பிரதமர் மோடிக்கு நன்றி..!
தமிழர்களுக்கு எங்கோ அதிஷ்ட மச்சம் மறைந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன், இந்தியாவில் இருக்கும் எல்லா துறைமுகங்களை விடவும் பெரிய ஒரு துறைமுகத்தை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலுக்கு அருகே இனையத்தில் 27 ஆயிரம் கோடியில் கட்ட மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதை எப்பாடுபட்டாவது தடுத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிய கேரள அரசின் / முதல்வரின் கோரிக்கையை பிரதமர் மோடி நிராகரித்து இருக்கிறார். இதில் வேடிக்கையான உண்மை என்னவென்றால் இந்த துறைமுகத்துக்காக தமிழக அரசோ, தமிழக மக்களோ, அரசியல் கட்சிகளோ எந்த முன்னெடுப்புகளையும் எப்போதும் செய்திருக்கவில்லை, குறைந்தபட்சம் இந்த துறைமுகத்துக்கு ஒப்புதல் கிடைத்தபோதுகூட இதை வரவேற்கவில்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் இருக்கும் திரு, பொன்.இராதாகிருஷ்ணன் என்ற தனி நபரின் உழைப்பிற்க்கு கிடைத்ததுதான் இந்த மிகப்பெரிய துறைமுகத் திட்டம்.
இந்த துறைமுகத்தால் நமக்கென்ன லாபம்..?
இதுதான் வழக்கம்போலவே தமிழர்கள் மனதில் உதித்து நிற்கும் கேள்வி, ஆசிய கண்டத்தில் இருந்து அமெரிக்க, ஆப்ரிக்க, ஐரோப்பிய கண்டங்களுக்கு அல்லது அங்கிருந்து இங்கு கடல்வழியில் அமையவிருக்கும் இந்த துறைமுகத்தினால் மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா குறிப்பாக தமிழகம் பெற முடியும், இந்திய பெருங்கடலில் கடந்து செல்லும் ஆகப் பெரிய கப்பல்கள் வந்து செல்ல இந்தியாவில் எந்த துறைமுகத்திலும் வசதிகள் இல்லை, இதனால் இந்தியாவில் இருந்து சிறிய கப்பல்களில் ஏற்றி இலங்கையில் கொழும்புக்கோ, சிங்கப்பூருக்கோ கொண்டு சென்று அங்கிருந்து பெரிய கப்பல்களில் ஏற்றி அனுப்பி கொண்டும் இறக்கி கொண்டு வந்துகொண்டும் இருக்கிறது இந்தியா , அந்த குறையை போக்கதான் இங்கு குளச்சலில் ஆகப்பெரிய துறைமுகத்துக்கு வழி ஏற்படுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி, இந்த துறைமுகம் அமைவதால் ஆசிய கண்டங்களில் இருக்கும் சிறிய நாடுகள், குறிப்பாக பெரிய கப்பல்கள் வந்துபோகும் வசதியற்ற நாடுகளுக்கான பொருட்களை கையாளும் திறனோடு இந்த துறைமுகம் அமைவதால் பொருளாதார வளர்ச்சியும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளும் உருவாகும். எப்போதுமே புறக்கணிக்கப்படும் தென் தமிழகத்திற்க்கு புதிய தொழிற்வாய்ப்புகள் வர வாய்ப்பு ஏற்படும்.
மலையாள தந்திரம்
தமிழகத்திற்க்கு எதுவுமே நன்மையாக அமைந்துவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு மலையாளியும் தெளிவாகவே இருக்கிறார்கள், குளச்சலில் அமையவிருக்கும் துறைமுகத்தில் இருந்து சரியாக முப்பது கிலோமீட்டரில் ஏற்கனவே மத்திய அரசு அனுமதியும் வழங்கி பணிகளையும் துவங்கிவிட்ட விழிஞ்சம் துறைமுகம் அமைவதை எந்த சூழ்நிலையிலும் தமிழர்கள் எதிர்க்கவில்லை, தமிழக அரசோ, அரசியல்வாதிகளோ அந்த துறைமுகத்தைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் குளச்சலில் துறைமுகம் அமைவதை எதிர்த்து நேற்றைய தினம்கூட கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் பினராய் விஜயன் அவரோடு காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசிதரூர் என்று கட்சி பேதமே இல்லாமல் மலையாளிகள் கூடி பிரதமர் மோடியை சந்தித்து எதிர்ப்பு தெரிவித்து குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிட வலியுறுத்தினார்கள், ஆனால் முதல் வரியில் சொன்னதுபோல தமிழர்களுக்கு எங்கோ மச்சமிருக்கிறது அதனால்தான் பிரதமர் உறுதியாக குளச்சலில் துறைமுகம் அமையும் என்றும், கேரள முதல்வரின் கோரிக்கையை நிராகரித்து இருக்கிறார்.
இனி என்ன நடக்கும்...?
ஏற்கனவே சேதுசமுத்திர திட்டத்தை துவங்கி பாதி பணிகள் நிறைவடைந்த பிறகு இலங்கை அரசு மறைமுகமாக தலையிட்டு முடக்கியதுபோல, இதை முடக்க கேரள அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ முயற்சி செய்யும், ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மனதில் யாரோ புண்ணியவான்கள் அச்சத்தை தூவிவிட்டார்கள், இனி கேரள அரசு எதையும் செய்து மீனவர்களை போராட தூண்டும், திட்டத்தை நிறுத்த புதிய புதிய காரணிகளை கண்டுபிடித்து போராட ஒரு கும்பல் வரும், இந்த துறைமுகமே கடலை தூற்றுதான் நிறைவேற்ற போகிறார்கள் இதனால் கடற்கரையில் பெரிய அளவிற்க்கு இடத்தேவை இருக்காது ஆனாலும் இந்த போராட்டம் இனி பெரிய அளவில் போலியான / புதிதான இயற்கை ஆர்வலர்களினால் முன்னெடுக்கப்படும், அதையெல்லாம் கடந்து இந்த துறைமுகம் அமைந்தால் மட்டுமே தமிழகத்திற்க்கு நல்ல எதிர்காலம் அமையும்.
விழித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே..!
துறைமுகம் அமைவதெல்லாம் சரி, அதை தமிழினம் எப்படி பயன்படுத்திக் கொள்ளும் ? ஏமாளி தமிழினம் எப்போது எதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது ? ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் பெரிய துறைமுகங்களான சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் 70% மலையாளிகள், தெலுங்கர்கள், வடமாநிலத்தவர்கள் பெரிய பெரிய பதவிகளை எல்லாம் அவர்களே ஆக்கிரமைத்து உள்ளார்கள் அமையப்போகும் இந்த துறைமுகத்திலாவது தமிழர்கள் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி பணிவாய்ப்புகளை பெற்று வளம் காண வேண்டும்.
-பட்டுக்கோட்டை சஞ்சய்காந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக