இதனை அறிவிக்கிறோம், இது யாருக்கும் கட்டாயமல்ல, இந்த விழிப்புணர்வு பணியில் தங்கள் பங்களிப்பை விரும்புபவர்கள், இந்த பணியில் நேரிடையாக பங்கெடுக்க முடியாதவர்கள், மற்றும் தூரதேசங்களில் இருந்தாலும் இனத்தின்பால் அக்கறை கொண்டவர்கள் செய்யும் உதவிகள் இந்த நேரத்தில் அவசியம் என்று கருதுகிறோம். இதற்க்காக பெறப்படும் ஒவ்வொரு ரூபாய்களுக்கும் வரவு - செலவு கணக்கு முறையாக தேர்தல் முடிவில் அறிவிக்கப்படும். நம்முடைய பிரச்சாரம் இப்போதே துவங்கப்பட உள்ளது, ஒருவேளை எதேனும் அரசியல் கட்சி நம்சமூகத்திற்க்கு வாய்பளிக்கும் பட்சத்தில் நீங்கள் வழங்கும் நிதியானது அந்த வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தப்படும் 
 நிதியுதவி செய்யவிரும்புபவர்கள் கீழ்கண்ட வங்கிகணக்கில் செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம். வங்கியில் இல்லாமல் நேரடியாக யாரிடமும் எந்த பணபரிவர்தனைகளையும் செய்ய வேண்டாம் என்பது எங்கள் கண்டிப்பான வேண்டுகோள், நீங்கள் வங்கியில் பணம் செலுத்தியபிறகு அதன் விபரங்களை எங்கள் மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்குமாறு (விரும்பினால் எவ்வளவு தொகை என்பதை இங்கு பதிவிடவும்) அன்புடன் வேண்டுகிறோம்.
முத்தரையர்கள் அனைவரின் பங்களிப்பும் அவசியம்

Account Number: 825872555
Account Holder Name: R.SURESH            
Bank Name and Branch Address: INDIAN BANK, N.S.N PLAZA, P.B.NO: 8 55,56 FIRST FLOOR BIG BAZAAR STREET, PATTUKOTTAI 614601
IFSC Code: IDIB000P031

After send money Please E-mail the Details (Name, Address and Amount) to: sanjai28582@gmail.com

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக