வெள்ளி, 23 மே, 2014

1,339வது பிறந்தநாள் விழா பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு



1,339வது பிறந்தநாள் விழா பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்சி, : பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பிலும், அனைத்து கட்சிகள் சார்பிலும் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,339 வது பிறந்த நாள் விழா நேற்று திருச்சியில் கொண்டாடப்பட்டது. திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா மனோகரன், கலெக்டர் ஜெயஸ்ரீ, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மேயர் ஜெயா, மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜாத்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், நெடுமாறன் உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில், எம்பிக்கள் குமார், ரத்தினவேல், மருதைராஜா, எம்.எல்.ஏக்கள் பரஞ்ஜோதி, சிவபதி, கு.ப.கிருஷ்ணன், இந்திராகாந்தி, முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன், கோட்டத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

திமுக சார்பில், மாவட்டச் செயலாளர் கே.என். நேரு, மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரிய சாமி, கே.என்.சேகரன், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், ஆர்.சி.கணேசன் மற்றும் சீமானூர் பிரபு உள்ளிட்டோரும், முன்னாள் அமைச்சர் செல்வராஜ், கைக்குடி ஜி.ஆர்.சாமி உள்ளிட்டோரும் முத்தரையர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

இதே போல் பாஜ சார்பில், மாநில செயலாளர் இன்ஜினியர் சுப்பிரமணியன், கோட்டத்தலைவர் இல. கண்ணன் மற்றும் நிர்வாகிகள், மதிமுக சார்பில், மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகிகஒள், தேமுதிக சார்பில், மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், மாநில மாணவரணி செயலாளர் விஜயகுமார், அவைத்தலைவர் அலங்கராஜ் மற்றும் நிர்வாகிகளும், காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில், மாநிலத்தலைவர் பாலசுப்ரமணி யன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

மேடை அகற்றம்: திருச்சியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் நேற்று அமைச்சர் மற்றும் எம் பி,எம்எல்ஏக்கள், கலெக்டர், மேயர் உள்ளிட்டோர் மாலை அணிவிக்க வந் தனர். இதையொட்டி மாவட்ட மக்கள் செய்தி தொடர்புத் துறை சார்பில் புகைப்படம் எடுக்க மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் மற்ற கட்சியினர் வந்து மாலை அணிவிப்பதற்குள் செய்தி தொடர்பு துறை ஊழியர்களே உடனடியாக அந்த மேடையை அகற்றினர்.

கடும் கட்டுப்பாடு: விழா வுக்கு வருகை தரும் சங்கத் தலைவர்கள் ஒரே ஒரு வாகனத்தில் மட்டும் வரவேண்டும். அவர்கள் தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வர அனுமதி இல்லை. முத்தரையர் சங்கத் தலைவர்கள் மாலை அணிவிப்பதை தவிர திருச்சி மாநகரில் வேறு எந்தவிதமான செயல்களுக்கும் அனுமதி இல்லை என பல கட்டுப்பாடுகளை போலீஸ் விதித்திருந்தது.

போலீஸ் குவிப்பு: முன்னெச்சரிக்கையாக மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் துணை கமிஷனர்கள் அபிநவ்குமார், ஜெயந்தி ஆகியோர் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐகள் என அதிரடிப் படை, ஆயுதப்படை போலீ சார் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருவுருவ சிலையை சுற்றி குவிக்கப் பட்டு இருந்தனர். இதுதவிர வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் இருந்தது. மாநகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்தில் மாற்றம்: போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, தஞ்சை, சேலம், புதுகை செல்லும் புறநகர் பேருந்து கள் கலையரங்கம் ரோடு, ஜங்ஷன், தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல் கேட் வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன. இதே போல் சத்திரம் பஸ் நிலை யம் மற்றும் மத்தியபஸ் நிலையங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அரசு மருத்துவமனை, அமெரிக்கன் ஆஸ்பத்திரி வழியாக இயக்கப்படும் பஸ் கள் எம்.ஜி.ஆர்.சிலை, கோர்ட், ஒய்.டபிள்யு.சி.ஏ. வெஸ்ட்ரி ரவுண்டானா வழியாக திருப்பி விடப்பட்டது.

News Source : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக