Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 30 ஜூலை, 2014

திங்கள், 28 ஜூலை, 2014

வாழ்த்துக்கள்...!!



வாழ்த்துக்கள்...!!

 20-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் முதன்முறையாக கலந்துகொண்டு பளுதூக்குதலில் புதிய சாதனையை நிகழ்த்தி, தங்கப்பதக்கம் வென்று "முத்தரையர்" பேரினத்திற்க்கு பெருமையை பெற்றுதந்த‌ வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்திற்க்கும், தமிழகத்தில் இருந்து சென்று முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்று தமிழினத்திற்க்கு பெருமையை தேடி தந்ததற்க்காக 50 லட்சம் பரிசுதொகை அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" பாரட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது....!

தமிழகத்தில் களப்பிரர் காலம் இருண்ட காலமா?



பண்டையத் தமிழக வரலாற்றில், ஒரு அரச வம்சத்தினரின் ஆட்சியை இருண்ட காலம் என்று பள்ளிக்கூட வரலாறுகளில் குறிப்பிடுகிறார்கள். அதை மக்களின் மனதிலும் பதியவைத்து விட்டார்கள் என்பதே உண்மை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisUbVFhb0CbThXeB-whtUzhgKUKmniYngVjOlB1JSfqMQUgVpfWjIrI88dLtbfJIx6yxIQQSaQgZjt57K6RiDxUF9ivC1ND8LdVaXGdnswme8Nmijtt-H6qaJG2lmEJSOyKiSkVnr7q-EJ/s1600/tamilnadu.jpg
ஆனால், வரலாற்றில், ஒரு காலகட்டம், இருண்ட காலம் என்றோ அல்லது ஒளி பொருந்திய காலம் என்றோ குறிப்பிடப்படுவது, பெரும்பாலும் எழுதும் வரலாற்று ஆசிரியர்களின் பின்னணியைப் பொறுத்து அமைகிறது என்ற கூற்றை நாம் மறக்கலாகாது.

சாதாரணமாக, பள்ளியில் வரலாற்றுப் பாடம் படித்த மாணவர்கள், களப்பிரர்கள் என்பவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்களின் காலம்தான், தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையிலேயே அவர்களின் காலம் இருண்ட காலமா என்பதை, நமக்கு கிடைத்த சில வரலாற்று தகவல்களை வைத்து அலசுவோமா?

ஆட்சி காலம்

கி.பி. 3 முதல் கி.பி. 6ம் நூற்றாண்டு வரை, பண்டைய தமிழகப் பகுதியை களப்பிரர்கள் ஆண்டார்கள். அவர்கள், மூவேந்தர்களான சேர, சோழ மற்றும் பாண்டியர்களை வெற்றி கொண்டார்கள். இவர்களின் காலம், தமிழகத்தின் இடையாட்சிக் காலம் என்று அழைக்கப்படுகிறது.

இவர்களின் பூர்வீகம் மற்றும் தோற்றம் என்ன என்பதைப் பற்றி அறியலாமென்று பார்த்தால், அதைப் பற்றிய சரியான குறிப்புகள் வரலாற்றில் இல்லை என்றே தெரிவிக்கிறார்கள். ஏனெனில், அவர்களைப் பற்றி அறிய உதவும் கலை மற்றும் நினைவுச் சின்னங்கள், போதுமான அளவில் கிடைக்கப்பெறவில்லை. ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கவும் கூடும்.

இவர்களைப் பற்றி அறிய...

இவர்களைப் பற்றி ஓரளவுக்கு அறிய நமக்கு உதவுபவை, வேறு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9Lru5NJWsl_kA2tor-QFB0hriv2_PDsxJeQ1gXQShQhqVbA0QVW4pfnVD9enXVIRvSSx06A89ns6q1aZzOhYiOEV6YU4kXAeth8kf4uE9o9a1-JNk85RLsEZnC84HdDm0opO8_bTT6fyA/s1600/Buddha%5B1%5D.jpg
புத்தர்
ஒன்றுமில்லை, பெளத்த மற்றும் சமண இலக்கியங்கள்தான். இவர்கள், கி.பி. 6ம் நூற்றாண்டு காலத்திற்கு பிறகு, பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

சேர, சோழ மற்றும் பாண்டியர்களைப் பற்றி அறிவதற்கு, நமக்கு கிடைக்கும் ஆதார வளங்களைப் போல், களப்பிரர்களைப் பற்றி அறிவதற்கு கிடைக்காததால், இவர்களை அடையாளப்படுத்துவதென்பது, உண்மை வரலாற்று ஆசிரியர்களுக்கு சிக்கலான பணியாகவே இருக்கிறது.

யார் இவர்கள்?

களவர் என்ற இடத்துடன், களப்பிரர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்த களவர் இனத்தின் தலைவர்கள், சங்க இலக்கியங்களில், பாவத்திரியை சேர்ந்த திரையன் என்றும், திருப்பதி அல்லது வேங்கடத்தைச் சேர்ந்த புல்லி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கி.பி. 3ம் நூற்றாண்டு வாக்கில், களவர்கள் இருந்த தொண்டை மண்டலம் பகுதியில், சாதவாகன வம்சம் வீழ்ந்து, பல்லவர்களின் எழுச்சித் தொடங்கியப் பிறகு, அரசியல் குழப்பம் நிலவியதாம். இதனால் இவர்கள் இடம்பெயரும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். இவர்கள், கொண்டுபலூர் பகுதியைச் சேர்ந்த முத்தரையர் வம்சத்திலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்றும் சில வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

சோழர் வரலாறு எங்கே?

உறையூரை தங்களின் தலைநகராக கொண்டு ஆண்ட சோழர்களின் வரலாறு கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ம் நூற்றாண்டு வரை நமக்கு தெளிவாக கிடைக்கப்பெறவில்லை. இதற்கு கூறப்படும் காரணம், அந்த காலகட்டத்தில், அவர்களின் பகுதியில் களப்பிரர்கள் கோலோச்சி வந்தனர் என்பதே.

புத்த தத்தா

பாலி மொழியின் சிறந்த எழுத்தாளர் "புத்த தத்தா" உறையூரைச் சேர்ந்தவர். அவரின் சமகாலத்தில், காவேரிப்பட்டினத்தை தலைநகராக கொண்டு, பெளத்த மதத்தை பின்பற்றிய அச்சுதவிக்ரந்தா என்ற களப்பிர மன்னன் ஆண்டு வந்ததாகவும், அவர், மூவேந்தர்களை சிறைபிடித்து வைத்திருந்ததாகவும் சில தமிழ் இலக்கிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjluA_N3UzhoyPZ7D51I6ZTwG1_ArZUr3PwCRru51z3OSDwMNELl9zWdQBPGnUolcaLnQyScqIWOnuZQsjUtGkkREPlLMBX0xe7J5NtITOK0SXq407w3dcu-jopF7RKWTccn7AsyHg1LYWw/s1600/Mahavira%5B1%5D.jpg
மகாவீரர்
புத்த தத்தாவின் சம காலத்தவர் என்பதால், இந்த மன்னர், கி.பி. 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று யூகிக்க முடிகிறதல்லவா? கடைச்சங்க காலத்தின் முடிவில், களப்பிரர்களால், சோழர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

சமூக மாற்றம்

களப்பிரர் ஆட்சியின் முக்கிய விளைவே, அந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர், அதுவரை தமிழகத்தில் நிலவிய சில பண்பாட்டு முறைகள் மாற்றத்திற்கு உள்ளாயின என்பதுதான்.

வேள்விக்குடி என்ற கல்வெட்டுக் குறிப்பில், பாண்டிய மன்னன் முடுகுடுமி பெருவழுதி என்பவர், வேள்விக்குடி என்ற கிராமத்தை, பிரம்மதேயம் என்ற முறைப்படி, பிராமணர்களுக்கு அளித்தார் என்றும், அதன்மூலம், அந்த சொத்து, அச்சமூகத்தாரால் நீண்டகாலம் அனுபவிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இங்கேதான் நுழைகிறார் களப்பிரன் என்ற காளி அரசன். அவர், அப்பிரதேசத்தில் ஏராளமான நிலங்களை வென்று, அந்நிலங்களை அனுபவித்தவர்களை அங்கிருந்து விரட்டியதாக அந்தக் குறிப்பு கூறுகிறது.

பெளத்த மற்றும் சமண எழுச்சி

களப்பிர மன்னர்களின் ஆட்சி, பெளத்த மற்றும் சமண மதங்கள் கோலோச்சிய ஆட்சி என்று பல வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. பல இலக்கிய படைப்புகள், இக்காலத்தில் பிறந்தன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெருங்காப்பியங்கள் உள்பட, 18 சிறிய இலக்கியங்கள் என்ற தொகுப்பும், இக்காலத்தில் எழுதப்பட்டன.

இதில், விசேஷம் என்னவெனில், இந்த இலக்கியப் படைப்புகளின் ஆசிரியர்கள், பெரும்பாலும் சமண மற்றும் பெளத்த மதங்களைச் சேர்ந்தவர்கள். அதேசமயம், இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

தமிழ் அகராதி எழுதுவதில் பெயர்பெற்ற வையாபுரி பிள்ளை என்பவரின் கருத்து, 18 சிறிய இலக்கியங்களின் தொகுப்பு, களப்பிரர் காலத்தை சேர்ந்தது அல்ல என்கிறது. களப்பிரர் காலத்தில், சமண துறவிகள், தமிழின் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்தினர் என்று குறிப்புகளில் உள்ளன.

கலப்பு மதத்தினர்

களப்பிரர் காலத்தில், இந்து மதம், முற்றிலும் அரச ஆதரவை இழந்துவிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதன்மூலம், அம்மன்னர்கள், பிராமணிய மதத்திற்கு எதிரி என்று கூறப்படுவதை பல வரலாற்று ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். பிற்கால களப்பிரர்கள், சைவம் மற்றும் வைணவ மதங்களை சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஸ்கந்தா அல்லது சுப்ரமணியா என்று அழைக்கப்பட்ட இந்துக் கடவுள், களப்பிரர்களால் போற்றப்பட்டுள்ளார் என்றும் சில குறிப்புகள் தெரிவிப்பதால், இவர்கள் மேற்கூறிய 3 மதங்களையும் பின்பற்றினார்கள் என்ற முடிவுக்கு வர முடிகிறது. களப்பிரர்களின் இந்து சார்பு பற்றி வேறு பல ஆதரவு கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஒடுக்கப்படுதல்

பாண்டிய மன்னன் கடுங்கோன் மற்றும் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு ஆகியோர், களப்பிரர்களை ஒடுக்கினர் என்கின்றன குறிப்புகள். இதில், கர்நாடகத்தின் சாளுக்கியர்களின் பங்கும் உண்டாம். பல்லவ மற்றும் சாளுக்கிய குறிப்புகளிலும், களப்பிரர் பற்றிய தகவல்கள் உள்ளன என்கின்றனர்.

இதை எப்படி நம்புவது?

இடைக்கால பாண்டியர் மற்றும் பல்லவர் கால வரலாற்று குறிப்புகள், களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்றே குறிப்பிடுவதை எப்படி நாம் அப்படியே ஏற்றுக்கொள்வது? இதன்பொருட்டு, நாம் சில விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது.

இதுதான் காரணமாக இருக்குமோ?

தமிழகத்தின் மூவேந்தர்கள் மற்றும் பல்லவர்கள் ஆகியோர், இந்து மத கிளைகளான, சைவம் அல்லது வைணவத்தை தீவிரமாக பின்பற்றியவர்கள் என்றே நாம் அறியப் பெறுகிறோம். அவர்களின் ஆட்சியில், பெளத்தம் மற்றும் ஜைன மதங்கள் ஆங்காங்கே இருந்தன என்றாலும், அம்மதங்கள், முறையான அரச ஆதரவைப் பெற்றிருக்கவில்லை.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் அந்த 2 மதங்களையும் முடக்குவதில் தீவிரமாக செயல்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. சமணர்கள் பலரை, மதுரை போன்ற தமிழக பகுதிகளில் கழுவேற்றிய வரலாறுகளும் உண்டு. களப்பிரர் காலத்தில், வர்ணாசிரம முறை, பெரியளவில் செல்வாக்குப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், களப்பிரர் வீழ்த்தப்பட்ட பிறகு, மூவேந்தர் மற்றும் பல்லவர்கள்,வர்ணாசிரம முறையை விரும்பி நடைமுறைப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான பிரம்மதேயங்களும், சலுகைகளும் அளிக்கப்பட்டனவாம்.

எனவேதான், சைவ மற்றும் வைணவ மதங்களை ஆதரிக்கும், அதேசமயம், பெளத்த மற்றும் சமண சமயங்களை வெறுக்கும் வரலாற்று ஆசிரியர்கள், களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்கின்றனரோ? என கேள்வி எழுப்பப்படுகிறது.

தஞ்சாவூர் என்பதன் பெயர் காரணம்

தஞ்சாவூர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி சில சுவாரஸ்யமான காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றை கொஞ்சம் இங்கே பார்க்கலாமே...

தனஞ்சயராயர் என்ற ஒரு முத்தரைய மன்னரின் நினைவாக, அவ்வூருக்கு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPDIV_hnNB1B5J_3jZNodik5zuFi07dH95sRJrhRgdG4UcwJzTKi39yOplqm0ipo6gchpPspsMqZo8EWjKV5ujPJ2jCUuxvv8iN76zy7eYFKtOKhY0pDXEFBXDMf4I7ZQoNYy9K3TAhFfX/s1600/Tanjavur+paddy.jpg
தஞ்சை பசுமையின் ஒரு காட்சி 
தனஞ்சய ஊர் என்ற பெயர் வழங்கப்பட்டதாம். முத்தரையர் சமூகத்தின் பட்டப் பெயர்களில், தனஞ்சயராயர் என்பதும் ஒன்று என்று இன்றைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தனஞ்சய ஊர் என்ற பெயர்தான், பின்னர் மருவி, தஞ்சாவூர் என்று ஆனதாக ஒரு கருத்து உண்டு.

இன்னொரு கருத்து, முற்றிலும் புராணத்தின் அடிப்படையிலானது. அது என்னவென்றால்,

தஞ்சன் என்ற ஒரு அரக்கனை, இந்துக் கடவுள் விஷ்ணு, இன்றைய தஞ்சை இருக்கும் இடத்தில் வதம் செய்தாராம். எனவே, அந்த அரக்கனின் பெயரையும் சேர்த்து, அந்த ஊரை சுற்றிலும், ஆறுகளும், வயல் வெளிகளும் இருக்கும் காரணத்தால், தஞ்-செய்-ஊர் என்று பெயர்பெற்று, இறுதியாக தஞ்சாவூர் என்று ஆனதாக கருத்துக்கள் உலவுகின்றன.

எதை நம்பலாம் என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். என்னைக் கேட்டால், அந்த ஊரின் பசுமை, செழுமை மற்றும் விளைச்சலின் அடிப்படையிலேயே, ஊருக்கான பெயர் அமைந்திருக்க வேண்டும் என்றே சொல்வேன்.

News source : http://cpbharathi.blogspot.in/

சனி, 12 ஜூலை, 2014

முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம்

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்க, திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் சிவராஜ் தலைமையில் நடந்தது. சங்கர் வரவேற்றார். கூட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் யாத்திரை நிவாஸ், வண்ணத்து பூச்சி பூங்கா, கம்பரசம் பேட்டையில் தடுப்பணை, தோட்டக்கலை, தேசிய சட்டப்பள்ளி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், திருச்சி மாநகராட்சி துணை மேயராக முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தவறாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 83 உயர் அதிகாரிகளை, உச்சநீதிமன்ற உத்தரவுபடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். முத்தரையர் சங்க மாநில உயர்மட்ட பிரதிநிதிகள் மாநாட்டை. திருச்சி நடத்துதல். மாநாட்டுக்கு மீனவர் ஐக்கிய முன்னணி, வேட்டுவ கவுண்டர் பேரவை, ஊராளி கவுண்டர் பேரவை நிர்வாகிகளை அழைப்பது, அம்மா மருந்தகத்தில் இருதய நோய், ரத்த அழுத்தம், ரத்தசோகை, சிறுநீரக கல் போன்ற நோய்களுக்கு, பாதி விலையில் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தல் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News Source : DINAMALAR

வெள்ளி, 11 ஜூலை, 2014

நக்கீரனின் விசமம்...!



நக்கீரனின் விசமம்...!



ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளையும் (!) தாங்கி வாரமிருமுறை பொய்யையும், புரட்டையும் சுமந்து வெளிவரும், 2G ஊழலில் வளர்ந்த " ந‌க்கீரன்" 2014 ஜூலை 09-11 இதழில் "ஜாலி ரேப் - கரூர் பயங்கரம்" என்ற தலைப்பில் அவசியமே இல்லாமல் முத்தரையர்களை வம்பில் இழுத்துவிட்டிருக்கிறது, நக்கீரனின் திருச்சி பகுதி நிருபராய் பகுதி நேரமும், ஊழல் அரசியல்வாதிகளின் முழு நேர எடுபிடியாகவும் இருக்கும் ஜெ.டி.ஆர் எழுத்தில் விசமத்தை புகுத்தி எழுதியிருக்கும் இந்த கட்டூரை நக்கீரனின் விசமத்தனத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த மாணவி வினிதா பாலியல் வல்லுறவிற்க்கு பிறகு கொலை செய்யப்பட்டதற்க்கும், குளித்தலையை அடுத்த பரளியை சேர்ந்த வேறு ஒரு மாணவி பாலியல் வல்லுறவிற்க்கு ஆளனதற்க்கும், இந்த பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு எந்த தொடர்பும் இல்லாமல் "முத்துராஜா" சமூகம் குறித்து தனது விசமத்தை பதிவு செய்திருக்கிறது, 

மாணவி வினிதா மீதான பாலியல் வல்லுறவில் / கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை, அந்த மாணவி சார்ந்த அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலரிடமும் விசாரணை நடந்து வருகிறது என்றே இதுவரை காவல்துறை அறிவித்துள்ளது, இந்நிலையில் சம்பவம் நடந்த பிச்சம்பட்டியில் அன்றைய தினம் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்ததாம், அன்று "முத்துராஜா"க்களின் மண்டகாபடியாம், அதனால் ரோட்டில் ஜனநடமாட்டம் அதிகம் இருக்கும் என்ற தைரியத்தில் தனது மகளை வேலைக்கு அனுப்பியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சொல்லியிருக்கிறார்" இதுவரை சரியான பாதையில் சென்ற எழுத்து அடுத்த வரியில் திசை மாறுகிறது, (காண்க படம்) சரி முத்துராஜாக்கள் மண்டகாபடிக்கும் நடந்த சம்பவத்திற்க்கும் என்ன சம்பந்தம்..? வேண்டுமென்றே எங்கள் சாதியின் பெயரை இணைத்து இந்த கட்டூரை எழுதியதன் மூலம் ஒட்டுமொத்தமாக "முத்துராஜா"க்கள்தான் இந்த தவறை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் எழுதி தனது அறிப்பை தீர்த்துக்கொண்டுள்ளது " நக்கீரன்" இந்த குற்ற செயலில் ஈடுபட்டது யாராக இருந்தாலும், ஏன் நான் சார்ந்த முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் பொது இடத்தில் தூக்கிட்டு கொல்லப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது, அதற்காக ஆதரமற்ற, பொய்யையும், புரட்டையும் எழுதி விசமத்தை, சாதிய வன்முறைக்கு வித்திடும் இதுபோன்ற கட்டூரைகளை தொடர்ந்து நக்கீரன் எழுதுமேயானால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

புதன், 2 ஜூலை, 2014

அய்யா பழ. நெடுமாறனுக்கு ஒரு கடிதம்...!



அய்யா பழ. நெடுமாறனுக்கு ஒரு கடிதம்...!

"தமிழர் தேசிய முன்னணி" என்ற புதிய அரசியல் கட்சி துவங்கி அதன் தலைவராக பொருப்பேற்க்கும் தங்களுக்கு "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின்" சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

இதன் துவக்கவிழாவில் "சாதிசங்கங்களில்" இருப்பவர்களையும்,அது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களையும், தமது பெயரோடு சாதிய பட்டங்களை இணைத்தவர்களையும், இந்த இயக்கத்தில் இணைத்துக்கொள்வதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள் நல்ல விசயம், இந்த‌ நிலைபாட்டை நீங்கள் இன்று "சாதியாளர்களிடமிருந்து" நிதிபெற்று துவங்கி இருக்கும் கட்சியில் இருந்து சொல்லுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது,

60 க்கும் மேற்பட்ட இயக்கங்களை இணைத்து துவங்கி இருக்கும் இந்த பயணம் எதை நோக்கியது ? வழக்கம்போல இங்கு போலி திராவிட சித்தாந்தம் தாங்கிய "சாதி மறுப்பு" எனும் பொய்யான வேசம்தான், நீங்கள் ஈழப்பிரச்சனைகளுக்கு பிறகு அரசியலில் தங்கி இருக்க கிடைத்திருக்கும் ஆயுதமா..? 

நீங்கள் எடுக்கவிரும்பும் இந்த ஆயுதம் துருபிடித்த திராவிட சிந்தாந்த பிதாமகன் "இராமசாமி நாயக்கர்" தொடங்கி பலராலும் கையாளப்பட்டு "தமிழனின்" கலாச்சாரத்தை மட்டும் பதம்பார்த்துவிட்டு, அவரவர் சார்ந்த சாதியை வழப்படுத்திவிட்டு ஒழிந்துகொண்டுவிடுகிறது, அதன் தொடர்ச்சியைதான் இன்று நீங்கள் கையிலெடுத்து இருக்கிறீர்கள் அதே மறைமுகமான "சாதிபற்றாளர்களின்" துணையுடன்.

 உங்களுக்கு உண்மையில் துணிவிருந்தால், உங்களோடு இணைந்திருப்பவர்கள் அனைவரும் நீங்கள் சொல்லியிருக்கும் இந்த கருத்தில் உடன்பட்டவர்களாக இருந்தால், அவரவர் குடும்பத்தாரின் கைகளில் இருக்கும் " சாதி சான்றிதழ்களை" கொண்டுவர செய்து பத்திரிக்கையாளர்கள், பொதுவானவர்கள் முன்னிலையில் அதனை அழித்துவிடுங்கள் உங்களை நேர்மையாளராக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

எல்லாவற்றிற்க்கும் மேலாக "சாதிமறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க போவதாகவும்" சொல்லியிருக்கிறீர்கள் நாங்களும் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறோம், உங்களோடு இணைந்து இந்த இயக்கத்தில் பயணிப்பவர்களின் குடும்பத்தாரின் பட்டியலை, பொதுவில் வெளியிடுங்கள், சாதிமறுப்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அந்த பட்டியலில் இருப்பவர்கள் குடும்பத்தில் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ ஆயிரமாயிரமானவர்களை "சாதியை" மறுக்கவைத்து நாங்கள் கொண்டுவந்து உங்கள் முன்னால் நிறுத்துகிறோம்...

முடிவாக வீழ்ந்துவிட்ட திராவிடத்தின் உப்புசப்பற்ற ஒரு விசயத்தை கையிலெடுத்து அரசியலில் உங்கள் நிலை நிறுத்திக்கொள்ளலாம் என்று பகல்கனவில் திளைக்கவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

தங்கள்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்