செவ்வாய், 23 மே, 2017

இந்த முட்டல்மோதல்கள் நல்லதுக்குதானா...?

திருச்சி : திருச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்ற, பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1342வது சதய விழா அரசு சார்பில்  நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள  முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள், அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனை விமானநிலையத்திலிருந்து வரவேற்க வீரமுத்தரையர்  முன்னேற்ற சங்க மாநில தலைவர் செல்வகுமாரை பாஜகவினர் அழைத்துச்சென்றனர். அமைச்சருடன் அவர் முத்தரையர் சிலைக்கு வந்தார். அப்போது பாஜக முன்னாள்  மாவட்ட தலைவர் பார்த்திபன், அங்கு காத்திருந்த தமிழ்நாடு முத்தரையர் சங்க  (ஆர்.விஸ்வநாதன் ஆதரவாளர்) நிர்வாகிகளிடம் அமைச்சர் வருகிறார், சேர்ந்து செல்லலாம் என  கூறி உள்ளார். இதற்கு, தமிழ்நாடு  முத்தரையர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினரும்  ஆவேசமாக கூச்சலிட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

சிலை அருகே பொன்.ராதாகிருஷ்ணன் வந்தபோது, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்  பத்திரிகையாளர்களுக்கு மேடையின்கீழே நின்று  பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் பொன்.ராதாகிருஷ்ணன் பேரிகார்டு பக்கத்தில் சுமார் 20 நிமிடம் காத்திருந்தார். அவருடன் வந்தவர்களும் கூட்ட நெரிசலில் முட்டி மோதியபடி நின்றதால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிைடயே, சீமான் சென்றதும், பொன்.ராதாகிருஷ்ணன் கன்டோன்மென்ட் போலீசாரை பார்த்து ‘என்ன ஏற்பாடு செய்து இருக்கிறீர்கள்?  நாங்கள் 20 நிமிடமாக காத்திருக்கிறது தெரியாதா? பேட்டி என்றால் வேறு  பகுதியில் போய் கொடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறலாமே? இதனால் தேவையில்லாத  பிரச்னை ஏற்பட இருந்ததை பார்த்தீர்களா? ’ என  கூறி கடிந்துகொண்டார்.




இந்த முட்டல்மோதல்கள் நல்லதுக்குதானா...? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக