கடந்த வாரம் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் நடத்திய ஏதோ ஒரு கண்துடைப்பு கூட்டத்தில் ஒரு தீர்மானம் போட்டு இருக்கிறார்கள், "திருச்சி விமான நிலையத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்ட வேண்டும்" என்று....
இந்த தீர்மானத்துக்கு எதிராக நிறைய கண்டனக்குரல்களை காண முடிந்தது, எனக்கும் கூட அந்த தீர்மானத்தின் மீது எதிர்கருத்து உண்டு அதே நேரம் நான் எந்த விமர்சனத்தையும் செய்யவில்லை, செய்யவும் முடியாது காரணம் இந்த ஒரு சங்கம் மட்டுமல்ல.... இன்னும் நிறைய சங்கங்களின் முழு நேரப்பணியே திமுக, அதிமுகவுக்காக புரோக்கர் வேலை செய்வதுதான், இது தெரிந்தும், எத்தனை முறை சுட்டிக்காட்டியும் அந்த சங்கங்கள் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறதே தவிர..., ஒரு இடத்திலும் இந்த காரணங்களுக்காக புறக்கணிக்கப்படுவதாக அறியவில்லை..., பிறகு எதற்கு கண்டனம் ? புரோக்கர் வேலையை செம்மையாக செய்பவர்களை ஆதரிப்பவர்கள் அடக்கி வாசிப்பதோடு அவர்களுக்கு லாபம் தரும் வேறு ஏதேனும் தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்.
இதில் நான் குறிப்பிட வேண்டிய முக்கியமான விசயமே.., ஜெயலலிதா பெயரை சூட்டக்கூடாது என்றும் பெரும்பிடுகு முத்தரையர் பெயரையே சூட்ட வேண்டும் என்றும் இந்த சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தினை கொண்டு மிக கடுமையான எதிர்வினையாற்றுபவர்களை அவர்கள் சார்ந்த அமைப்புகளை நான் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி..,
ஒருவேளை ஜெயலலிதா என்ற பெயரை சூட்ட கோரிக்கை வைக்க நாடளுமன்றத்தில் 40 க்கும் மேற்பட்ட அடிமைகள் உண்டு, ஆனால் உங்களுக்கு ? இருக்கும் ஒன்றும் கூட அந்த அடிமைகளில் ஒன்றுதான்...
ஆக கோரிக்கையாக கூட மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாத ஒரு விசயம் திருச்சி விமான நிலையத்துக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட வேண்டும் என்ற "பகல் கனவு" கனவாக சிலரிடம் இருக்கிறதே தவிர இதுவரை அதிகாரம் படைத்தவர்களின் வாசலைக்கூட தொடவில்லை இந்த கோரிக்கை, அப்படியான சூழ்நிலையில் ஜெயலலிதா பெயர் சூட்டும் கோரிக்கைக்கு இவ்வளவு ஆக்ரோசமான பொங்கல்கள் தேவையா..??
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக