வினவுவின் புரட்டுகள்..!
புதிய புரட்டு வரலாறு படைக்கும்
வீணர்களின் கூட்டத்தின் வினவுதளம் "கஜினி முகமது : கல்வெட்டு
உண்மைகள் ! பாட நூல் புரட்டுகள் !" என்ற தலைப்பில் எதோ பிதற்றியுள்ளது,
அது RSSக்கு எதிரான எழுதப்பட்ட எதோ ஒரு கதை (கட்டூரை என்றுதான் சொல்லுவார்கள்), அந்த
கதைக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை, ஆனால் அதில் தேவையே இல்லாமல் பேரரசர்
பெரும்பிடுகு முத்தரையர் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள்
// ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும்பிடுகு முத்தரையர்
சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார்
//
எழுதப்பட்ட தலைப்பிற்க்கும்,
இந்த வாசகத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை (சென்னை நகரை சுற்றி
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில்
வசித்தாலும் சென்னையில் சிலை இல்லை என்பதுதான் உண்மை, இதுதான் வினவு புரட்டுவின் தொடக்கம்)
ஆனால் வலிந்து திணிக்கப்பட்டு தனது வன்மத்தை, அரசியல் உரிமை மறுக்கப்பட்டு இன்று கையறு
நிலையில் இருக்கும் முத்தரையர்கள் குறித்து எழுதி தனது அறிப்பை தீர்த்துக்கொள்கிறது
வினவு.
இந்த கட்டூரையின் சாரம்சம் RSS போன்ற இயக்கங்கள்
இன்று வரலாற்றை மாற்றிப்பேச முனைகிறது என்பதாக இருக்கிறது, இதற்காக பலதரப்பட்ட தரவுகளையும்
மேற்கோள் காட்டி எழுதப்பட்ட இந்த கட்டூரையில் இன்று இந்த இயக்கங்கள் சொல்லும் வரலாறு
உண்மையில்லை என்பதாக இருக்கிறது, இவர்களின் இந்த நீண்ட கட்டூரையில் எதையோ நிறுபிக்க
முயன்று அதற்காக ஆயிரமாயிரம் ஆதரங்களை காண்பித்து இதுதான் என்று சொல்ல முற்படுபவர்கள்.
அதே கட்டூரையின் ஒரே ஒரு வரியில் தங்கள் புரட்டு
சிந்தாந்ததில் தோற்றுப்போய் இருக்கிறார்கள், இவர்கள் சொல்லியிருக்கும் மொத்தமும் கட்டுக்கதையாகவே
இருக்க முடியும் என்பதற்க்கு இவர்கள் முத்தரையர் குறித்து எழுதி இருக்கும் ஒரே வரி
போதுமானதாக இருக்கும், முத்தரையர் மன்னர்கள் கடைசி காலங்களில் சிறு நிலப்பரப்பை ஆண்டது
உண்மையானதுதான், ஆனால் அதற்க்கும் முன்பாக சேர, சோழ, பாண்டிய நாடுகளை அதாவது முத்தரைகளை
ஆண்டவர்கள் என்பதுதான் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை, ஆனால் இவ்வளவு வன்மத்தோடு இவர்கள்
இப்படி எழுத எந்த வரலாற்றை ஆதாரமாக கொண்டார்கள் ? இவ்வளவு தீர்க்கமாக கஜினி முகமதுவிற்க்கு
கட்டூரை எழுதிய அஜித் எனும் எழுத்தாளர், இதற்க்காக திரட்டி சொன்ன ஒராயிரம் ஆதாரங்கள்
போன்று எதேனும் ஒரு ஆதாரத்தை குறிப்பிட்டு தனியே கட்டூரை எழுதும் திராணி இருக்கிறதா..?
யாரோ தவறாக எழுதிய வரலாற்றை
வைத்து "எதோ ஒரு குறு நில மன்னன்" என்று எழுதும் இவர்கள் எழுதி இருக்கும்
இந்த நீண்ட நெடிய கட்டூரையின் உண்மைதன்மையை பச்சையாய் காட்டிக்கொடுக்கிறது.
வினவு தளத்தினரே, உங்கள் தளத்தை
ஆர்வமாக வாசிப்பவர்களை முட்டாளாக கருதி இதுபோன்ற பிதற்றல்களை, ஒரு சார்பு நிலை எழுத்தை
கட்டூரை என்று வெளியிட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று உண்டியல் குலுக்கி மஞ்சள்
குளித்து மகிழ்ந்து வாழாமல் உண்மையாய் எழுத முயலுங்கள்.
-
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம்
சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக