வெள்ளி, 23 மே, 2014

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர் பூனாட்சி மாலை அணிவித்தார்





திருச்சி,
திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1339-வது சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் பூனாட்சி மற்றும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
முத்தரையர் பிறந்த நாள் விழா
முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு 1,339-வது சதய விழா நேற்று தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி பாரதிதாசன் சாலையிலுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலைக்கு அமைச்சர் பூனாட்சி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரசு தலைமை கொறடா மனோகரன், மேயர் ஜெயா, எம்.பி.க்கள் ரத்தினவேல், குமார், மருதைராஜ், கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், எம்.எல்.ஏக்கள் பரஞ்ஜோதி, சிவபதி, இந்திராகாந்தி, கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் ஆர்.விஸ்வநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க.
தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், சோழன் ஆகியோரும் தனியாக வந்து மாலை அணிவித்தனர்.
அரசியல் கட்சியினர்
பாரதீய ஜனதா கட்சியினர் தேசிய செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமையிலும், காங்கிரஸ் கட்சியினர் வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் விஜயா பாபு தலைமையிலும், தே.மு.தி.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் தலைமையிலும், ம.தி.மு.க.வினர் மாவட்ட பொறுப்பாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன் தலைமையிலும் மாலை அணிவித்தனர். மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் இளைஞர் அணி சார்பில் ஆர்.வி.பாலமுருகன் தலைமையில் 100 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். முத்தரைய மன்னர் பிறந்த நாள் விழாவையொட்டி சிலை அமைந்து உள்ள ஒத்தக்கடை பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
லால்குடி
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை கொண்டாடும் வகையில் கூகூர், ஆனந்திமேடு, லால்குடி, சாத்தமங்கலம், மணக்கால், எசனைக்கோரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் 15 நாட்களுக்கு முன்னதாக கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று ஏராளமான இளைஞர்கள் பால்குடம் எடுத்து வந்து லால்குடி அருகே கூகூரில் உள்ள முத்தரையர் சிலைக்கு பால் மற்றும் சந்தன ஆகியவற்றால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், முத்தரையர் இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர், பானகம் வழங்கப்பட்டது. விழாவில் கூகூர் ஊராட்சி தலைவர் செல்வழகன், கூகூர் முத்தரையர் இளைஞர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 News Source : DINATHANTHI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக