இன்றைய (05.04.2014) தினதந்தி
தேர்தல் கண்ணோட்டத்தில் "திருச்சி நாடாளுமன்ற தொகுதி" யைப் பற்றி எழுதியிருந்தார்கள்
வேண்டா வெருப்பாகவே "முத்தரையர்" சமூகம் தான் அந்த தொகுதியில் பெரும்பாண்மை
என்பதை ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள்...!
உறவுகளே அந்த கண்ணோட்டத்தில்
இதைவிட முக்கியமான ஒரு விசயத்தை, நுணுக்கமான அரசியலை புகுத்தி இருந்தார்கள் யாரெல்லாம்
அதை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை… ஆம் இதுவரை எழுதப்பட்ட தேர்தல் கண்ணோட்டத்தில்
எதாவது ஒரு சமூகம் பெரும்பாண்மையாக இருப்பதாக சொல்லப்பட்ட தொகுதிகளில் "சாதி"
பார்க்காமல் ஓட்டுப்போடுவீர்களா..? என்ற கேள்வியை முன்வைக்கவில்லை, அல்லது அந்த தொகுதி
மக்கள் "சாதி" பார்க்காமல் ஓடுப்போடுவார்கள் என்றும் எழுதவில்லை, ஆனால்
"முத்தரையர்கள்" பெரும்பாண்மையாக இருப்பதாக ஒத்துக்கொண்ட ஒரு தொகுதியில்
"மக்கள் சாதி பார்க்கமாட்டார்கள்" என்று எழுதப்பட்டுள்ளது ஏன் முத்தரையர்கள்
மட்டும் சாதி பார்க்கக்கூடாது..? வேறு சமூகங்கள் பெரும்பாண்மையாக இருக்கும் தொகுதிகளில்
ஏன் இதுபோன்ற கருத்துக்கள் எழுதப்படவில்லை..?
இது எதை காட்டுகிறது..? நம் மக்களின் அறியாமையையா..? அல்லது நம் சமூகம் வளந்துவிடக் கூடாது என்பவர்களின் மன நிலையையா..?
இதுதான் அரசியல் இப்படிதான்
நம் சமூகம் ஒடுக்கப்படுகிறது. இந்த தொகுதிக்கு சிறு தொடர்பும் இல்லாத சேலத்திலிருந்து
வந்த "அரங்கராஜன் குமாரமங்கலம்" வேட்பாளராக இருக்கலாம், கேரளாவில் இருந்து
வந்த "அனந்தன் நம்பியார்" வேட்பாளராக இருக்கலாம், ஒரத்தநாட்டிலிருந்து வந்த
"எல்.கணேசன் மற்றும் ப.குமார்" வேட்பாளராக இருக்கலாம், அவர்கள் ஜெயிக்கவும்
செய்யலாம், ஆனால் மண்ணின் மைந்தர்கள் முத்தரையர் நிற்க்கக்கூடாது, ஜெயிக்கக்கூடாது,
அதைப்பற்றி கனவிலும் நினைக்ககூடாது...!
இதுதான் சமூக நீதியா..?
முத்தரையர் சமுதாயமே... உறங்கி கிடந்தது போதாதா..?
- இளம் சிங்கங்களின் எழுச்சி
இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக