நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்க்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்றோம், மிகுந்த கவனமுடன் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தவறு நேர்ந்திருக்கிறது, இரண்டொரு நாளில் சரி செய்துவிடுவோம் என்று உத்திரவாதம் தந்திருக்கிறார்,
இந்த பிரச்சனையை மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னவுடன் வேறு பணிகளை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு அழைத்தவுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த திரு. எஸ்.எம்.மூர்த்தி அவர்களுக்கும், புலவர் திரு. கூ.மாரிமுத்து அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை உரித்தாக்குகிறோம்.
-----------------------------------------------------------
நாள் : 22/12/2015
பெறுனர் :
உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம்
அனுப்புதல் :
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
சிவன் கோவில் தெரு, பழஞ்சூர் -அஞ்சல்,
பட்டுக்கோட்டை-தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம் - 614 701
Mobile No : 0091-9159168228
E-mail : sanjai28582@gmail.com
மதிப்பிற்குறிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,
வணக்கம், நம்முடைய தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்காக ஏற்படுத்தப்பட்ட http://www.thanjavur.tn.nic.in/ என்ற இந்த இணையதளத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தினுடைய, நகரினுடைய வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது அதில் பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இல்லாத, ஆதாரமற்ற வரலாற்று செய்தியாக "தஞ்சன்" என்ற அரக்கன் இருந்தானாம், என்ற ரீதியில் சிறுவர்கதை போல வரலாறு எழுதப்பட்டு ஒரு இராஜ வம்சத்தில் வரலாற்றை மறைக்கும் முயற்சியை உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நடத்தி இருக்கிறார்கள்,
தஞ்சாவூர் என்பது தனஞ்சயன் முத்தரையர் என்ற முத்தரையர் அரசனுடைய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நகரம் என்று பல்வேறு வரலாற்று அறிஞர்களும் எழுதியிருக்கிறார்கள், அந்த வரலாற்றை கவனத்தில் கொள்ளாமல் பகுத்தறிவுக்கு ஒவ்வாத அரக்கன் கதையை அளக்கும் இடமாக மாவட்ட நிர்வாகத்தின் இணையதளம் காட்சியளிப்பது இந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் மிகுந்த வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.
அதே வரலாற்று பக்கத்தில் தஞ்சை மண்ணை சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலோயர் ஆண்டதாக எழுதி ஒரே ஒரு மன்னர் வம்சத்தை அதாவது இந்த நகரத்தை நிர்மானித்த "முத்தரையர்கள்" ஆண்ட செய்தியினை இரட்டிப்பு செய்திருக்கிறார்கள், வரலாறும், கல்வெட்டுகளும் பெரும்பிடுகு முத்தரையர் வசமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றியே பிற்கால சோழர் ஆட்சி தொடங்கியதாக இருக்கும்போது வரலாற்று திரிபு வேலைகளில் மாவட்ட நிர்வாகமே ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதுவரை உங்கள் கவனத்திற்க்கு இந்த விசயம் வராமல்கூட இருக்க முடியும், இனியும் தாமதிக்காமல் அந்த தவறுகளை திருந்த மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.
தங்கள்
கா. சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
நாள் : 22/12/2015
இடம் : தஞ்சாவூர்
------------------------------------------------------------------
http://www.thanjavur.tn.nic.in/history.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக