கவனியுங்கள்...!
"முத்தரையர் சமுதாயத்தில்" தொடர்ச்சியாக பத்தாண்டுகள் சமுதாய பணி செய்த ஒருவரை அணுகி ஒரு கேள்வியை முன்வையுங்கள்.
"உங்கள் சமூகப்பணி எப்படி இருக்கிறது ?" என்று
அவரின் பதில் பெரும்பாலும் ஏதோ ஒரு கசப்பான அனுபவம் கொண்டதாகவும், தன்னால் எதையும் சாதித்துவிட முடியாத ஆதங்கத்தையும், தான் தொடர்ச்சியாக அப்பணிகளை மேற்கொள்ள விரும்பாததையும், வார்த்தைகளில் சற்று வருத்தம் மேலிடவே பேசுவார்கள்.
அதற்கு காரணங்கள் பல இருக்கலாம் அது புரிதலற்ற மக்கள், அரசியல் ஏமாளிதனம், நயவஞ்சக தோழமைகள், உழைப்பிற்கான மரியாதையின்மை, ஈகோ,புறக்கணிப்பு, இவரைவிட அவர் சரி என்று காலத்துக்கு காலம் மாறும் மக்களின் மனநிலை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
எடுத்த நிலைப்பாடுகள் எல்லோருக்கும் சரியானதாக இருந்துவிடுவதில்லை, சொல்லப்போனால் நிலைப்பாடு எடுக்கும்போது அது என்ன பின்விளைவுகளை தரும் என்றுகூட ஒருவரும் அறிந்திருப்பதில்லை.
ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களை காட்டி உண்மையான சமுதாய பற்றாளர்களை புறக்கணிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறது "முத்தரையர்" சமூகம்.
இன்று யாரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்களோ "அவர்களையே அவர்களே அவர்களின்" கால்களில் போட்டு மிதித்துவிட்டு அடுத்ததை தேடி ஓடிக்கொண்டே "உழைப்புகளை" உதாசினப்படுத்துகிறார்கள்.
யார் நல்லவர், எப்படி அவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்பதற்கான எந்த அளவீடும் இல்லாமலே ஒவ்வொரு மனிதருக்கும் அவமரியாதைகளை தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
உணர்வோடு சமுதாய பணி செய்ய வருபவர்களை புறக்கணித்து, அவர்களின் உழைப்பினை உதாசினப்படுத்திவிட்டு அடுத்து அடுத்து என்று பயணிப்பதனாலாவது எதாவது பலன் பெற்றிருக்கிறதா ? முத்தரையர் சமுதாயம் என்றால் அது நிச்சயமாக கிடையாது.
உணர்வோடு சமுதாயப்பணி செய்தவர்கள் மீது சொல்லப்படும் எந்த குற்றசாட்டினையும் முழுமையாக ஆய்வு செய்யுங்கள், அவர்களின் கடந்தகால செயல்பாடுகளை அலசிபாருங்கள், குற்றசாட்டுகளை தொகுத்து அவர்களிடமே விளக்கமும் கேளுங்கள்.
எதிர்காலத்தில் உங்களையும் இப்படி புதிதாக வந்தவர்கள் உதாசினப்படுத்திவிடாமல் காத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு : இது உண்மையான சமுதாய பற்றாளர்களுக்காக, உழைப்பவர்களுக்காக எழுதியது, இதே பத்தாண்டு காலத்துக்குள் சிலர் பெரும் வளர்ச்சியை பெற்றிருப்பார்கள், அவர்களிடம் மேற்சொன்ன எந்த கசப்பும் வார்த்தைளில் கூட இருக்காது, காரணம் அவர்கள் "அப்படியான பற்றாளர்கள் அல்ல" அவர்களின் நோக்கமும் "சமுதாய பணி அல்ல்து தொண்டு அல்ல" நேரம் கிடைக்கும்போதெல்லாம் விலைக்கு விற்பவர்கள். வாட்ஸ் ஆப்பில் கும்பல் சேர்த்து வசூல் வேட்டை நடத்தி பிழைப்பவர்கள், எதேதோ ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ச்சியாக மக்களை சிந்திக்கவிடாதவர்கள்.
இறுதியாக ::
உண்மையான உணர்வாளர்களை "எவனோ" சொன்னான் என்று உதாசினப்படுத்திவிடாமல் காத்துக்கொள்ளுங்கள், சமுதாயத்துக்கு எதாவது நன்மைகள் கிடைத்திட செய்யுங்கள்.
நன்றி.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக