வியாழன், 13 மார்ச், 2014

சிவகங்கை லோக்சபா தொகுதி



சிவகங்கை: கடந்த தேர்தலில் கோட்டைவிட்ட திருமயம், ஆலங்குடி சட்டசபை தொகுதிகளில் அதிக ஓட்டுக்களை பெற அ.தி.மு.க., தீவிர காட்ட திட்டமிட்டுள்ளது.

சிவகங்கை லோக்சபா தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட திருமயம், ஆலங்குடி சட்டசபை தொகுதிகள் இடம் பெறுகின்றன. இரு தொகுதியிலும் முத்தரையர், கள்ளர், வல்லம்பர் சமுதாயத்தினர் பரவலாக உள்ளனர். 2009 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜகண்ணப்பனை எதிர்த்து நின்ற சிதம்பரத்திற்கு, இவ்விரு தொகுதி ஓட்டுக்கள் தான் "கை' கொடுத்ததாக காங்.,கட்சியினர் அப்போதே கூறினர். இந்நிலையில், வல்லம்பர் சமுதாயத்தை சேர்ந்த சுப. துரைராஜ் தி.மு.க., வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தொகுதியிலும் வல்லம்பர் சமுதாய ஓட்டுக்கள், காங்.,கிற்கு முழுமையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.காங்.,கில் சிதம்பரம் அல்லது கார்த்தி ஆகியோர் இரு தொகுதியிலும் ஓரளவிற்கு பரிட்சயமானவர்கள் என்றாலும், காங்., தனித்து போட்டியிடும் முடிவில் இருப்பதால், இருவரும் களமிறங்காத நிலையில் வேறு ஒருவர் காங்., சார்பில் போட்டியிடும் நிலை உள்ளது. எனினும் அ.தி.மு.க.,வேட்பாளர் செந்தில்நாதன், அவரது கட்சி ஓட்டுக்களை தவிர, பிறரின் ஓட்டுக்களை பெற அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் அ.தி.மு.க.,வினர் திருமயம், ஆலங்குடி சட்டசபை தொகுதிகளில் அதிக அக்கறை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக