வெள்ளி, 23 மே, 2014

திருச்சியில் இன்று முத்தரையர் சதய விழா



திருச்சி: மறைந்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், 1339வது சதய விழா இன்று நடக்கிறது. மறைந்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், 1,339வது பிறந்தநாள் (சதய விழா) இன்று கொண்டாடப்படுவதையொட்டி, திருச்சி, பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில், மரியாதை செலுத்தப்பட உள்ளது. அமைச்சர் பூனாட்சி, லோக்சபா அ.தி.மு.க., கொறடா எம்.பி., குமார், அரசு தலைமை கொறடா மனோகரன், மேயர் ஜெயா, எம்.பி., ரத்தினவேல், எம்.எல்.ஏ.,க்கள் பரஞ்ஜோதி, சிவபதி, சந்திரசேகரன், இந்திராகாந்தி, துணைமேயர் ஆசிக்மீரா, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் விஸ்வநாதன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதையொட்டி, திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக