Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஸ்ரீரங்கம் திருமங்கையாழ்வார் வேடுபறி எனும் முத்தரையர் பெருவிழா...!!!

ஸ்ரீரங்கம் திருமங்கையாழ்வார் வேடுபறி எனும் முத்தரையர் பெருவிழா...!!!































"வாடினேன், வாடி வருந்தினேன், மனத்தால் பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன், கூடி இளையவர்தம்மோடு அவர்தரும் கலவியே கருதி ஓடினேன், ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து நாடினேன், நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணாவெனும் நாமம்" என்று நாராயணனின் நாமத்தை பாடிய திருமங்கையாழ்வாரிடம் "ஓம் நமோ நாராயணா" என்னும் பிரணவ மந்திரத்தை அந்த நாராயணனே உபதேசித்த பெரும்தளமாம் ஸ்ரீ ரங்கத்தில் நேற்று (28.12.2015) நடந்த ராப்பத்து எட்டாம் நாள் விழாவான "வேடுபறி விழா" ஒவ்வொரு முத்தரையனும் வாழ்வில் ஒருமுறையேனும் கலந்துகொள்ள வேண்டிய அவசியமான ஒரு திருவிழா.
விழாவிற்க்கு துவக்கமாக திருமங்கையாழ்வாரின் மரபில் வந்த ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெருவில் வசிக்கும் காவல்காரர் குடும்பமான "பெரியண்ணன் (எ) அரசு முத்துராஜா" குடும்பத்தின் இளைய வாரிசுகள் தங்கள் வீட்டிலிருந்து தாரை, தம்பட்டை, மேளதாளங்கள் உள்ளிட்ட அத்தனை இசைக்கருவிகளும் முழங்க,விண்ணதிரும் வாணவெடிகளோடு, வாள்வீச்சும், சுருள் கம்பியும், வேல்கம்பியும், கம்பும் சுற்றி சுழல "வாள்களோடு" புறப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் முன்னும் பின்னும் அணிவகுக்க‌, தெருமுனையில் இருக்கும் கோயிலுக்கு சென்று வழிப்பட்ட பிறகு தலைப்பாகையை சூடிக்கொண்டு "திருமங்கையாழ்வாராய்" அவர்தம் வாரிசுகள் அதே அத்தனை இசைகருவிகளும் முழங்க ஆயிரக்கணக்கான முத்தரையர் மக்கள் புடைசூழ வீதி வீதியாக வலம் வருகிறார்கள், திரண்டு நின்று வழிப்படும் மக்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு ஒவ்வொருவருக்கும் பதில் மரியாதையை செய்துக்கொண்டே வருகிறார் திரு. பெரியண்ணன் முத்துராஜா பல்வேறு வீதிகளை கடந்து ஸ்ரீரங்க நாதரின் ஆலய முகப்பை அடைகின்றனர், 

ஆலயத்தில் கூடி நிற்க்கும் ஆயிரமாயிரம் வெளிநாட்டவர், உள்நாட்டவர் என்று அத்தனை பேரும் பரவசத்தோடு கண்டு மெய்மறந்து நிற்க ஆலயத்துக்குள் ஆர்பாட்டத்தோடு நுழைகிறது "திருமங்கயாழ்வாரின் முத்தரையர் பெரும்படை" உள்ளே நுழைந்த நேராக சந்துனு மண்டபத்தில் வீற்றிருக்கும் திருமங்கையாழ்வாரிடம் ஆயுதங்களை ஒப்படைத்து, அவரையும் கூட்டிக்கொண்டு ஆரியப்பட்டாள் வாசல் வழியாக மணல்வெளிக்கு வருகிறார்கள். 

திருமாலுக்கு தொண்டு செய்தே தனது சொத்துக்களை இழந்த நீலன் என்னும் திருமங்கை மன்னன் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இந்த ஆலயத்தை கட்ட துவங்கி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஆலயப்பணி முழுமை பெறாமல் போய்விடுமோ என்று அஞ்சி செல்வந்தர்களிடம் வழிப்பறி செய்தாவது ஆலயப்பணியை நிறைவு செய்திட துணிகிறான், திருமங்கை மன்னனை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் விளையாட்டு காட்டி மணமகன் வேடம் பூண்டு வீதியில் வர அவரின் பொருட்களை வழிப்பறி செய்கிறார் திருமங்கை மன்னர், எல்லா ஆபரணங்களையும் பறித்தவரால் மணமகன் வேடத்தில் இருந்த பெருமாள் காலில் அணிந்திருந்த நகையை மட்டும் கழற்ற முடியவில்லை, பல்லால் கடித்து கழற்ற முயன்றபோது பகவானின் ஸ்பரிசம் பட்டு தான் வழிப்பறி செய்துக்கொண்டு இருப்பது பெருமானிடம் என்பதை உணர்ந்த நீலன் என்னும் திருமங்கை மன்னன் பெருமாளிடம் சரணகதியாகிறார். 

அப்போதுதான் "ஓம் நமோ நாராயணா" எனும் மந்திரத்தை உபதேசித்து திருமங்கை மன்னனை தன்னுடைய ஆழ்வாராய் பெருமான் ஏற்றுக்கொள்கிறார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் ஆலயத்தின் உள்ளேயுள்ள மணற்வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்பு நடந்தேறியது. இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் காண கண்கோடி வேண்டும்,
இந்த நிகழ்வுகளின் இறுதியில் முத்தரையர் மக்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு தொடங்குகிறது பெரியண்ணன் அரசு மற்றும் அவரது குடும்பத்தார் சுட்டிக்காட்டும் அத்தனை முத்தரையர் மக்களுக்கும் பரிவட்டம் கட்டி பகவாணின் ஸ்பரிசம்பட்ட காய்ந்த மாலைகள், பெருமானின் நெற்றியில் பூசப்பட்டிருந்த சந்தனம் அத்தனையும் வழங்கி மரியாதை செய்யப்படுகிறது, இந்த ஒரு நிகழ்வில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் முத்தரையர் மக்கள் தவிர வேறு ஒருவருக்கும் இந்த மரியாதை வேடுபறி நிகழ்வில் கிடைக்காது, ( நேற்றைய நிகழ்வில் வெளி மாவட்டத்தில் இருந்து பரிவட்டம் கட்டிய பெருமை என்னை (சஞ்சய்காந்தி அம்பலக்காரர்) மட்டுமே சேரும்.. :) ) இறுதியில் பெருமான் ஆயிரங்கால் மண்டபம் செல்ல வேடுபறி இனிதே நிறைவுற்றது.

ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் இருந்து ராப்பத்து நிகழ்வின் எட்டாம் நாள் வேடுபறி நிகழ்ச்சி இனிதே நடந்துகொண்டு இருக்கிறது. முதல்முறையாக இந்த ஆண்டுதான் நான் கலந்துகொண்டேன் என்னோடு சகோதரர் V.J.M.ஹரி, தங்க‌.கோபிநாத், ஆறுமுகம், முருகன், P.நவனீதன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள் எங்களுக்கு பரிவட்டம் கட்டி அழகுபார்த்த  ஸ்ரீரங்கம் சங்கர் அண்ணனுக்கு இந்த தருணத்தில் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

இனி ஒவ்வொரு ஆண்டும் வேடுபறி நிகழ்வில் பெருமிதத்தோடு கலந்துகொள்வோம். 

இறுதியாக : திருமங்கை மன்னன் வழிப்பறி செய்வதனால் அவர் வேறு மரபை சேர்ந்தவர் என்ற தவறான புரிதல் பரவலாக இருப்பதை காண முடிகிறது, அவர் வழிப்பறி செய்தது பெருமானுக்கு ஆலயம் அமைத்திடதானேயன்றி வேறு நோக்கம் இல்லை, அவர் முற்று முழுதாக "முத்தரையர்" சமூக்த்தின் பெருமைமிகு மன்னன் மற்றும் ஆழ்வார் என்பதில் மாற்றுக்கருத்து இனியும் இங்கு நீடிக்ககூடாது ஆகவே வரலாற்றை சரியாக புரிந்து, புரியாதவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது ஒவ்வொரு முத்தரையரின் கடமை என்பதை உணரவேண்டும். 

பக்தியுடன்.... 

சஞ்சய்காந்தி அம்பலக்காரர் 



 திரு. பெரியண்ணன் (எ) அரசு முத்துராஜாவுடன் நான்....

வியாழன், 24 டிசம்பர், 2015

வேடுபறி உற்சவம்: முத்தரையர் விழா



திருமங்கையாழ்வார் (முத்தரையர்) தொடங்கிய திருவிழா...
அரங்கனின் அத்யயன உற்சவம்.(வைகுண்ட ஏகாதசி)
வருகின்ற திங்கட்கிழமை (28.12.2015) அன்று வேடுபறி நிகழ்ச்சி ஶ்ரீரங்கம் ரெங்க நாத சுவாமி திருக்கோவிலில் நடக்க இருக்கிறது.
//ஏகாதசி
இந்த மிகவும் முக்கியமான திருவிழா, தமிழ் மாதம் மார்கழியில் (டிசம்பர் – ஜனவரி) முழு இருபத்தொரு நாட்கள் பகல் பத்து, இரவு பத்து என இரண்டாகப் பிரிந்து ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி தினத்தில், ரங்கநாதப் பெருமாள் அற்புதமான அலங்கார ஆடையணிந்து, பரமபத வாசல் வழியாக ஒரு மகத்தான ஊர்வலத்தில் பவனி வந்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் இலட்சக்கணக்கான பக்தர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் மற்றும் பரவசத்திற்கிடையே ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தை அடைகிறார். இந்த தருணம், கோயிலில் நடத்தப்படும் அனைத்து திருவிழாக்களிலும் உச்சித் தருணமாகும். எல்லா நாட்களில் இந்த நாளில் மட்டுமே ரங்கநாத பெருமாள் உண்மையான, நிஜமான இராஜாவாகிறார் மற்றும் இவர், ஶ்ரீ ரங்கராஜர் எனப்படுகிறார். பிரத்யேகமாக எழுப்பப்பட்டு, அருமையாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல் மூலம் விஸ்தரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஆயிரங்கால் மண்டபத்தில் தனது தெய்வத்திரு தர்பாரை ரங்கராஜா நடத்துகிறார், நாள் முழுக்க நாளாயிர திவ்யப்பிரபந்தம் ஓதப்படுகிறது மற்றும் பின்னிரவில் மட்டுமே அவர் கோயிலுக்கு திரும்புகிறார். அலைமோதும் பக்தர்கள் கூட்டம், விடியற்காலை முதல் நள்ளிரவு வரை விடாமல் வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். இடைவிடாமல் பஜனைகளில் ஈடுபட்டுக்கொண்டும், நாள்முழுக்க உண்ணா நோண்பிருந்து கொண்டும் மற்றும் இரவு முழுக்க இடையறாமல் தூங்காமல் விழித்துக் கொண்டுமிருக்கும் பக்தர்கள் குழுவின் துடிப்புமிக்க ஜால்ரா இசைக்கு பாடிக்கொண்டும் மற்றும் ஆடிக்கொண்டும் இருந்தனர். உண்மையிலேயே, இது கடவுள்கள் காணவேண்டிய காட்சியாகும். உண்மையிலேயே மண்ணுலகில் ஒரு சொர்க்கலோகமாகும்! //
// வேடுபறி உற்சவம்: முத்தரையர் விழா
திருமங்கை மன்னன் தன் சொத்து முழுவதையும் ரங்கநாதரின் திருப்பணிக்கே செலவிட்டார். ஒருசமயம்,
கோவிலுக்கு திருமதில் எழுப்பும் பணியில் ஈடுபட்டார். பணம் காலியாகி விட்டது.
எனவே பணக்காரர்களிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்தார். அவரை நல்வழிப்படுத்த விரும்பிய பெருமாள், தாயாருடன் புதுமணத் தம்பதி
போல ஒரு மாட்டு வண்டியில் வந்தார். திருமங்கை மன்னன், அவர்களைத் தடுத்து, அவர்களிடம் இருந்த பொன், பொருளைக் கழற்ற வைத்தார். மணமகனின் கால் விரலில் கிடந்த மெட்டியை கழற்ற முயன்றார்.
முடியாததால், பல்லால் கடித்து இழுக்க முயன்றார். திருமாலின் திருவடி ஸ்பரிசத்தால், மன்னனுக்கு ஞானம் உண்டானது. உடனே "வாடினேன் வாடி' என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடினார். இதையடுத்து, திருமங்கை மன்னனை, பெருமாள் ஆழ்வாராக ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த நன்னாளை "வேடுபறி உற்சவம்' என்ற பெயரில் கொண்டாடுவர்.
ஆழ்வாராக திருமங்கை மன்னனை ஏற்ற மகிழ்ச்சியில், பெருமாள் குதிரை வாகனத்தில் அங்குமிங்கும் துள்ளி விளையாடுவார். டிச. 28 ல் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. //

புதன், 23 டிசம்பர், 2015

நன்றி..! நன்றி..!!

நன்றி..! நன்றி..!!

நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்க்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்றோம், மிகுந்த கவனமுடன் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தவறு நேர்ந்திருக்கிறது, இரண்டொரு நாளில் சரி செய்துவிடுவோம் என்று உத்திரவாதம் தந்திருக்கிறார்,

இந்த பிரச்சனையை மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னவுடன் வேறு பணிகளை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு அழைத்தவுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த திரு. எஸ்.எம்.மூர்த்தி அவர்களுக்கும், புலவர் திரு. கூ.மாரிமுத்து அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை உரித்தாக்குகிறோம். 

-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
-----------------------------------------------------------

நாள் : 22/12/2015

பெறுனர் :
உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம்

அனுப்புதல் :
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
சிவன் கோவில் தெரு, பழஞ்சூர் -அஞ்சல்,
பட்டுக்கோட்டை-தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம் - 614 701
Mobile No : 0091-9159168228
E-mail : sanjai28582@gmail.com


மதிப்பிற்குறிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,
வணக்கம், நம்முடைய தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்காக ஏற்படுத்தப்பட்ட http://www.thanjavur.tn.nic.in/ என்ற இந்த இணையதளத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தினுடைய, நகரினுடைய வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது அதில் பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இல்லாத, ஆதாரமற்ற வரலாற்று செய்தியாக "தஞ்சன்" என்ற அரக்கன் இருந்தானாம், என்ற ரீதியில் சிறுவர்கதை போல வரலாறு எழுதப்பட்டு ஒரு இராஜ வம்சத்தில் வரலாற்றை மறைக்கும் முயற்சியை உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நடத்தி இருக்கிறார்கள்,
தஞ்சாவூர் என்பது தனஞ்சயன் முத்தரையர் என்ற முத்தரையர் அரசனுடைய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நகரம் என்று பல்வேறு வரலாற்று அறிஞர்களும் எழுதியிருக்கிறார்கள், அந்த வரலாற்றை கவனத்தில் கொள்ளாமல் பகுத்தறிவுக்கு ஒவ்வாத அரக்கன் கதையை அளக்கும் இடமாக மாவட்ட நிர்வாகத்தின் இணையதளம் காட்சியளிப்பது இந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் மிகுந்த வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.

அதே வரலாற்று பக்கத்தில் தஞ்சை மண்ணை சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலோயர் ஆண்டதாக எழுதி ஒரே ஒரு மன்னர் வம்சத்தை அதாவது இந்த நகரத்தை நிர்மானித்த "முத்தரையர்கள்" ஆண்ட செய்தியினை இரட்டிப்பு செய்திருக்கிறார்கள், வரலாறும், கல்வெட்டுகளும் பெரும்பிடுகு முத்தரையர் வசமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றியே பிற்கால சோழர் ஆட்சி தொடங்கியதாக இருக்கும்போது வரலாற்று திரிபு வேலைகளில் மாவட்ட நிர்வாகமே ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதுவரை உங்கள் கவனத்திற்க்கு இந்த விசயம் வராமல்கூட இருக்க முடியும், இனியும் தாமதிக்காமல் அந்த தவறுகளை திருந்த மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.


தங்கள்
கா. சஞ்சய்காந்தி அம்பலக்காரர்


நாள் : 22/12/2015

இடம் : தஞ்சாவூர்
------------------------------------------------------------------
http://www.thanjavur.tn.nic.in/history.html