சாதாரணமாக, பள்ளியில் வரலாற்றுப் பாடம் படித்த மாணவர்கள், களப்பிரர்கள் என்பவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்களின் காலம்தான், தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையிலேயே அவர்களின் காலம் இருண்ட காலமா என்பதை, நமக்கு கிடைத்த சில வரலாற்று தகவல்களை வைத்து அலசுவோமா?
ஆட்சி காலம்
கி.பி. 3 முதல் கி.பி. 6ம் நூற்றாண்டு வரை, பண்டைய தமிழகப் பகுதியை களப்பிரர்கள் ஆண்டார்கள். அவர்கள், மூவேந்தர்களான சேர, சோழ மற்றும் பாண்டியர்களை வெற்றி கொண்டார்கள். இவர்களின் காலம், தமிழகத்தின் இடையாட்சிக் காலம் என்று அழைக்கப்படுகிறது.
இவர்களின் பூர்வீகம் மற்றும் தோற்றம் என்ன என்பதைப் பற்றி அறியலாமென்று பார்த்தால், அதைப் பற்றிய சரியான குறிப்புகள் வரலாற்றில் இல்லை என்றே தெரிவிக்கிறார்கள். ஏனெனில், அவர்களைப் பற்றி அறிய உதவும் கலை மற்றும் நினைவுச் சின்னங்கள், போதுமான அளவில் கிடைக்கப்பெறவில்லை. ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கவும் கூடும்.
இவர்களைப் பற்றி அறிய...
இவர்களைப் பற்றி ஓரளவுக்கு அறிய நமக்கு உதவுபவை, வேறு
புத்தர்
|
சேர, சோழ மற்றும் பாண்டியர்களைப் பற்றி அறிவதற்கு, நமக்கு கிடைக்கும் ஆதார வளங்களைப் போல், களப்பிரர்களைப் பற்றி அறிவதற்கு கிடைக்காததால், இவர்களை அடையாளப்படுத்துவதென்பது, உண்மை வரலாற்று ஆசிரியர்களுக்கு சிக்கலான பணியாகவே இருக்கிறது.
யார் இவர்கள்?
களவர் என்ற இடத்துடன், களப்பிரர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்த களவர் இனத்தின் தலைவர்கள், சங்க இலக்கியங்களில், பாவத்திரியை சேர்ந்த திரையன் என்றும், திருப்பதி அல்லது வேங்கடத்தைச் சேர்ந்த புல்லி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கி.பி. 3ம் நூற்றாண்டு வாக்கில், களவர்கள் இருந்த தொண்டை மண்டலம் பகுதியில், சாதவாகன வம்சம் வீழ்ந்து, பல்லவர்களின் எழுச்சித் தொடங்கியப் பிறகு, அரசியல் குழப்பம் நிலவியதாம். இதனால் இவர்கள் இடம்பெயரும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். இவர்கள், கொண்டுபலூர் பகுதியைச் சேர்ந்த முத்தரையர் வம்சத்திலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்றும் சில வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
சோழர் வரலாறு எங்கே?
உறையூரை தங்களின் தலைநகராக கொண்டு ஆண்ட சோழர்களின் வரலாறு கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ம் நூற்றாண்டு வரை நமக்கு தெளிவாக கிடைக்கப்பெறவில்லை. இதற்கு கூறப்படும் காரணம், அந்த காலகட்டத்தில், அவர்களின் பகுதியில் களப்பிரர்கள் கோலோச்சி வந்தனர் என்பதே.
புத்த தத்தா
பாலி மொழியின் சிறந்த எழுத்தாளர் "புத்த தத்தா" உறையூரைச் சேர்ந்தவர். அவரின் சமகாலத்தில், காவேரிப்பட்டினத்தை தலைநகராக கொண்டு, பெளத்த மதத்தை பின்பற்றிய அச்சுதவிக்ரந்தா என்ற களப்பிர மன்னன் ஆண்டு வந்ததாகவும், அவர், மூவேந்தர்களை சிறைபிடித்து வைத்திருந்ததாகவும் சில தமிழ் இலக்கிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மகாவீரர்
|
சமூக மாற்றம்
களப்பிரர் ஆட்சியின் முக்கிய விளைவே, அந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர், அதுவரை தமிழகத்தில் நிலவிய சில பண்பாட்டு முறைகள் மாற்றத்திற்கு உள்ளாயின என்பதுதான்.
வேள்விக்குடி என்ற கல்வெட்டுக் குறிப்பில், பாண்டிய மன்னன் முடுகுடுமி பெருவழுதி என்பவர், வேள்விக்குடி என்ற கிராமத்தை, பிரம்மதேயம் என்ற முறைப்படி, பிராமணர்களுக்கு அளித்தார் என்றும், அதன்மூலம், அந்த சொத்து, அச்சமூகத்தாரால் நீண்டகாலம் அனுபவிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இங்கேதான் நுழைகிறார் களப்பிரன் என்ற காளி அரசன். அவர், அப்பிரதேசத்தில் ஏராளமான நிலங்களை வென்று, அந்நிலங்களை அனுபவித்தவர்களை அங்கிருந்து விரட்டியதாக அந்தக் குறிப்பு கூறுகிறது.
பெளத்த மற்றும் சமண எழுச்சி
களப்பிர மன்னர்களின் ஆட்சி, பெளத்த மற்றும் சமண மதங்கள் கோலோச்சிய ஆட்சி என்று பல வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. பல இலக்கிய படைப்புகள், இக்காலத்தில் பிறந்தன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெருங்காப்பியங்கள் உள்பட, 18 சிறிய இலக்கியங்கள் என்ற தொகுப்பும், இக்காலத்தில் எழுதப்பட்டன.
இதில், விசேஷம் என்னவெனில், இந்த இலக்கியப் படைப்புகளின் ஆசிரியர்கள், பெரும்பாலும் சமண மற்றும் பெளத்த மதங்களைச் சேர்ந்தவர்கள். அதேசமயம், இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
தமிழ் அகராதி எழுதுவதில் பெயர்பெற்ற வையாபுரி பிள்ளை என்பவரின் கருத்து, 18 சிறிய இலக்கியங்களின் தொகுப்பு, களப்பிரர் காலத்தை சேர்ந்தது அல்ல என்கிறது. களப்பிரர் காலத்தில், சமண துறவிகள், தமிழின் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்தினர் என்று குறிப்புகளில் உள்ளன.
கலப்பு மதத்தினர்
களப்பிரர் காலத்தில், இந்து மதம், முற்றிலும் அரச ஆதரவை இழந்துவிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதன்மூலம், அம்மன்னர்கள், பிராமணிய மதத்திற்கு எதிரி என்று கூறப்படுவதை பல வரலாற்று ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். பிற்கால களப்பிரர்கள், சைவம் மற்றும் வைணவ மதங்களை சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஸ்கந்தா அல்லது சுப்ரமணியா என்று அழைக்கப்பட்ட இந்துக் கடவுள், களப்பிரர்களால் போற்றப்பட்டுள்ளார் என்றும் சில குறிப்புகள் தெரிவிப்பதால், இவர்கள் மேற்கூறிய 3 மதங்களையும் பின்பற்றினார்கள் என்ற முடிவுக்கு வர முடிகிறது. களப்பிரர்களின் இந்து சார்பு பற்றி வேறு பல ஆதரவு கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
ஒடுக்கப்படுதல்
பாண்டிய மன்னன் கடுங்கோன் மற்றும் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு ஆகியோர், களப்பிரர்களை ஒடுக்கினர் என்கின்றன குறிப்புகள். இதில், கர்நாடகத்தின் சாளுக்கியர்களின் பங்கும் உண்டாம். பல்லவ மற்றும் சாளுக்கிய குறிப்புகளிலும், களப்பிரர் பற்றிய தகவல்கள் உள்ளன என்கின்றனர்.
இதை எப்படி நம்புவது?
இடைக்கால பாண்டியர் மற்றும் பல்லவர் கால வரலாற்று குறிப்புகள், களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்றே குறிப்பிடுவதை எப்படி நாம் அப்படியே ஏற்றுக்கொள்வது? இதன்பொருட்டு, நாம் சில விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது.
இதுதான் காரணமாக இருக்குமோ?
தமிழகத்தின் மூவேந்தர்கள் மற்றும் பல்லவர்கள் ஆகியோர், இந்து மத கிளைகளான, சைவம் அல்லது வைணவத்தை தீவிரமாக பின்பற்றியவர்கள் என்றே நாம் அறியப் பெறுகிறோம். அவர்களின் ஆட்சியில், பெளத்தம் மற்றும் ஜைன மதங்கள் ஆங்காங்கே இருந்தன என்றாலும், அம்மதங்கள், முறையான அரச ஆதரவைப் பெற்றிருக்கவில்லை.
நாயன்மார்களும், ஆழ்வார்களும் அந்த 2 மதங்களையும் முடக்குவதில் தீவிரமாக செயல்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. சமணர்கள் பலரை, மதுரை போன்ற தமிழக பகுதிகளில் கழுவேற்றிய வரலாறுகளும் உண்டு. களப்பிரர் காலத்தில், வர்ணாசிரம முறை, பெரியளவில் செல்வாக்குப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், களப்பிரர் வீழ்த்தப்பட்ட பிறகு, மூவேந்தர் மற்றும் பல்லவர்கள்,வர்ணாசிரம முறையை விரும்பி நடைமுறைப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான பிரம்மதேயங்களும், சலுகைகளும் அளிக்கப்பட்டனவாம்.
எனவேதான், சைவ மற்றும் வைணவ மதங்களை ஆதரிக்கும், அதேசமயம், பெளத்த மற்றும் சமண சமயங்களை வெறுக்கும் வரலாற்று ஆசிரியர்கள், களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்கின்றனரோ? என கேள்வி எழுப்பப்படுகிறது.
தஞ்சாவூர் என்பதன் பெயர் காரணம்
தஞ்சாவூர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி சில சுவாரஸ்யமான காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றை கொஞ்சம் இங்கே பார்க்கலாமே...
தனஞ்சயராயர் என்ற ஒரு முத்தரைய மன்னரின் நினைவாக, அவ்வூருக்கு
தஞ்சை
பசுமையின் ஒரு காட்சி
|
இன்னொரு கருத்து, முற்றிலும் புராணத்தின் அடிப்படையிலானது. அது என்னவென்றால்,
தஞ்சன் என்ற ஒரு அரக்கனை, இந்துக் கடவுள் விஷ்ணு, இன்றைய தஞ்சை இருக்கும் இடத்தில் வதம் செய்தாராம். எனவே, அந்த அரக்கனின் பெயரையும் சேர்த்து, அந்த ஊரை சுற்றிலும், ஆறுகளும், வயல் வெளிகளும் இருக்கும் காரணத்தால், தஞ்-செய்-ஊர் என்று பெயர்பெற்று, இறுதியாக தஞ்சாவூர் என்று ஆனதாக கருத்துக்கள் உலவுகின்றன.
எதை நம்பலாம் என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். என்னைக் கேட்டால், அந்த ஊரின் பசுமை, செழுமை மற்றும் விளைச்சலின் அடிப்படையிலேயே, ஊருக்கான பெயர் அமைந்திருக்க வேண்டும் என்றே சொல்வேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக