வியாழன், 22 மார்ச், 2018

தமிழக இந்துக்களுக்கான அரசியல்...!

தமிழக இந்துக்களுக்கான அரசியல்...!

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் கிட்டதட்ட 88% மக்கள் ஹிந்து என்ற வகைப்பாட்டில் வருகிறார்கள், இவர்களில் சைவம் உண்டு, வைணவம் உண்டு, இன்னும் சிற்சில பிரிவுகளும் உண்டு

தமிழகத்தை பொருத்தவரை மதவழிபாடு என்பதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது அப்படியிருக்க அவர்களுக்கான அரசியல் எப்படி இருக்கிறது இங்கே ? எங்கோ டெல்லியில் இருந்து வரும் பாஜகவோ உத்திரபிரதேசத்தில் இருந்து வரும் ராமர்களோ தமிழகத்தில் ஹிந்து என்ற வகைப்பாட்டில் வரும் மக்களுக்கான அரசியலை செய்ய முனையும்போது குழப்பமே மிஞ்சுகிறது. காவி என்ற சொல்லுக்குள் முடங்க இங்கிருக்கும் தமிழினம் தயாரில்லை. இந்த பெரும்பான்மை மக்கள் எப்போதும் மதவெறியர்கள் கிடையாது ஆக வடமாநிலங்களிலிருந்து வருபவர்கள் செய்யும் அரசியல் இவர்களுக்கு கசப்பையே தருகிறது. அடிக்கடி இமயமலைகளில் சுற்றிதிரியும் ரஜினியின் ஆன்மீக அரசியலும் கூட வடநாட்டின் திணிப்பாகவே இருக்கும்.

அதனால்தான் ஹிந்து என்ற வகைப்படுத்தப்பட்ட சைவர்களும், வைணவர்களும் ஆண்டாண்டுகாலமாக வணங்கிய தெய்வங்களை அவமதிக்க பெரியார் என்ற பெயரால் முடிகிறது, இங்கிருக்கும் மிகசிறுபான்மை இனங்களான கிருஸ்தவமும், இஸ்லாமும் இந்த பெரியாரிஸ்ட்களோடு இணைந்துக் கொண்டு மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள்.

ஹிந்து மக்களுக்கான அரசியலை பாஜக போன்ற வடமாநில மக்களின் கட்சிகள் செய்ய முனையும்போது அவர்கள் இங்கிருக்கும் மொழியை சிறுமைபடுத்தி சமஸ்கிருதம் போன்றவற்றை திணிப்பதும், இங்கிருக்கும் சிறுதெய்வ வழிபாட்டை அவமதிப்பதும் ஹிந்து என்ற வகைப்பாட்டில் இருக்கும் மக்களுக்கே ஏற்புடைய செய்கையல்ல... அதேபோலதான் தமிழ்தேசியம் என்ற பெயரில் இயற்கையான சாதிய பிரிவுகளை மறுத்து பயணிக்க விரும்புபவர்களாலும் இங்கு தொடர்ந்து செயலாற்ற முடியவில்லை.

அப்படியானால் தமிழக ஹிந்துக்களுக்கான அரசியலை யார் செய்வது ?

தமிழகத்தில் இருக்கும் யார் ஒருவரும் சுயமாக ஒரு அரசியல் கட்சியை தோற்றிவித்தால் அதற்கு சாதிய சாயம் பூசி அந்த குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமான கட்சியாக அவர்களை ஒடுங்கிவிடுவதில் இங்கிருக்கும் பிழைப்புவாத பெரியாரிஸ்டுக்களுக்கு கைவந்த கலை... இந்த உதாரணம் அன்றைய டாக்டர் ராமதாஸ் வன்னியர் தொடங்கி இன்றைய தினகரன் கள்ளர் வரை தொடர்கிறது.

இதற்கு தீர்வுதான் என்ன ?

தமிழகத்தில் வாழும் ஹிந்து என்ற வகைப்பாட்டில் உள்ள மக்களுக்கான வழிபாட்டு முறைகள் மற்றவர்களைவிட மாறுபாடானது, அந்த வழிபாட்டை முழுமையாக உள்வாங்கி கொண்டு அவர்கள் அனைவரையும் இணைத்து பயணிக்கும் ஒரு வரைவு உருவாக்கப்பட‌ வேண்டும். அந்த வரைவு அரசியல் கட்சியாக மாற்றப்பட வேண்டும் அதில் சாதிய மறுப்பு என்ற முட்டாள்தனமான பெரியாரிஷ கொள்கைகளை தவிர்க்க வேண்டும், அவரவருக்கான வழிபாடு, வாழ்க்கை முறைமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் மொழியையும், தமிழ் மண்ணையும் நேசிக்க கூடியதாக இருக்க வேண்டும், இங்கிருக்கும் இயற்கை வளங்களை எவனுக்கும் காவுகொடுக்காமல் காக்க வேண்டும்.

இதனை எல்லாம் செய்ய தமிழகத்தில் பெரும்பாண்மை சமூகங்களான முத்தரையர், வன்னியர், முக்குலத்தோர், கொங்கு வேளாளர், பறையர், பள்ளர் போன்ற‌ சமூகங்களின் தலைமையை சுழற்சி முறையில் உருவாக்கி பெரும்பான்மை இனத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், இதில் பிறமத காழ்ப்புணர்வு அவசியமற்றது, பிறரின் சொத்துக்களை அழிப்பது முறையற்றது. தமிழ் மண்ணுக்கான அரசியலை முன்னெடுத்தால் காவி என்ற அவபெயரும் போகும், பெரியாரிஸ்ட்டுக்களும் தலைதெரிக்க ஓடுவார்கள்.

தேவை அனைத்து சமூங்களையும் இணைத்த "தமிழ் இந்துக்களுக்கான அரசியல்"

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக