தஞ்சாவூர் : தஞ்சையில், முத்தரையர்
இளைஞர் எழுச்சி இயக்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பொதுச்செயலாளர் மூர்த்தி,
தலைமை வகித்தார். நிர்வாகி பெரியகுமார், முன்னிலைவகித்தார்.முத்தரையர்களுக்கு தனி இட
ஒதுக்கீடாக, 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு வரும் ஜூன் மாதத்தில், தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
நடத்துவது. வரும் சட்டசபை தேர்தலில் முத்தரையர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத, அரசியல்
கட்சிகளை புறக்கணிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
News Source : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக