செவ்வாய், 16 மே, 2017

கண்தானத்துக்கு முன்னோடி கண்ணப்ப நாயனார்

//கண்தானத்துக்கு முன்னோடி கண்ணப்ப நாயனார்:
கண்ணப்ப நாயனாரது கதை ‘கண் தானத்தை’ வலியுறுத்துகிறது. திருக்காளத்தி (தற்போதைய காளஹஸ்திதான்) மலையிலுள்ள சிவலிங்கத்தை வணங்கி, வந்த திண்ணனார், அச்சிவலிங்கத்தின் கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்து அக்குறையைத் தீர்க்கும் மருந்தாகத் தனது கண்ணை எடுத்து அச்சிவலிங்கத்தின் கண்ணில் அப்பினார் (பொருத்தினார்). இது கண்மாற்று அறுவை சிகிச்சையைப் போல் அல்லவா இருக்கிறது? அன்றுமுதல் அவர் கண்ணப்ப நாயனார் ஆனார் என அவரது கதை கூறுகிறது. ‘ஊனுக்கு ஊனே உற்ற நோய் தீர்க்கும்' எனத் தமிழ் வழக்கில் ஒரு பழமொழியும் உண்டு. கண்ணப்பநாயனார் செய்தது உடல் உறுப்புத் தானமல்லவா! கண் தானத்தை ஆரம்பித்து வைத்த முன்னோடியல்லவா அவர். //

Read More News : VIKADAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக