சீமராஜான்னு ஒரு படம் வந்த உடனே நம்முடைய நண்பர்கள் ஒரு ஐந்தாறு பேர் அழைத்திருந்தார்கள், சீமராஜா படத்தில் வளரியை பயன்படுத்தி இருக்கிறார்கள் அது ஏதோ ஒரு ஜமீன் தானாம் முதன்முதலில் பயன்படுத்தியது என்ற ரீதியில் படம் இருக்கிறது என்றார்கள்...
நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னதான் வளரியை பற்றி சொல்கிறார்கள் என்று அறியும் ஆவலில் இன்று அந்த படத்தினை காண சென்றிருந்தேன்.
ஏற்கனவே ஒரு படத்தில் ஆடு மேய்ப்பவனெல்லாம் வளரியை பயன்படுத்துவது போல அமைக்கப்பட்ட காட்சிகள் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது, நல்லவேளை இந்த படத்தில் அப்பயெல்லாம் காட்சிபடுத்தவில்லை, மிகவும் உயர்வாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள்...
வேறு என்ன குறை...? வழக்கம்போலவே வரலாற்று திரிபுகள்தான், திரைப்படம் போன்ற நுட்பமான உளவியல் ஊடகங்களில் காட்சியாக்கப்படும் ஒவ்வொன்றும் அதே வடிவில் மனித மனதில் பதிந்துவிடுவதுண்டு, அப்படிதான் இந்த படத்திலும் வரலாற்று சொருகல்கள் இருக்கிறது.
14 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான் வளரி போர் பயன்பாட்டுக்குக்கு வந்ததுபோன்ற ஒரு மாயதோற்ற உருவாக்கத்தை இப்படம் செய்கிறது.
உண்மையில் "முத்தரையர்கள்" உலகுக்கு அளித்த மிகசிறந்த போர் ஆயுதம் என்றால் அது வளரியாகதான் இருக்க முடியும்.
முத்தரையர்களின் ஆட்சி தஞ்சையில் முடிவுற்று ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஆங்கிலேயர்களுக்கு கூட அந்த ஆயுதம் அச்சத்தை ஏற்படுத்தி தடை செய்யும் அளவுக்கு போனது வரலாறு...
முத்தரையர்களின் ஆகச்சிறந்த போர்கலைகளில் ஒன்றான வளரியை பற்றிய போதிய விழிப்புணர்வோ, வரலாற்றரிவோ, ஆய்வு மனப்பாண்மையோ இல்லாத தற்கால முட்டாள் முத்தரையர்கள் தொலைத்த இடத்திலிருந்து யார்யாரோ அதனை தங்களின் ஆயுதமாக பறைசாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
வளரியை முத்தரையர்களுக்கு பிறகு மருது சகோதர்கள் உட்பட பல ஜமீன்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள், ஆனால் வளரியின் வரலாறு முத்தரையர் போர்குடியிலிருந்து தொடங்குகிறது.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக