புதன், 25 பிப்ரவரி, 2015

நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஒரு கடிதம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் இயக்கம் சார்பாக "இன எழுச்சி அரசியல் மாநாடு" மே 23, 2015 அன்று திருச்சி மாநகரில் ஏற்பாடு செய்திருப்பதாக அறிவிப்பினை கண்டிருந்தேன், அன்றைய தினத்தில் தமிழகத்தின் பெரும்பாண்மை சமூகமாக "முத்தரையர்களின்" பெருமைமிகு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள், அதே திருச்சி மாநகரின் மத்தியில் கம்பீரமாய் வீற்றிருக்கும் எமது பேரரசருக்கு மரியாதை செலுத்தும் நாளாய் இருப்பதனால் தமிழகத்தின் பலப்பகுதிகளில் இருந்தும் ஆண்டுதோறும் மே 23 அன்று பல ஆயிரம் மக்கள் திரளும் நாளாகவும் இருப்பதனால் தங்களின் இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்க்கு அந்த நாளில் திருச்சி மாநகர் சரியாக இருக்குமா..? என்பதனை உங்கள் கவனத்திற்க்கு கொண்டுவர நினைக்கிறேன்.
தாங்கள் சமீபத்தில் தொடங்கிய வீர தமிழர் முன்னணி சுவரொட்டியில் எமது பெருமைமிகு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் படத்தினையும் இணைத்தமைக்காக நன்றியினையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் விடயம் குறித்து தாங்கள் நல்ல முடிவினை மேற்கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.
நன்றி
அன்புடன்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
E-mail to : naamtamizhar@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக