நன்னயம் செய்து விடல்.
குறள் விளக்கம் : தமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்கும் முறையாவது தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமையயும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும்.
நேற்றைய தினம் (13.06.2018) தமிழக சட்டமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் ‘‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது, அவரது வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மீண்டும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இடம் பெற வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்’’ என்ற வாதத்தை முன் வைத்து அதற்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனை பதிலளிக்க வைத்திருக்கிறார்.
முத்துராமலிங்க தேவரை தங்களின் குறியீடாக கொண்ட சமூகங்களில் இருந்து கிட்டதட்ட ஐம்பது சட்டமன்ற உறுப்பினர்களும், பத்துக்கும் அதிகமான அமைச்சர் பெருமக்களும், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரும் சட்டமன்றத்தில் இருந்தும் கூட அவர்கள் யாருக்கும் "முத்துராமலிங்க தேவர்" மீது பற்று இருப்பதாக தெரியவில்லை..,
மாறாக முத்துராமலிங்க தேவரை குறியீடாக கொண்ட சமூகங்கள் அரசியல் ரீதியாக வஞ்சித்துவரும், அல்லது பெருமைமிகு இனத்தை சிறுமை படுத்துவதாக என்னி "வலையர்" என்று எள்ளி நகையாடும் (வலையர் என்பது பெருமீதத்தின் குறீயீடு என்பது வேறு கதை) முத்தரையர் சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், அதிலும் "வலையர்" என்ற உட்பிரிவை சேர்ந்த மேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பெரியபுள்ளான் "முத்துராமலிங்க தேவருக்காக" சட்டமன்றத்தில் பேசியது உள்ளபடியே மகிழ்ச்சியான ஒன்று...! அவருக்கு எங்களின் வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறோம்.
அதேபோல வருங்காலங்களில் பெரும்பிடுகு முத்தரையர், கண்ணப்ப நாயனார், திருமங்கையாழ்வார்களின் வரலாற்றை பாடதிட்டங்களில் சேர்க்க திரு.பெரியபுள்ளான் அவர்கள் வலியுறுத்த வேண்டும் என்று இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.
நன்றி
கா.சஞ்சய்காந்தி
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
செய்தி நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக