திங்கள், 21 நவம்பர், 2016

தவதிரு. குன்றக்குடி அடிகளார்

ஆன்மீக செம்மல், அறிவுக்கடல் தவதிரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள்

03.06.1973 அன்று திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த "முத்தரையர் மாநாட்டிலும்"

20.06.1982 அன்று லால்குடி திருவள்ளுர் நகரில் நடந்த "முத்தரையர் இளைஞர் மாநாட்டிலும்"

28.08.1982 அன்று காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நடந்த "முத்தரையர் மாநாட்டிலும்" கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி "முத்தரையர்" சமூகத்தை பெருமை பெற செய்துள்ளார்கள்

#வரலாற்று சுவடுகள்

சஞ்சய்காந்தி அம்பலக்காரர் 

#Mutharaiyar

சனி, 19 நவம்பர், 2016

#tag....

#tag....

#Mutharaiyar

இன்றைக்கு முத்தரையர்களில் ஏறக்குறைய பத்தாயிரத்துக்கும் குறைவில்லாமல் தினசரி பேஸ்புக் பயன்படுத்தினாலும், சில விசயங்களை நாம் அலட்சியப்படுத்திவிடுகிறோம், நமக்குள்ளேயே நூறாயிரம்முறை பெருமைகளை பேசிக்கொள்கிறோம், நாம் எதைப்பற்றி பேச விரும்புகிறோம், எதை உலக மக்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்ல போகிறோம் என்ற புரிதல் குறைவாகவே இருக்கிறது, #tag பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ? அதில் நாம் Trending எப்படி உருவாக்குவது ?

நாளை முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு #Mutharaiyar என்று உங்கள் எல்லா பதிவுகளிலும், போட்டோகளிலும் எழுதுங்கள், பொழுது போக்குவதையாவது உருப்படியாக செய்வோம் 

Share it....

#Mutharaiyar

#tag போட்டு Trend உருவாக்குனா என்ன கிடைக்கும் ? ஒன்னும் கிடைக்காது :) உங்களுக்கு மட்டுமே தெரிந்த #Mutharaiyar என்ற பெயரை உலகம் அறியும் அவ்வளவுதான்,

வேற என்ன பன்னாலும் யாருக்கும் நாம் யார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை #tag  போடுவதன் மூலம் Trend உருவாக்கினால் அந்த #Mutharaiyar வார்த்தைக்கான அர்த்தம் அரிய பலரும் இணையத்தில் தேடுவார்கள், அப்போது நம்முடைய வரலாற்றை அவர்கள் அறியும் வாய்ப்பு ஏற்படும், இதற்க்காக எதையாவது எழுதிதான் #tag போட வேண்டும் என்று அவசியமில்லை சும்மா Selfee    எடுத்துபோட்டு, மொக்க Joke க்க போட்டு மறக்காம கீழ #Mutharaiyarன்னு போட்டா போதும் Try பன்னுங்க

@வீணாகும் நேரத்தில் ஒரு பயன்

#Mutharaiyar

நாட்காட்டி....!!

நாட்காட்டி....!!

எங்கள் "மாறன் டிஜிட்டல்" நிறுவனம் மூலம் வ‌ருகின்ற 2017 ஆம் வருட நாட்காட்டியினை தேவைக்கேற்ப, குறைந்தவிலையில் அச்சிட்டுதருகிறோம், நீங்கள் விரும்பும் வடிவங்கள், வடிவமைப்புகளில் தருகிறோம், தேவைக்கு அணுகவும்

அன்புடன்....

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்  

மஞ்சள் ஆடைபோராட்டம் : என் கனவ

மஞ்சள் ஆடைபோராட்டம் : என் கனவு

கடந்த வாரத்தில் மலேசிய தலைநகரில் அந்த நாட்டு பிரதமருக்கு எதிராக நடந்த மஞ்சள் ஆடை போராட்டம் போல என் சமூகமும் தனது உரிமைகளுக்காக தன் இனக்கொடியின் நிறமாம் மஞ்சளில் ஆடை தரித்து ஒருநாள் போராடும், அன்று என் சமூகம் இழந்ததையெல்லாம் மீட்டெடுக்கும், பெற்ற அவமானங்கள், இரட்டிப்புகளுக்கெல்லாம் பலி தீர்க்கும்.

வா நாளே வா....

#Mutharaiyar

http://www.vikatan.com/news/world/72924-peoples-revolution-broke-out-in-malaysia.art

வியாழன், 17 நவம்பர், 2016

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்....

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்....

இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை வெவ்வேறு வழிகளில் மகிழ்வித்து சிவபதவியை அடைந்த சிவபக்தர்கள் நாயன்மார்கள் ஆவார்கள்.அவர்கள் அறுபத்து மூவர் என சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தில் கூறுகிறார்.அவர்களில் முத்தரையர் குலம் உதித்தவர்கள் .

1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன்
2 ) மங்கையர்க்கரசியார்
3 ) நரசிங்க முனையரைய நாயனார்
4 ) மெய்ப்பொருள் நாயனார்
5 ) கண்ணப்ப நாயனார் (  நாம் அனைவரும் அறிந்த ஒருவர் )

1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன்

        இவர் இரண்டாம் பெரும்பிடுகு என்று அழைக்கப்பட்ட சுவரன் மாறனின் பாட்டன். குவாவன் மாறனின் தந்தை.

2 ) மங்கையர்க்கரசியார்

           இவர் குவாவனின் மகளும். சுவரன் மாறனின் பாட்டன் குவாவன் மாறனின் தங்கையும் ஆவார். இவர் நின்ற சீர் நெடுமாற நாயனார் என அழைக்கப்பட்ட கூன் பாண்டியனின் மனைவி.

3 ) நரசிங்க முனையரைய நாயனார்
   
       இவர் திருமுனைப்பாடி நாட்டை திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் தந்தை வாணகோ அரையர் எனப்படும் தெய்வீகன் ஆவார். இவர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு சேதிநாட்டை ஆண்டு வந்த மெய்ப்பொருள் நாயனாரின் அண்ணன் .மெய்ப்பொருள் நாயனார் வாணகோ முத்தரையரின் சிற்றப்பா ஆவார்.

4 ) மெய்ப்பொருள் நாயனார்.

          இவர் சேதி நாட்டையும் ,மேற்க்காவலூர் நாட்டையும் ஒரு சேர ஆண்டு வந்தார். இவர் பக்தரானாலும் போர்கள் பல செய்து வெற்றிகளைக் கண்டவர்.

தகவல் குறிப்பு தந்து உதவியவர் : உயர்திரு ..ஐயா.திருமலை நம்பி .புதுக்கோட்டை.

நாம் பழம் பெருமை பேசி திரிய இந்த வரலாற்று தகவல்களை இங்கு பதியவில்லை என்பதை உறவுகள் அறிய வேண்டும். எப்படி உச்சத்தில் இருந்த சமுதாயம் இன்று அடிமை வாழ்க்கையிலும் கீழானதொரு நிலைமையில் இருக்கிறது என்பதை ஒப்பிட்டு பாருங்கள்.

செவ்வாய், 15 நவம்பர், 2016

முத்தரையர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆவணங்கள

முத்தரையர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆவணங்கள

.....முத்தரையர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணங்கள்.

1) இந்திய அரமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 12  ,14 ,15 ,16 ,29 ,38 .46 ,141 ,309 ,335 ,338 ,338  ஏ,340 ,341 ,342 ,343 ,344 .
          
2) இந்திய அரசின் (முதலாவது) பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் காகா காலேல்கர் குழு அறிக்கை (1985 ).

3) தமிழக அரசின் (முதலாவதாக) பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் ஏ .என்.சட்டநாதன் குழு அறிக்கை (1970 )

4)இந்திய அரசின் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் மண்டல் குழு அறிக்கை (1980 )

5)தமிழக அரசின் இரண்டாவது  பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் அம்பா சங்கர்  குழு அறிக்கை (1985 )

6) மண்டல் குழுவின் பரிந்துரைப்படி பிரதமர் வி.பி.சிங் 1990 இல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து உயர் சாத்தினார் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை 9 நீதிபதிகள் பேராயம் விசாரித்து 16 .11 .1992 இல் வழங்கிய தீர்ப்பும் அதன் பிறகு கூறப்பட்ட தீர்ப்புகளும் .

7) மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த முக்கியமான அரசாணைகள் .

8) ஐ ஐ டி, ஐ ஐ எம் , முதலான மைய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இத பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து இயற்றப்பட்ட மையக் கல்வி நிறுவனங்கள் ( சேர்க்கையில் இட ஒதுக்கீடு ) சட்டம் 2007 .

9) மைய்ய அரசின் கல்வியில் அளிக்கப்பட இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பேராயம் 10 .04 .2008 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பு.

10) சட்டநாதன் குழு அறிக்கையிலும் அம்பாசங்கர் குழு அறிக்கையிலும் பல வகுப்புகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்புரைகளும் புள்ளி விவரங்களும் .

11) பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுப்பில் வகுப்புரிமை பற்றிய தொகுதிகள் .

12) வே.ஆனைமுத்துவின் கருத்துக் கருவூலம் தொகுப்பில் வகுப்புரிமை பற்றிய தொகுதி

பெரியார் ஈ.வெ.ரா ..டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு..
(தகவல் உதவி : கலத்தம்பட்டு சதாசிவம் ராமலிங்கம் )

முத்தரையர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து இருக்கவேண்டிய ஒன்று. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நம் சமுதாயம் எவ்வளவு உரிமையை இழந்திருக்கிறோம் என்று அறிய வேண்டும். நாம் இழந்த உரிமையை பெற வேண்டும் என்றால் நம் சமுதாயம் அறிந்து இருக்க வேண்டியவைகளை நம் சமுதாய அமைப்புகள் கொண்டு வந்து மக்களிடம் சேர்த்து அதற்கான நடவடிக்கைளை எடுத்தார்களா என்று தெரியாது. சில சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தியிருக்கிறார்கள் ஆனால் இட ஒதுக்கீடு, அதன் அவசியம், தேவை, போன்றவற்றை மக்களிடம் அவர்கள் விளங்கி கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறி மக்களை திரட்டி கவன ஈர்ப்பு,கண்டன பேரணி,பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை சென்னையில் நடத்தினால் மட்டுமே இந்த இனத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.

பழ .சங்கிலிதேவன் பழுவேட்டரையர் .

சனி, 12 நவம்பர், 2016

திருப்பதி சுவாமிகள்

திருப்பதி சுவாமிகள்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் திருப்பதி சுவாமிகள் திரு .மு.சுப்ரமணிய முத்தரையருக்கும் ,வெள்ளையம்மாளுக்கும் மகனாய் 1873 ஆம் ஆண்டு அவதரித்தார்.திருப்பதி சுவாமிகளை பெற்றதால் அரவக்குறிச்சி ,ஆன்மீக வரலாற்றில் புகழ் பெற்றது.

சுவாமிகள் தொடக்கக் கல்வி முடிந்ததும் அரவக்குறிச்சி அருகில் உள்ள நல்லமாகாளிபட்டியில் உயர் கல்வியைத்  தொடர்ந்தார்.குருக்கள் பரம்பரையில் உதித்த தெய்வசிகாமணி குருக்கள் என்பார் இவரது நல்லாசிரியராக திகழ்ந்தார் .தமிழ் ,வடமொழி இலக்கியங்களைக் கற்றுத்  தேர்ந்தார்.

துறவு வாழ்க்கையில் நாட்டம் கொண்ட சுவாமிகள் தந்தையாரின் தோட்டத்திலுள்ள விநாயகர் கோவிலில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.தமது குருவைத் தேடிப் பல இடங்களுக்கும் சென்ற சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் பிரம்மாஸ்ரீ சுயம்பிரகாச சிவானந்த சுவாமிகளை நேரில் கண்டு அவரது சீடரானார்

அரவக்குறிச்சி கோவில் மடத்தில் தங்கி கணேசருக்கு ஆராதனை செய்துவரும் காலத்தில் தம்மை வந்தடைந்தவர்களுக்கு நல்லுபஹ்தேசம் செய்யும் வழக்கத்தை கொண்டார்.சில சமயங்களில் அண்மையிலுள்ள திருவெஞ்சமாக்கூடல் ,கரூர் முதலான தலங்களுக்குச் சென்று வருவதுண்டு.

வெஞ்சமாக்கூடல் விகிர்தீசர் மீதும் அம்மை பண்ணோர் மொழியாள் மீதும் சுவாமிகள் பக்திப் பரவசத்துடன் பாடிய பாடல்கள் நெஞ்சை நெக்குருக வைக்கும்.சுவாமிகள் தமது " பக்தி நெறி " எனும் நூலில் நான்கு பாடல்கள் விகிர்தீசர் மீதும், பண்ணோர் மொழியாள் மீதும் பாடியுள்ளார்.

"வாட லின்றி மகிழன்பர் நெஞ்சினுளும்
வாச மாய விகிர் தீசனே"

என்றும்
"விண்ணினேர் மேனி விகிர்தனார் மகிழ
வெஞ்சமாக் கூடலில் அமர்ந்த
பண்ணினேர் மொழியாய் வெண்மதிக் கொழுந்தின்"

என்றும்

சுவாமிகள் வெஞ்சமாக்கூடல் ஈசனையும் அம்பிகையையும் புகழ்ந்து பாடியுள்ளார்.

சுவாமிகளின் நூல்கள் .

திருப்பதி சுவாமிகள் பல அறிய நூல்களை இயற்றி அருளினார். அவற்றுள் கீழ்காண்பதை மட்டுமே இது கானும் நமக்குக் கிடைத்துள்ளன.

அவைகள்.
1 . ஸ்ரீ வித்தியா கீதை
2 . பக்தி நெறி
3 .பழமொழிப்போதம் (1932 )
4 .தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
5 .திருநாம மாலை (1942 )
6 .ஞானலோகம் என்னும் யுக்தி சாகரம் (1950 )
7 .முக்தி நெறி
8 .சதாசிவப்பிரும்ம ஸ்தோத்திரம்
9 .தேவிஸ்தோத்திரம்
10 .விவேக சித்திரம்
11 .தத்தாத்ரேயர் ஸ்தோத்திரம்
12 .மாரியம்மன் தாலாட்டு
13 .சிவசூத்திர விமர்சனி (உரைநடைநூல்)
14 .வில்மாதர் விஷம்
15 .சகுந்தலா அல்லது காதல் வெற்றி

சுவாமிகளின் மறைவு
சுவாமிகள் குளித்தலை கடம்பர் கோவிலில் தமது 64 ஆம் அகவையில் 1937  ஆம் ஆண்டு நீர் விகற்ப சமாதியில் அமர்ந்தார்.ஆண்டு தோறும் கடம்பர் கோவிலில் சுவாமிகளுக்கு குருபூசை நடைபெறுகிறது.

நூல் ஆதாரம்: கொங்கு வேந்தர் வெஞ்சமன் & வெஞ்சமாக்கூடல் வரலாறு.

-Palanivel Sankili Thevan

வெள்ளி, 11 நவம்பர், 2016

முத்தரைய சொந்தங்களே !!! சமூக நீதி கணக்கீட்டைப் பாரீர்!!!!!

முத்தரைய சொந்தங்களே !!! சமூக நீதி கணக்கீட்டைப் பாரீர்!!!!!

தந்தை பெரியாரிடம் சமூக நீதியை கரைத்து டம்ளரிலும்,அண்டாவிலும்,குண்டாவிலும்,குழாய் (straw ) வைத்து உறிஞ்சியும் ,மடக்கு மடக்குன்னு குடித்தவர்களும், அப்படியே நீந்தி குளித்து குடித்தவர்களும் .

சமூக நீதி குளத்தில் தொபுக்கடீர்னு குதித்தும், குட்டிக்கரணம் அடித்து குதித்தும் ,நீச்சல் அடித்தும் ,அடிக்காமழும் ,தென்னை நார் வைத்து அழுக்கு தேய்த்தது குளித்தவர்களும்,களிமண் தேய்த்து குளித்தவர்களும், dove , pears  இன்னும் பிற சோப்பு கட்டிகளை வைத்து குளித்தவர்களும் பின்பற்றிய சம தர்ம அரசியல் கொள்கைகளை பாருங்கள்.

திராவிட கழகங்கள் இரண்டுக்கும் இது பொருந்தும். உள்ளாட்சி தேர்தலில் பட்டியலில் உள்ளவர்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அண்ணன் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை வாங்கினார்கள் . எங்கள் சமுதாயம் எல்லாம் சமூக நீதிக்கு உட்படாதா???இல்லை உட்படுத்தும் அளவுக்கு தகுதி இல்லையா????

பாராளுமன்றம் 1952 ஆம் வருடம் அமைக்கப்பட்டதிலிருந்து 2009  ஆம் ஆண்டு வரை 15 முறை தேர்தல்கள் நடை பெற்று உள்ளது . மொத்தம் 599 உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்ய பட்டுள்ளனர் இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் கணக்கில் எடுத்துக்கொள்ள படவில்லை .

இதில் ஒவ்வொரு சமுதாயமும் எவ்வளவு  பாராளுமன்ற உறுப்பினர்களாக எண்ணிக்கையை கொண்டுள்ளனர் என்று பாருங்கள்.

தலித் -102                                     
முக்குலத்தோர் -81
வன்னியர் -73
கொங்கு வெள்ளாளர் -71
நாடார் -49
முதலியார் -52
முஸ்லிம்கள் -18
பிள்ளைமார்-16
நாட்டு கோட்டை செட்டியார் -13
ஐயர்-22
இசை வேளாளர் -9
உடையார் -7
கோனார்-2
முத்தரையர் -2
நாய்டு ,செட்டி,தெலுங்கு /கன்னடம் /மலையாளம் -82

இப்போ சொல்லுங்கள் முத்தரையர்களே ...யார் இதில் இளிச்ச வாயர்கள்  ??? நமது தொகுதியை நாம்தான் கைப்பற்ற வேண்டும். நமக்கான உரிமையை நாம் தான் கேட்டு பெற வேண்டும். வரும் நாடாளு மன்ற தேர்தலில் 5 ( திருச்சி, சிவகங்கை,பெரம்பலூர் ,தஞ்சாவூர் ,கரூர் )பாராளுமன்ற உறுப்பினர்களை களமிறக்க கட்சிகளை வலியுறுத்த வேண்டும்.

முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் அதிக பஞ்சாயத்துகளை நாம் கைப்பற்றி யாக வேண்டும்.

பழ .சங்கிலிதேவன் பழுவேட்டரையர் .

வலையர்களின் உட் கிளைகள்

வலையர்களின் உட் கிளைகள்

கருப்பாசி வலையர்கள்
வன்னிய வலையர்கள்
செம்பாசி வலையர்கள்
சருகு வலையர்கள்
செட்டிநாடு வலையர்கள்
ஆயா வலையர்கள்
மூக்குத்தி போடாத வலையர்கள்

உட்கிளைகள் அடங்கிய பகுதிகள்

எட்டரை கோப்பு நாடு,
தானம்பு நாடு
வழுவாடி நாடு
நடு நாடு (அ) அசல் நாடு
குரும்ப நாடு
வன்னிய நாடு
அம்பு நாடு
புனல் நாடு
வேடன் நாடு
சுளுந்துக்காரன் நாடு
அம்பலகாரன் நாடு
வெள்ளாம்புட்டு நாடு
கறடி  நாடு
கங்கு நாடு
பாசிக்கட்டி நாடு
காரைக்காட்டி நாடு

மேலே கூறிய நாடுகள் பரவியுள்ள இன்றைய மாவட்டங்கள்.

ராமநாதபுரம்
மதுரை
தஞ்சாவூர்
திருச்சி (புதுக்கோட்டை)
திருநெல்வேலி
கோவை
வட ஆற்காடு
நீலகிரி மாவட்டங்கள்

தகவல் ஆதாரம் : தி வலையர் -கல்ச்சர் அண்ட் எகனாமிக்ஸ் , ஆர் .இ.தேசிங்கு செட்டி . பேராசிரியர் ராஞ்சி பல்கலைக்கழகம் .

- Palanivel Sankili Thevan

தேசப்பணிகள்

அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்.

தந்தை :அய்யப்பன்
தாய் :முத்து பேச்சியம்மாள்

தேசப்பணிகள் :
1931 இல் கள்ளுக்கடை மறியல்,சுபாசுசந்திர போசு ,நேரு இளைஞர் மன்றம் தோற்றுவித்து நடத்துதல் .
1933 -இல் தனுசுகோடி காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசி.
ஆகஸ்ட் புரட்சியில் தனிநபர் சத்தியாகிரகம் .
ராமேஸ்வரம் இந்து தர்ம சேவா சங்கத்தை தோற்றுவித்து தலைவரானார்.தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு கமிட்டி செயலாளர் ,கிஜன சேவா சங்க செயலாளர் .
1933 இல் கள்ளுக்கடை மாறியலினால் சிறையில் ஆங்கிலேயர் அடைத்தனர் .
1937 -இல் வலையர் முன்னேற்ற சங்கத்தை தொடங்கி 1952 -இல் கண்ணப்பர்குல வலையர் சங்கமாக நடக்க தொடங்கியது.தவத்திரு சிருங்கேரி மேடம் சங்கராச்சாரியாரின் தொடர்பு மடாதிபதி கல்யாணதாஸ் தொடாண்டிய ராமேஸ்வரம் ,இந்து  தர்ம சேவா சங்கத்திற்கு தலைவரானார்.
தமிழ்நாடு மீனவர் சங்கம்,விசைப்படகுக்காரர்கள் சங்கம் ,கல்வி ,பொது நலத்துக்கு தலைமையேற்று சேவை செய்தார்.

ராமேஸ்வரத்தில் தன்னால் தொடங்கப்பட்ட கண்ணப்பர் குல வலையர் சங்கத்தை தமிழ்நாடு முத்தரையர் சங்கத்துடன் இணைத்தார் .இவரது மிகசிறந்த சேவையால் 07.09.1980  இல் மாநில முத்தரையர் சங்கத்திற்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

குறிப்பு உதவி: திருமலை நம்பி ஐயா புதுக்கோட்டை.

Writing : Palanivel sankilithevan

இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிகமான முத்தரையர்கள

இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிகமான முத்தரையர்கள் கலந்து கொண்டாலும் இவர்கள் இருவரும் அதிக பிரபலம் அடைந்தவர்கள் ஒருவர் ஆ.முத்தையா ,தளுகை பாதர்பேட்டை . மற்றுமொருவர் அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்.

இதில் காலத்தால் முந்தியவர் திரு ஆ.முத்தையா .
தந்தை  :ஆணை முத்துராஜா
தாய் :பெரியம்மாள்

1914  ஆம் ஆண்டு  15  வயதில் தந்தையை இழந்தார் .உடன் தனது தாயாருடன் இலங்கை சென்றார் .அங்கே காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். தனது 25 வயதில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரமாக பங்கு பெற்றார்.1942 செப்டம்பரில் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார் மீண்டும் 1943 கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

தேச தலைவரான காமராஜர்,கக்கன் ஆகியோர் தொடர்பு ஏற்பட்டது .1948 இல் திருச்சி வந்து காங்கிரசில் போட்டியிட்டு வென்றார் .1954 இல் திருச்சி மாவட்ட காங்கிரசில் செயலாளர் ஆனார் .

வகித்த பதவிகள்
1959 இல் திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு உறுப்பினர்
1957 -1962  வரை உப்பிலியபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
1962 -1968 வரை திருச்சி நகர சிட்டி கிளப் தலைவர் .
1963  இல் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் உறுப்பினராகத் தேர்வு பெற்று பணியாற்றினார்.

Thanks to : Palanivel Sankilithevan

சனி, 5 நவம்பர், 2016

நவம்பர் - 05

நவம்பர் - 05

ஒரு வருடத்தை இன்று நிறைவு செய்திருக்கிறோம், நினைக்கவே சந்தோசத்தில் துள்ளிக்குதிக்க செய்யும் நாள் அது என்றால் மிகையாகாது, கடந்த இருபது வருடங்களில் அரசை எதிர்த்து அவ்வளவு பெரிய போராட்டம் நடத்திய ஒரே ஒரு சமூகம் "முத்தரையர்" சமூகம் என்று நடுநிலைவாதிகள், அரசியல் விமர்சகர்கள், அறிஞர்கள் ஆச்சர்யமோடு சொல்ல வைத்த நாள் இன்று...

காவல்துறை கைது செய்யும் என்ற எச்சரிக்கையை எள்ளிநகையாடி அணி அணியாய் ஆர்பரித்து வந்த என் இனமான இளைஞன் ஒவ்வொருவனின் முகத்திலும் கைதுக்கு பிறகும் புன்சிரிப்பையே காண முடிந்தது,

அச்சம் என்பது துளியுமின்றி, ஆர்பாட்டம்தானே என்ற அலட்சியமுமின்றி ஆர்வமோடு, உணர்வோடு ஓங்கி ஒலித்த குரலோடு புதுக்கோட்டையை புரட்டி போட்டார்கள் என்றால் அது மிகையாகாது, அந்த அதிர்வுகள் இன்றும் புதுகை மண்ணில் மறைந்து கிடக்கிறது. இன்றும் முத்தரையர் சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் காவல்துறை உள்ளிட்ட அரச துறைகள் உண்ணிப்பாக கவனிக்க வைத்த ஒரு பொன்னான தினம் நவம்பர் -05

வரும் எல்லோரையும் கைது செய்துகொண்டே இருக்கிறார்கள், ஒரு கட்டத்தில் அதுகூட முடியாமல் காவல்துறை திணறி நின்றதை காணும்போது நமக்கே பரிதாபம் வந்தது.   அவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி முடித்த முத்தரையர் பேரினம், பின்வந்த ஒரு வருட காலத்தில் எந்த சலனமும் இல்லாமல் புயலுக்கு பிந்ததைய அமைதியோடு இருக்கிறது, காட்டாராய் சீறிவந்த காளைகள் ஏனோ அமைதி என்னும் பெரும் கடலில் கலந்து நிற்கிறது.
இடையில் வந்த தேர்தல் காலத்தில் புற்றீசல்கள் முளைத்து தேவைகள் (!?) முடிந்து ஓய்ந்துவிட்டது, போராட்டத்தில் கலந்துகொள்ளாத, கைதுக்கு பயந்து ஓடியதுகள் எல்லாம் தேர்தலில் நின்ற கொடுமைகளும் நமக்கு தெரியும், சரி அந்த கோழைகளை விட்டுவிடுவோம்.

போராட்டம் என்பது போராளிகளை உருவாக்குமிடம் என்பதுதான் போராட்டத்தின் இலக்கணம், போராளிகளாய் ஆர்பரித்து வந்த என் உறவுகளின் உணர்வுகளுக்கு சரியான வடிகால் இன்றுவரை கானல்நீராகவே இருக்கிறது, புயலுக்கு யார் சலங்கை கட்ட போகிறார்கள்..??

"புதுகை போராட்ட போராளிகளுக்கும்" "புதுகை புரட்சியின் நாயகன் அண்ணன் சொக்கலிங்கத்திற்க்கும்" என்னோடு போராட்ட களத்தில் நின்ற அத்தனை போராளிகளுக்கும் இந்த சஞ்சய்காந்தி அம்பலக்காரனின் சிரம்தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீர வம்சத்தின் வாரிசுகளே...! புதுகை போராட்டம் நமக்கான தொடக்கம் என்றுதான் அன்றும் நான் சொன்னேன், இன்றும் அதையேதான் சொல்கிறேன். ஓய்ந்து கிடக்கும் சாதியில் நாம் பிறக்கவில்லை, ஓய்ந்துகிடப்பதனால் எதுவும் நமக்கு கிடைக்கப் போவதுமில்லை....! அன்று போர்களமே கதியென கிடந்த சாதிக்கு இனி போராடினால்தான் நீதி கிடைக்கும், போர்களமோ, போராட்டமோ நாம் "களத்தில்" நின்றுதான் தீர வேண்டும்.

இன்னும் வலிமையான போராட்டங்கள் என் சமூகம் முன்னெடுக்கும்போதுதான், நேற்று நாம் இழந்த நம்முடைய உரிமைகளை, நாளை நமது சந்ததிக்காவது பெற்றுத்தந்திட முடியும், ஆட்சியும், அதிகாரமும் அடங்கி கிடப்பவனுக்கு கிடையாது, முடங்கி கிடப்பவன் கொம்புதேனுக்கு ஆசையும் பட முடியாது.

அடுத்த போராட்டத்துக்கு நாள் குறியுங்கள்.....! அங்கே புரட்சிகொடியேந்தி சந்திப்போம்...!!

புரட்சி வணக்கங்களோடு

உங்கள் சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
நிறுவன தலைவர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்