மறுநாள் 15-ம் தேதி, உடல் நிலை மோசமான நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் இறந்து விட்டார். கருப்பையா, மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர், கலெக்டருக்கு மனைவி இறந்தது குறித்து விசாரணை நடத்த மனு கொடுத்தார். அதன் அடிப்படையில், மருத்துவதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தந்தை கொத்தனார் வேலை பார்த்து வருவதால், பிறந்த மறுநாளே தாயை இழந்த பெண் குழந்தை, தற்போது, இலுப்பக்குடியில் உள்ள, அவரது தாய்வழி பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறாள். மூத்த குழந்தையும் பெண் குழந்தை என்பதால், இரண்டு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல், அரசின் உதவியை எதிர்நோக்கி குடும்பமே காத்திருக்கிறது.
கருப்பையா கூறும்போது: ஏழைகள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். அதை புரிந்து, அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ்கள் செயல்பட வேண்டும். நோயாளிகளிடம் கனிவு காட்ட வேண்டும். அவர்களுக்கு உடல் நிலை மோசம் என்றால் உடனே கவனிக்க வேண்டும். ஆனால், என் மனைவி விஷயத்தில், எல்லாமே தாமதமாக நடந்தது. இன்று அவளை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் தவித்து வருகிறோம். குழந்தைகளின் நல் வாழ்விற்கு, அரசால் கிடைக்கும் உதவிகளை, தாமதமின்றி பெற்று தர வேண்டும், என கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக