நன்றி..! நன்றி...!!
நன்றி...!!!
வழக்கமாக மே-23
ம் நாள் திருச்சி மாநகரமே குலுங்கும் அளவிற்க்கு "முத்தரையர் படை" திரளுவதை
பொருத்துக்கொள்ள முடியாத சமூகவிரோதிகள் 2012 ஆம் ஆண்டு எம் பேரரசரை தரிசிக்க திரண்ட
முத்தரையர் படையுடன் கலந்து விரும்பதகாத சில நிககழ்வுகள் அன்றைக்கு நடத்திவிட்டதை தொடர்ந்து
காவல்துறை கடந்த ஆண்டு முதல் சில கெடுபிடிகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு சீறும்
சிறப்புமாக நடந்தேறி வரும் "பெரும்பிடுகுவின்" விழாவை களையிழக்கச் செய்தது,
இந்த ஆண்டும் விழா நடக்குமா..? என்ற ஐயப்பாடு எழுந்ததை தொடர்ந்து நாம் உட்பட பல சங்கங்களும்
"முத்தரையர் இளம் சிங்கங்கள்" அவர்கள் வாழும் பகுதிகளிலேயே பேரரசருக்கு விழா
எடுத்திட வேண்டுகோள் விடுத்திருந்தோம்...!
பல ஆண்டுகளாக
திருச்சியை நோக்கி சென்ற முத்தரையர் சமூகம் இன்று ஊருக்குஊர் விழா எடுத்திட்டது மிகுந்த
மன நிறைவினை தருவதாக அமைந்துள்ளது. வழக்கம்போல அரசு தரப்பின் மரியாதையையும் எம் பேரரசர்
ஏற்றுக்கொண்டார்.
இன்று நூற்றுக்கும்
அதிகமான இடங்களில் ஒரு சிறு அசம்பாவிதமோ, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்போ,
போக்குவரத்து மற்றும் சட்டஒழுங்கிற்க்கு இடைஞ்சலோ இல்லாமல் ஆயிரமாயிரமாய் திரண்ட முத்தரையர்
வீரக்குடி இளைஞர்கள் எம் பேரரசரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி உலகிற்கே நாகரீகம்
கற்று தந்த பேரினத்தின் மீது விழுந்த கறையினை துடைத்திருக்கிறார்கள்.இன்றைய நிகழ்வுகளில் மிக முக்கியமானது திருச்சி, இராமேஸ்வரம் மற்றும் பட்டுக்கோட்டையில் நடந்த இரத்ததான முகாம் என்றால் மிகையாகாது.
வழக்கம்போலவே
ஊடகங்கள் எம் இனத்தின் விழாவினை, கொண்டாட்டத்தினை திட்டமிட்டு மறைத்துவிட்டது இருந்தாலும்
சமூக வலைத்தளங்களில் இன்று முழுமையாக நம் இனம் தொடர்பான பதிவுகளை பரவலாக காண முடிந்தது,
பல ஊர்களிலும் சங்கங்கள் பலவும் இணைந்தும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னிச்சையாக
பேரரசரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள். இவர்கள் எல்லோருக்கும், அனைத்து முத்தரையர்
சங்கங்களுக்கும், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றியுடன்...
சஞ்சய்காந்தி
அம்பலக்காரர்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின்
எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக