செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

பண்டைய நீர்மேலாண்மை


காவேரி நீரின் அளவு நமக்குக்குறைக்கப்பட்டுவிட்டது .இப்போது தேவை 
நிறைவான நீர் மேலாண்மை மட்டுமே . .பண்டைய நீர்மேலாண்மையின் சிறப்புக் குறித்து கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன .

தற்காலத் திருகு அடைப்பான் போன்று ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றும்போது அளவை குறைக்க அதிகரிக்க என குமிழிகள்இருப்பது போல அன்றே இருந்தன
அவைகள் சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை எனஅவைகள் அழைக்கப்பட்டன .இதற்க்கு சான்றாக கிடைத்த கல்வெட்டைப் பற்றிய செய்தி இது
நீர்த்தேவை யை உணர்ந்து பழந்தமிழர்கள் ஏரி, குளங்களை உருவாக்கி மழை நீரை முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்தி உள்ளதற்குச் சான்றாக இந்த மருதன் ஏரிக்குமிழி உள்ளது. ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும் கி.பி.882 இல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை விரிவுபடுத்தினார். 

அதே காலக்கட்டத்தில் ஆதித்தன் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியா ளர்களான முத்தரையர்களோடு நெருங் கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தியுள்ளார் 

முத்தரையர். ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக இந்த குமிழி கல்வெட்டு திகழ்கிறது.

பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம். அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது.

இப்பெயருடன் ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம் அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படை யாகக்கொண்டு அப்பணியை செய்கிற வன், அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம்.

விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும் மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர் வழிவகுக்கும் என நம்பமுடிகிறது.

. இந்தக்குமிழிகல்வெட்டு பழங்காலபாசன முறைக்கு சான்றாக அமைந் திருப்பதாக மணிகண்டன் கூறுகிறார். ஆய்வாளர் ராஜேந்திரன், ஆசிரியர் கு.சோமசுந்தரம், மாணவர்கள் பால முருகன், சுதிவர்மன், ஹரிகர சுதன், சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா, நாகராஜன் ஆகியோரும் தனது ஆய்வுக்கு உதவியதாகத் தெரி வித்துள்ளார்.

இந்த செய்தி 2017 தீக்கதிர் நாளேட்டில் வெளிவந்தது 

அண்ணாமலை சுகுமாரன் 
19/2/18

News Source : ஈகரை


ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

எத்தனை சங்கம் இருக்கு ?


தானியங்கு மாற்று உரை இல்லை.
தானியங்கு மாற்று உரை இல்லை.

எத்தனை சங்கம் இருக்கு ? எத்தனை சங்கம் இருக்குன்னு என்கிட்ட கேட்டவங்க எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் "முத்தரையர்" சங்கம்ங்களின் எண்ணிக்கையை ஓரளவுக்கு அண்ணன் சென்னை ராசிராம் தொகுத்து இருக்கிறார், இதுல எதாவது விடுபட்டு இருந்தா சொல்லுங்க, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.... 

திருச்சி விமான நிலையத்துக்கு பெயர் சூட்டுவோம்....



கடந்த வாரம் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் நடத்திய ஏதோ ஒரு கண்துடைப்பு கூட்டத்தில் ஒரு தீர்மானம் போட்டு இருக்கிறார்கள், "திருச்சி விமான நிலையத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்ட வேண்டும்" என்று....

இந்த தீர்மானத்துக்கு எதிராக நிறைய கண்டனக்குரல்களை காண முடிந்தது, எனக்கும் கூட அந்த தீர்மானத்தின் மீது எதிர்கருத்து உண்டு அதே நேரம் நான் எந்த விமர்சனத்தையும் செய்யவில்லை, செய்யவும் முடியாது காரணம் இந்த ஒரு சங்கம் மட்டுமல்ல.... இன்னும் நிறைய சங்கங்களின் முழு நேரப்பணியே திமுக, அதிமுகவுக்காக புரோக்கர் வேலை செய்வதுதான், இது தெரிந்தும், எத்தனை முறை சுட்டிக்காட்டியும் அந்த சங்கங்கள் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறதே தவிர..., ஒரு இடத்திலும் இந்த காரணங்களுக்காக புறக்கணிக்கப்படுவதாக அறியவில்லை..., பிறகு எதற்கு கண்டனம் ? புரோக்கர் வேலையை செம்மையாக செய்பவர்களை ஆதரிப்பவர்கள் அடக்கி வாசிப்பதோடு அவர்களுக்கு லாபம் தரும் வேறு ஏதேனும் தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்.

இதில் நான் குறிப்பிட வேண்டிய முக்கியமான விசயமே.., ஜெயலலிதா பெயரை சூட்டக்கூடாது என்றும் பெரும்பிடுகு முத்தரையர் பெயரையே சூட்ட வேண்டும் என்றும் இந்த சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தினை கொண்டு மிக கடுமையான எதிர்வினையாற்றுபவர்களை அவர்கள் சார்ந்த அமைப்புகளை நான் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி..,

ஒருவேளை ஜெயலலிதா என்ற பெயரை சூட்ட கோரிக்கை வைக்க நாடளுமன்றத்தில் 40 க்கும் மேற்பட்ட அடிமைகள் உண்டு, ஆனால் உங்களுக்கு ? இருக்கும் ஒன்றும் கூட அந்த அடிமைகளில் ஒன்றுதான்...

ஆக கோரிக்கையாக கூட மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாத ஒரு விசயம் திருச்சி விமான நிலையத்துக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட வேண்டும் என்ற "பகல் கனவு" கனவாக சிலரிடம் இருக்கிறதே தவிர இதுவரை அதிகாரம் படைத்தவர்களின் வாசலைக்கூட தொடவில்லை இந்த கோரிக்கை, அப்படியான சூழ்நிலையில் ஜெயலலிதா பெயர் சூட்டும் கோரிக்கைக்கு இவ்வளவு ஆக்ரோசமான பொங்கல்கள் தேவையா..??

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்