திருமங்கையாழ்வார் (முத்தரையர்) தொடங்கிய திருவிழா...
அரங்கனின் அத்யயன உற்சவம்.(வைகுண்ட ஏகாதசி)
வருகின்ற திங்கட்கிழமை (28.12.2015) அன்று வேடுபறி நிகழ்ச்சி ஶ்ரீரங்கம் ரெங்க நாத சுவாமி திருக்கோவிலில் நடக்க இருக்கிறது.
//ஏகாதசி
இந்த மிகவும் முக்கியமான திருவிழா, தமிழ் மாதம் மார்கழியில் (டிசம்பர் – ஜனவரி) முழு இருபத்தொரு நாட்கள் பகல் பத்து, இரவு பத்து என இரண்டாகப் பிரிந்து ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி தினத்தில், ரங்கநாதப் பெருமாள் அற்புதமான அலங்கார ஆடையணிந்து, பரமபத வாசல் வழியாக ஒரு மகத்தான ஊர்வலத்தில் பவனி வந்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் இலட்சக்கணக்கான பக்தர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் மற்றும் பரவசத்திற்கிடையே ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தை அடைகிறார். இந்த தருணம், கோயிலில் நடத்தப்படும் அனைத்து திருவிழாக்களிலும் உச்சித் தருணமாகும். எல்லா நாட்களில் இந்த நாளில் மட்டுமே ரங்கநாத பெருமாள் உண்மையான, நிஜமான இராஜாவாகிறார் மற்றும் இவர், ஶ்ரீ ரங்கராஜர் எனப்படுகிறார். பிரத்யேகமாக எழுப்பப்பட்டு, அருமையாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல் மூலம் விஸ்தரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஆயிரங்கால் மண்டபத்தில் தனது தெய்வத்திரு தர்பாரை ரங்கராஜா நடத்துகிறார், நாள் முழுக்க நாளாயிர திவ்யப்பிரபந்தம் ஓதப்படுகிறது மற்றும் பின்னிரவில் மட்டுமே அவர் கோயிலுக்கு திரும்புகிறார். அலைமோதும் பக்தர்கள் கூட்டம், விடியற்காலை முதல் நள்ளிரவு வரை விடாமல் வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். இடைவிடாமல் பஜனைகளில் ஈடுபட்டுக்கொண்டும், நாள்முழுக்க உண்ணா நோண்பிருந்து கொண்டும் மற்றும் இரவு முழுக்க இடையறாமல் தூங்காமல் விழித்துக் கொண்டுமிருக்கும் பக்தர்கள் குழுவின் துடிப்புமிக்க ஜால்ரா இசைக்கு பாடிக்கொண்டும் மற்றும் ஆடிக்கொண்டும் இருந்தனர். உண்மையிலேயே, இது கடவுள்கள் காணவேண்டிய காட்சியாகும். உண்மையிலேயே மண்ணுலகில் ஒரு சொர்க்கலோகமாகும்! //
// வேடுபறி உற்சவம்: முத்தரையர் விழா
திருமங்கை மன்னன் தன் சொத்து முழுவதையும் ரங்கநாதரின் திருப்பணிக்கே செலவிட்டார். ஒருசமயம்,
கோவிலுக்கு திருமதில் எழுப்பும் பணியில் ஈடுபட்டார். பணம் காலியாகி விட்டது.
கோவிலுக்கு திருமதில் எழுப்பும் பணியில் ஈடுபட்டார். பணம் காலியாகி விட்டது.
எனவே பணக்காரர்களிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்தார். அவரை நல்வழிப்படுத்த விரும்பிய பெருமாள், தாயாருடன் புதுமணத் தம்பதி
போல ஒரு மாட்டு வண்டியில் வந்தார். திருமங்கை மன்னன், அவர்களைத் தடுத்து, அவர்களிடம் இருந்த பொன், பொருளைக் கழற்ற வைத்தார். மணமகனின் கால் விரலில் கிடந்த மெட்டியை கழற்ற முயன்றார்.
போல ஒரு மாட்டு வண்டியில் வந்தார். திருமங்கை மன்னன், அவர்களைத் தடுத்து, அவர்களிடம் இருந்த பொன், பொருளைக் கழற்ற வைத்தார். மணமகனின் கால் விரலில் கிடந்த மெட்டியை கழற்ற முயன்றார்.
முடியாததால், பல்லால் கடித்து இழுக்க முயன்றார். திருமாலின் திருவடி ஸ்பரிசத்தால், மன்னனுக்கு ஞானம் உண்டானது. உடனே "வாடினேன் வாடி' என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடினார். இதையடுத்து, திருமங்கை மன்னனை, பெருமாள் ஆழ்வாராக ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த நன்னாளை "வேடுபறி உற்சவம்' என்ற பெயரில் கொண்டாடுவர்.
ஆழ்வாராக திருமங்கை மன்னனை ஏற்ற மகிழ்ச்சியில், பெருமாள் குதிரை வாகனத்தில் அங்குமிங்கும் துள்ளி விளையாடுவார். டிச. 28 ல் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. //
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக