ஆலங்குடி, : புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயசமுத்திரத்தில் முத்தரையர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திருமலைநம்பி தலைமை வகித்தார். தமிழரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட அளவில் அனைத்து கிராமங்களிலும் சங்கத்தின் கிளைகளை வலுப்படுத்துவது, ஆண்டுதோறும் முத்தரையர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் பரிசளிப்பு விழாவை இந்தாண்டு ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திர தினத்தன்று நடத்துவது, இந்த விழாவின் குழுத் தலைவராக திருமலைநம்பி, செயலாளராக சுந்தர்ராஜ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்து நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட அளவில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
News Source : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக