ஜெ....ஜெ....!!
எத்தனையோ மேடைகளில் ஏறி என் சமூகத்தவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பெரும்பதவிகளுக்கு வரவேண்டும் என்ற பெருங்கனவை பேசியபோது இல்லாத சிலிர்ப்பு, இந்திய காவல் பணி எனும் ஐபிஎஸ் பணிக்கு தேர்வாகி விரைவில் பணியினை துவங்கவுள்ள அன்பு சகோதரர் ஜெ.ஜெயபாண்டியனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட போது உடல் சிலிர்த்துவிட்டது.
நான் இதைத்தான் அவரிடம் வலியுறுத்திவிட்டு வந்தேன்.
*தான்பெற்ற அறிவை சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கும் பயனுள்ள வகையில் செயலாற்றிட வேண்டும்.
*எதிர்கால இளைஞர் சமூகத்துக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்திட வேண்டும், இதுபோன்ற உயர்பதவிகளுக்கு அவர்கள் சென்றிட உங்களால் ஆன உதவிகளை செய்திட வேண்டும்.
*ஆன்றோர் பெரும்மக்களின் துணையோடு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாணவர்களை உயர்வுக்கு கொண்டு வர வேண்டும்
பெரும்கனவாய் போகும் என்பதை நிஜத்தில் நிகழ்த்திக்காட்டி இனி ஒரு எதிர்காலம் உண்டு என்ற திக்கெற்று நின்றவர்களுக்கு விடிவெள்ளியாய் முளைத்திருக்கும் ஜெ.ஜெயபாண்டியனைப்போல இன்னும் இன்னும் வீரியமிக்க விதைகள் முளைத்து வரட்டும் இந்திய ஆட்சிபணி, இந்திய காவல் பணி என்று திக்கெட்டும் ஒளி பரவட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
-கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக