அதிமுக உறுப்பினர் அட்டைகளை திருப்பி கொடுக்க முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான விஜயபாஸ்கர் கறம்பக்குடி ஒன்றியக்குழுத் தலைவர் கெங்கையம்மாள் சொக்கலிங்கம் மற்றும் கவுன்சிலர்களிடம் அவர்கள் சார்ந்துள்ள முத்தரையர் சமூகத்தை இழிவாக பேசியதாக எழந்த புகாரின் அடிப்படையில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை கோரி முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 5ந் தேதி புதுக்கோட்டையில் தடையை மீறி ஆர்பாட்டம் செய்தும் கட்சி அலுவலகம் மீது கல்வீசியும் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
அன்றே கட்சியின் விசாரனைக்குழு அமைச்சர் பூனாட்சி தலைமையில் அமைக்கப்பட்டு விசாரனை நடந்த நிலையில் நேற்று புதன்கிழமை அமைச்சர் மீது புகார் கறிய கெங்கையம்மாள், சொக்கலிங்கம் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியானது.
இதனால் கொதிப்படைந்த அச்சமூக சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவரங்குளத்தில் கூட்டமைப்பு தலைவர் ஜெயக்குமார் தலைமையில் இளம் சிங்கங்களின் எழச்சி இயக்க தலைவர் சஞ்சய்காந்தி முன்னிலையில் நடந்தது. பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டது.
ஜாதி பெயரை இழிவாக பேசய அமைச்சர் மீது நடவடிக்கை கோரி ஆளுநரை சந்தித்த மனு கொடுப்பது. அடுத்த கட்ட போராட்டம் பற்றிய விரிவான ஆலோசனைக் கூட்டத்தை கொத்தமங்கலத்தில் நடத்துவது. அதிமுகவில் இருக்கும் முத்தரையர் இன உறுப்பினர்களை அக்கட்சியின் உறுப்பினர் அட்டைகளை திருப்பிக் கொடுக்க வலியுறுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இரா.பகத்சிங்
News source : http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=154795
நன்றி ரத்த சொந்தமே..... இந்த முயற்சி நல்ல விழிப்புணர்வை ஏர்படுத்தி இருக்கு
பதிலளிநீக்குநன்றி ரத்த சொந்தமே..... இந்த முயற்சி நல்ல விழிப்புணர்வை ஏர்படுத்தி இருக்கு
பதிலளிநீக்கு