முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 614 701
தொலைப்பேசி: 0091-4373-255228
மின் அஞ்சல்: sanjai28582@gmail.com
வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/
ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582
Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.
Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,
we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics
In the State of Tamil Nadu
Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer
we are known:
We have No Unity
we are Not Educationist
we are not Known our History
Yes if you have any solution share with us...............
We have Solution Accept it.................................
WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....
MUTHARAIYAR
We Are Follow up................
YOUNG LION ORGANIZATION
தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com
திங்கள், 26 செப்டம்பர், 2011
கல்விக்கு நிதியுதவி
Bharat Heavy Electricals Limited, Tiruchirappalli under its Corporate Social Responsibility (CSR) Scheme, is planning to provide scholarships to young and bright students of Class X and higher classes, polytechnic and professional courses in colleges for pursuing their studies.
Preference will be given to those students living below poverty line, backward classes, children of widows and physically challenged categories.
Eligible candidates may please contact at the following address for obtaining the application form and submitting the fill-in application:
General Manager/HR
Bharat Heavy Electricals Limited
Building No. 24
Tiruchirappalli – 620 014
The application forms will be available up to October 10, 2011 and the last date for sending the filled-in applications is October 31, 2011. For further information, you may please contact 0431 - 2577232 and 9443115695.
You can also download the application form from our website: http://www.bheltry.co.in
Application form for scholarship under Corporate Social Responsibilty
Scheme ( CSR ), BHEL, Tiruchirappalli for the Academic year 2011-12
Name of the Student
Class or Year
Name and address of School / Polytechnic / College
Name of parent and
address
Phone No(if any):
Mobile No:
Category (SC/ST/OBC/PH)
Place of work,
Nature of work of parent
Whether application submitted / receiving any Scholarship from Government/NGO or any other organization,
If so details
Signature of Applicant
Date:
Copy attached:
1. Undertaking
2. Photograph
3. Annual Income Certificate issued by Thasildar
Recommendation of the Head of Institution:
UNDERTAKING BY PARENT SEEKING SCHOLARSHIP FOR HIS/HER CHILD
I, Smt/Shri __________________________ aged ____________Son/Daughter of Sri___________________________ residing at _______________________
and working as ____________________ seeking scholarship under Corporate Social Responsibility scheme, BHEL, Tiruchirappalli for my child Chi/Sow.______________________ studying in class ______________at _____________________________ School /Polytechnic / College solemnly state the following:
1. The particulars furnished by me in the application form are true and factual.
2. I shall inculcate good habits and provide a healthy and wholesome atmosphere at my house to enable my child pursue his /her study.
3. If at any time the track record of my child or myself becomes questionable, the scholarship granted to my child may be withdrawn.
Signature of the Parent
Please find the details : http://www.bheltry.co.in/appforms/ApplicationUndertaking.pdf
இலங்கையில் முத்தரையர் பற்றிய தகவல்------ ஆய்வு குழுவினர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி...!! -சிங்கம் ஆர்.புஷ்பராஜ்
இலங்கையில் முத்தரையர் பற்றிய தகவல்------ ஆய்வு குழுவினர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி...
வீரம் செறிந்த வன்னியில் தேடல்கள்..-வன்னியின் வரலாறு http://www.mannarnews.com/2011/09/blog-post_8489.html
டாக்டர். கே. இந்திரபால, முள்ளியவளை ஆசிரியர் சி. கன்னையன், வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) க.கனகையா, மாமுலையைச் சேர்ந்த க.தவராசா ஊஞ்சாற் கட்டியைச் சேர்ந்த சி. கணேசபிள்ளை, கோரமோட்டையைச் சேர்ந்த க.ஜெயக்கொடி ஆகியோரைக் கொண்ட குழுவினர், நெடுங்கேணி, பட்டாடை பிரிந்த குளம், கோரமோட்டை, வெடுக்கு நாறி மலை, வெடிவிச்ச கல்லு, முத்தரையன் கட்டு ஆகிய இடங்களில் அடர் காடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் சாசனங்கள், கட்டிட அழிபாடுகள் ஆகியவற்றை ஆராய்ப்பட்டது. வெடிவிச்ச கல்லிலே பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கி.பி முதலாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும் ஆராய்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் முற்பட்ட சாசனங்கள் வெடுக்கு நாறி மலையிலுள்ள குகைகளில் காணப்பட்டன. இவை இரண்டாயிரத்து இருநு}று ஆண்டுகளிற்கு முற்பட்டவை. இக்குகைகளில் மூன்று கல்வெட்டுக்களும் காணப்பட்டன. முத்தரையன் கட்டிலே கி.பி ஒன்பதாம் நு}ற்றாண்டைக் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது.|| எனவும் கூறும் டாக்டர். இந்திரபால தாம் முத்தரையன் கட்டுக் காட்டில் கண்ட அரண்மனையைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்.
...
~~முத்தரையன் கட்டியே ஆராயப்பட்ட கட்டிட அழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வியப்ப10ட்டுவனவாகவும், காணப்பட்டன. அது ஒரு பெரிய அரண்மனை கருங்கற்களினாலான் உயரமான சுற்று மதிலையும் அதனைச் சுற்றி ஆழமான அகழியையும் கொண்ட விசாலமான அரண்மனையாக அது காணப்பட்டது. அரண்மனை மத்தியில் நல்ல நிலையிலுள்ள சீராகச் செதுக்கப்பட்ட வாசல்கள் கதவுகள் காணப்பட்டன. அத்துடன் மன்னர்கள் பயன்படுத்திய பெரிய கல்லாசனம் ஒன்றும் உடையாது பேணப்பட்டு இருக்கின்றது.||
இந்த அழிபாடுகளை நோக்குமிடத்து முத்தரையன் கட்டு ஒரு காலத்தில் ஓர் இராசதானியாக விளங்கியிருக்க வேண்டும் என்று கூறக் கூடியதாக உள்ளது. எனினும் அதன் பிறகு இது சம்பந்தமாக செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. நாட்டுப் பிரச்சினை காரணமாக அவ்வாராய்ச்சிகள் தடைப்பட்டிருக்கலாம். இனி, வெட்டு நாறி மலையில் ஆராய்ச்சியை மேற்கொண்ட விதி துருவசங்கரி எனும் ஆராய்ச்சியாளர். எழுதியுள்ளதைப் பார்ப்போம். அவர் அதை ஓர் நேரடி விபரிப்பாகத் தந்துள்ளார். அதனை சில சுருக்கங்களுடன் தருகிறேன்.
~~பெரிய கல்லுருண்டைகள், அதனிடையே படிகள் போன்று இயற்கையாக அமைந்த அமைப்புக்கள் அதன் உதவியுடன் எட்டுப் பத்து அடிகள் ஏறியிருப்போட். எம் முன்னே மூன்று பெரியபாரிய செவ்வக அமைப்புடைய கற்குற்றிகள், அவற்றில் இரண்டு உயர்ந்து ஒன்றிற்கொன்று சமாந்தரமாகவும், குறுகியது இவ்விரண்டையும் தொடுத்தாற் போல் குறுக்கே செங்குத்தாக இருந்தது. அம்மாதிரியான பாரிய கற்கள் அவ்வட்டாரத்தில் எவ்விடத்திலும் இல்லை. குறுக்கே கிடந்த கல் கிட்டத்தட்ட 40 அடிஅகலமும். 20 அடி உயரமும் இருக்கும். அக்கல்லு வழமையாக படம் எடுக்கும் நாகத்தின் தலையைப் போல் குடையப் பெற்று மழையின் போது வடிந்து வரும் நீர் எங்கே குகைக்குள் போய்விடுமோ என்ற அச்சத்தின் நிமித்தம் குகை வாசலைச் சுற்றி விளிம்பு அமைக்கப்பட்டிருந்தது. குகை வாசலில் ஏதோ புரியாத எழுத்துக்கள், இவை எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக்களின் மாதிரியை பதிவு செய்து கொண்டேன்.
பின் நீண்ட ஒரு தடியினால் குகைச் சுவர் வழியாக அதன் அடியைக் கிண்டினேன். கூட வந்த எல்லோரும் அதிசயித்தனர். அங்கே சலசலவென நீரின் சத்தம். திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்தேன். அது நீரினால் நனைந்திருந்தது. இப்போது புரிந்தது அது மழை நீரைச் சேமிப்பதற்கான அமைப்பு என்று. கல்லில் விழும் மழைத்துளிகள் படமெடுத்த பாம்பின் அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்டு வடிந்து கீழே உள்ள நீர்த்தொட்டியில் சேமிக்கப்படுகிறது. அப்படியாயின் முன்பு கூறியது என்ன? விளிம்பு அமைக்கப்பட்டு நீர் உள்ளே வடியாமல் அமைக்கப்பட்டது. எப்படியாக முடியும்? ரொம்ப நல்ல கேள்வி. நீங்களும் என்னுடன் சேர்ந்து உசாராகிவிட்டீர்கள். பாறை செவ்வகவடிவம் அதன் மேற்பரப்பில் து}சு முதலியன அடைவதற்கு சாத்தியம் உண்டு.
அங்கே சில தாவரங்கள் கூட முளைத்திருக்கின்றன. அதனைப் பின்னர் ஆராய்வோம். அப்படியாயின் பாறை உச்சியில் விழும் நீர் வடியும் போது மண், சருகுகள் போன்றவற்றை அள்ளி சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லாவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது. நில நீர் இல்லாத இடங்களில், ஆறு, குளங்கள் இல்லாத இடங்களில் குடிநீரைச் சேமிக்கும் பழக்கம் இலங்கை ஆதிக்குடிகளிடம் இருந்திருக்கிறது என்பதில் எள்ளளவிலும் ஐயமில்லை. பின், பாறையைச் சுற்றி வந்தோம் படமெடுக்கும் நாகத்தின் தலையமைப்பைக் கொண்ட குகையின் பின்புறத்தே பற்றுவாரிக்ள விடக்கூடிய தரைமேலே ஒரு பக்கம் திறந்த மண்டபம். பக்கவாட்டில் இருந்த ஒன்றுக்கொன்று சமாந்தரமாகக் கிடக்கும் செவ்வகப் பாறைகள் உள்ளே வளைந்து ஒன்றையொன்று முட்டத்துடித்துக் கொண்டிருந்தன.
வெள்ளி, 23 செப்டம்பர், 2011
சிங்கம் ஆர். புஷ்பராஜ்
----மு.க.ஸ்டாலின்
தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஒவ்வொரு முத்தரையனும் தாங்களே நிற்பதாக கருதி வாக்களித்தால் பரஞ்சோதி முத்தரையரின் வெற்றி நிச்சயம்....
-----சிங்கம் ஆர். புஷ்பராஜ்
வியாழன், 22 செப்டம்பர், 2011
திருச்சி மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி : ஜெயலலிதா அறிவிப்பு

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளருமான பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை, பெரம்பலூர் அருகே சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து காலியான திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு, வரும் அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது என்று, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வரும் 19ம் தேதி, இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட எந்தக் கட்சியும், கட்சியினரிடமிருந்து விருப்ப மனு வாங்காமல் இருந்தது. நேற்று காலை, திடீரென திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி போட்டியிடுவார் என்று கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டது.
மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்ஜோதிக்கு, 51 வயதாகிறது. இவருடைய சொந்த ஊர், திருச்சி மாவட்டம் எட்டரை கிராமம். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருடைய மனைவி பரமேஸ்வரி. மகள் மதுமிதா பி.இ., படிக்கிறார். மகன் அழகன், கேம்பியன் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். எம்.ஏ., பி.எல்., படித்துள்ள பரஞ்ஜோதி, மூன்றாண்டு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1972ம் ஆண்டு முதல், அ.தி.மு.க.,வில் இருக்கும் பரஞ்ஜோதி, 1988 முதல் 1994ம் ஆண்டு வரை, ஏழாண்டு மாவட்ட துணைச் செயலராகவும், 1994 முதல் 1996ம் ஆண்டு வரை, மாநகர் மாவட்ட இணைச் செயலராகவும், 1996ம் ஆண்டு முதல் 2000ம் வரை, மாநகர் மாவட்டச் செயலராகவும், 2004 முதல் 2006ம் ஆண்டு வரை, திருச்சி புறநகர் மாவட்டச் செயலராகவும் கட்சிப் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியிலும், 2004ம் ஆண்டு திருச்சி எம்.பி., தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த பரஞ்ஜோதி, 2006ம் ஆண்டு ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். கடந்த, 2004 முதல் 2006ம் ஆண்டு வரை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் வாரிய சேர்மனாக பொறுப்பு வகித்தார். தற்போது, முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் தொகுதியின் பொறுப்பாளாக இருந்து வருகிறார்.
நன்றி தினமலர்
திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளராக, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக உள்ள பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டார். வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19ம் தேதியே துவங்கிவிட்டாலும், அன்று அஷ்டமி, மறுநாள் நவமி என்பதால் பரஞ்ஜோதி வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.நேற்று மதியம் 12 மணி வரை நவமி இருந்தது. அதற்கு முன், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் ஈ.வெ.ரா., சிலை, சிந்தாமணி அண்ணாதுரை சிலை, ஒத்தக்கடை பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு, வேட்பாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்தார். பின்னர், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிவபதி, மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,யுமான மனோகரன், எம்.பி.,குமார், எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, அணிச் செயலாளர்கள் சீனிவாசன், தமிழரசி, பத்மநாபன் உட்பட ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.அதன்பின், தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆர்.டி.ஓ., சம்பத்திடம், வேட்பாளர் பரஞ்ஜோதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நண்பர் ராஜ்குமாரின் நினைவுகள்...!!
வடக்கே வேலூர் முதல் தெற்கே மேலூர் வரை ,,மேற்கே கரூர் கிருஷ்ணராயபுரம் முதல் கிழக்கு கடற்கரை வரை பறந்து விரிந்த முத்தரையர் சமுதாயத்தை 1 ரூ சேர்க்க 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது தான் தமிழ் நாடு முத்தரையர் சங்கம் ..
துவங்கியவர்கள் .. தஞ்சை நடராஜன் ,, ர . வெங்கடசாமி ..
ஆனால் அப்போது விழிப்புணர்வு மிகவும் குறைவு ,, நம் மக்களிடம் பொருளாதாரம் குறைவு ..
வருபவர்கள் மிக குறைவு .. திருச்சி யை மாணிக்கமும் , அம்பலதுஅரசு வும் தஞ்சை dist யை LION : ஜெயபாலும் nadathinarkal ,, .. 1986 ஆம் ஆண்டு உள்ளாச்சி தேர்தலில் த. மு ச .. 4 union சேர்மன் க்கு மட்டும் தனித்து போடிபோடது ..
நத்தம் ,, முத்துபேட்டை ,, சாகோட்டை ,, +1 ..
பின்னர் த மு ச மாநில அலுவலகம் சென்னை சிந்தாதிரி பேட்டையில் கட்டுவதற்கு 3 லச்சம் திரட்டுவதே பெரும் கஷ்டம் ..
அதில் உழைத்தவர்களுக்கு தெரியும் ..பின்னர் 1995 ஆண்டுகளில் சென்னை சீரணி அரங்கில் மிக பிரம்மடமாக முத்தரையர் சங்கம் மாநாடு நடைபெற்றது .. (( அப்போதும் மக்களை சேர்ப்பது கஷ்டம்தான் எனக்கு நன்கு தெரியும் ..
முத்துபேட்டை இல் இருந்து 3 பேருந்து சென்றது ,, அதில் 150 பேர் .. 1 ரூ வரின் பஸ் டிக்கெட் 100 ரூபாய் தான் ..
அதை கொடுத்து வர கூட நம் சமுதாய மக்கள் முன் வரவில்லை ..ஆணால் இங்கு வசிக்கும் நம் மக்களின் எண்ணிக்கை 25000 ..))
ஆணால் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் நம் சமுதாய மக்கள் அலை , அலை யை திரண்டு வந்தனர் ...
நம் மக்கள் வெள்ளத்தில் சீரணி அரங்கமும் ,, கடற்கரையும் ,நிறைத்தது .. அணைத்து அரசியல் கட்சி ,, மற்ற சாதி மக்களும் நம் கூடத்தை கண்டு திகைத்தனர் .. மிக சிறப்பாக துவகிய நம் சங்க மாநாடு ... ............ என்ன நடத்து
வேலூர் , திருச்சி ,, புதுகோட்டை ,, மாவட்ட நம் மக்கள் மாநில பதவிக்காக சண்டை .. ஆரம்பம் ..
பல பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன ..கூட்டம் சிதறி ஓடின,,(( நான் 9 வயதில் கூட்ட நெரிசலில் சிக்கி விழுது ஓடி வந்தது இன்றும் நியாபகம் வருகிறது )) அப்போது நம் இன மக்களிடம் நடத்த சண்டையை பார்த்த பத்திரிகைகள் ... மறுநாள் கிழிதுவிட்டர்கள்..
ஆனால் இப்போது 1000 கணக்கில் நம் இளைய சமுதாயம் திரண்டு வருகிறது ...இன்னும் 1 ரூ நிலையான தலைமை இல்லை என்பதை யாவரும் அறிந்ததே ...
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
திரு. மு. பரஞ்சோதி அவர்களுக்கு இளம் சிங்கங்களின் வாழ்த்துக்கள் ..!!

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக திரு. மு. பரஞ்சோதியை அறிவித்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமாகிய மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றி ..!! திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உங்கள் முன்பு மிக விரைவில் வர இருக்கும் திரு. மு. பரஞ்சோதி அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. !!

இவண்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
சிங்கம் ஆர். புஷ்பராஜ் தனது FACEBOOK ல் எழுதியது
கல்வி, வேலைவாய்ப்பு தகவல்களை என்னாலும் தர முடியும்... நன்றி...
தமிழ்நாடு முத்தரையர் சங்கம்
பேராவூரணி ஒன்றிய, நகர திமுக சார்பில் ஒன்றியச் செயலர் சுப. சேகர் தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார், துணைத் தலைவர் கி.ரெ. பழனிவேல், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இரா. ராஜரத்தினம், சேதுபாவாசத்திரம் ஒன்றிய திமுக செயலர் மு.கி. முத்துமாணிக்கம், திமுக மாவட்டத் துணைச் செயலர் என். செல்வராஜ், மாவட்டப் பிரதிநிதி ஏ. அப்துல்மஜீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் அந்தக் கட்சியின் விவசாய அணி மாநிலத் துணைச் செயலர் வி.எஸ்.கே. பழனிவேல் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தேமுதிக ஒன்றியச் செயலர்கள் நடேச. பழனிவேல், ஏ. செல்லத்துரை, நகரச் செயலர் எஸ்.ஆர். சீனிவாசன், மருத்துவரணி மாவட்டச் செயலர் அ. சிவபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாபநாசம்: கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இரா. துரைக்கண்ணு தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். அதிமுக மாவட்டச் செயலர் எம். ரங்கசாமி, தொகுதிச் செயலர் எம். கருணாநிதி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, ரோட்டரி மணிக்கூண்டு அருகே அமைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு அதிமுக பாபநாசம் தொகுதிச் செயலர் எம். கருணாநிதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். கோபுராஜபுரம் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு ஊராட்சி செயலர் என். சுரேஷ் தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி கலியமூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க வில் வெடிக்கும் கோஷ்டி மோதல்
அமைச்சராகவும் தி.மு.க. மாவட்டச் செயலாளராக அதிகாரத்தோடு வலம் வந்த கே.என். நேருவைத் தோற்கடிக்கப்பட்ட தொகுதி என்பதால் இங்கே போட்டியிட அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கட்சிக்கு உழைத்தவர்கள், கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள், பணம் இருப்பவர்கள், ஏற்கெனவே போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்கள், சீனியர்கள், என பல்வேறு தகுதிகளையும் ஆளாளுக்குத் தாங்களே நிர்ணயித்துக் கொண்டு சீட்டுக்கு மல்லுக்கட்டுகிறார்கள். போதாக்குறைக்கு ‘சசிகலா இந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார்’ என்ற தகவல் வேறு கட்சிக்காரர்களை மிரட்டுகிறது.
தி.மு.க.விலோ நிலைமை ரொம்பப் பரிதாபமாக இருக்கிறது. யாருக்குமே தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லை என்பதுதான் உண்மை. ஏற்கெனவே போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் நேரு தற்போது ஜெயிலில் இருக்கிறார். அவர் வெளியே வருவாரா? அவருக்குத்தான் சீட் கொடுக்கப்படுமா? சீட் கொடுத்த பிறகு மீண்டும் பிடித்து உள்ளே போட்டால் என்ன செய்வது? என்று பல்வேறு கேள்விகள் கட்சிக்காரர்கள் மனதில் அலையடித்துக் கிடக்கிறது. வெகு ஆர்ப்பாட்டமாக அவர்கள் ஆரம்பித்த மனு கொடுக்கும் திருவிழாவும் ஓய்ந்து போய்க் கிடக்கிறத
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வில் சீட் பெறுபவர் பலியாடுதான் என்பது தி.மு.க.வினர் அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. அதிலும் முன்னாள் அமைச்சர் நேரு, மு ன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், நேருவின் தம்பி ராமஜெயம், அமைச்சரின் வலதுகரமான காஜாமலை விஜய், துணை மேயரும் நகரச் செயலாளருமான அன்பழகன் என முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து ஜெயில் நோக்கி வரிசை கட்ட, தொண்டர்கள் மனதளவில் ரொம்பவும் சோர்ந்து போய்விட்டனர். கூடவே, ‘அஞ்சு வருசம் ஆட்டம் போட்டாங்கல்ல அனுபவிக்கட்டும்’ என்ற மனநிலையும் தி.மு.க. தொண்டர்களிடம் இருப்பதைக் காண முடிகிறது.
கடந்த ஐந்து வருடங்கள் அ.தி.மு.க. அமைதியாக அரசியல் செய்தது போலவே நாமும் செய்யலாம் என்றே தி.மு.க.வில் பலரும் நினைக்கிறார்கள். இரண்டாம் கட்டத் தலைவர்களும் அந்த முடிவுக்கு வந்தே விட்டார்கள்.
இதுதான் இப்படி என்றால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தி.மு.க.வின் தேர்தல் பணிக்குழுவில் உள்ளோரின் பட்டியலைப் பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்து விட்டனர். காரணம், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மாவட்ட துணைச் செயலாளர் அம்பிகாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.என். சேகரன் மாவட்டப் பொருளாளர் கே.கே.எம். தங்கராசா ஆகிய மூவருமே கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.
அதிகாரத்தில் இருந்தபோது நேருவை எதிர்த்து அரசியல் செய்து வந்த முத்தரையர் இனத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்வராஜின் தரப்பில் ‘நேரு ஜெயிலுக்குப் போன நிலையிலாவது எங்களுக்கு வாய்ப்புத் தந்திருக்கக் கூடாதா?’ என்ற கேள்வியுடன் சுணங்கிப் போயிருக்கின்றனர். வெடித்திருக்கும் கோஷ்டி மோதலால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பள்ளக்காடு ஒன்றிய கவுன்சிலர் ராஜவேலு “இது திராவிட முன்னேற்றக் கழகமா? இல்லை கள்ளர் பேரவையா? ஒரு தகுதியான முத்தரையர் கூடவா இங்கு இல்லை? முன்னாள் அமைச்சரும், நேருவுக்கு முந்தைய மாவட்டச் செயலாளருமான செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மாயவன் ஆகியோர் தி.மு.க. தலைமையின் நினைவில் இ ல்லையா? முத்தரையர் இனத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருக்கும் தி.மு.க. வுக்கு நாங்கள் ஒரு பாடம் புகட்டுவோம்’’ என்றார்.
தவிரவும், அ.தி.மு.க.வை எதிர்த்து தேர்தல் வேலை செய்தால் நம் மீதும் ஏதேனும் வழக்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் தி.மு.க.வினரைத் தொக்கி நிற்கிறது.
காங்கிரஸ் வழக்கம்போல் கண்ணைக் கட்டிவிட்ட பூனை போல் மருண்டு போய் நிற்கிறது. மொத்தத்தில் திருச்சி மேற்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தயவில் எந்த சிரமமும் இல்லாமல் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றே தெரிகிறது.
முத்தரையர் சுரேஷ் தனது facebook ல் எழுதியது
எனக்கு எழுத கஷ்டமாக இருக்கிறது, இருந்தாலும் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இதை muthuraiyar groupil எழுதுகிறேன். இவர் மனைவி கம்மல நாயுடு வை சார்ந்தவர். இந்த பகுதில் நம்மவர்களை தொட்டாலே தீட்டு என்ற நிலையஇல் அடிமைபடுத்தி வைத்துள்ளர்கள். ஒரு வேலை இவர் நல்லவராக இருந்தாலும். இவரின் உறவினர்கள் அதிகாரத்துக்கு வரும் பொது நமக்கு சாதகமாக நடந்து கொள்வார்களா?. ஒரு காலத்தில் MGR யை நாம் பெருவாரியாக சப்போர்ட் செய்தோம் இபொழுது யார் அதை அன்பவிஇக்கிரர்கள் (நான் சொல்ல தேவை இல்லை ) நம் இன சிங்கம் வெங்கடாசலம் வளைந்து கொடுக்காமல் இருந்ததால் .
அவரை அமைச்சர் ஆகி ஒரே வாரத்தில் தூக்கி எறிந்தார்கள் . இபொழுது அவர் நமிடம் இல்லை . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கோணத்தில் அவருடைய மகனை .நமுடைய இன பெயரில் கட்சி நடத்திக்கொண்டு இருந்தவர் மூலம் தோல்வி அடைய செய்து அவரையும் சாதாரண MLA என்று ஆகிவிட்டார்கள் . தஞ்சை மாவட்டத்தில் அந்த கட்சில் நமக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று அங்கு உள்ளவர்களுக்கு தெரியும்.
அதே போல சுயமரியாதை கட்சி DMK இல் நமக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறது .என்று உங்களுக்கு தெரியும் திருச்சில் நேரு , புதுக்கோட்டை ,தஞ்சை பழனி மாணிக்கம்,திருவாரூரில் கலைவாணன் தம்பி இவர்களை மீறி நம்மால் செயல் பட முடியுமா.
சரி நம் சங்கத்தில் சார்பாக கடந்த தர்தலில் நின்னவர்கள் வாங்கிய வோட்டு உங்களுக்கு (deposit கூட இல்லை) தெரியும்.
இதற்கு என்னதான் தீர்வு (என் என்னம் )
1 நம்மவர்கள் ஏதானும் ஒரு கட்சியென் மீது அளவு கடந்து விசுவாசமாக இருக்கிறார்கள். இதுதான் நம் பலவீனம்.
2 அந்த கட்சிஎனல் உங்களுக்கு தனிப்பட்ட லாபம் இருந்தால் விசுவாசமாக இருங்கள்.
3 இல்லையேல் நம் வேட்பாளரை நிறுத்தும கட்சிக்கு வோட்டு போடுங்கள்.
4 அப்படி எந்த வேட்பாளரும் இல்லை என்றால் சுயட்சையாக நிக்கும் நம் இன வேட்பாளரை ஆதரியுங்கள் (அவர் தோத்தாலும் பரவாஇல்லை)
5 அடுத்த முறை நமக்கு அந்த அந்த தொகுதியல் ஒரு அதிகாரமுள்ள பதவியை (பயந்துக்கொண்டு) கொடுப்பார்கள்.
6 தஞ்சை மாவட்டத்தில் ஒரு MLA கூட நமக்கு இல்லை. வருகிற தர்தலில் நகர மன்றத்தை குறிவைபோம்.
7 அடுத்த election கு நம் இளம் சிங்கங்களே இப்போதே நம் பணியை தொடங்குங்கள்.
8 உங்கள் கைகளில் தான் நம்மவர்களின் எதிர்காலம் இருக்கிறது.
9 உங்களின் வேகம் எங்களை போன்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது.
நன்றி இளம் சிங்கங்கள்
புதன், 31 ஆகஸ்ட், 2011
திரு. ஜெயமோகன் அவர்கள் அதிமதம் என்ற இணைய தளத்தில் எழுதியது
இந்த தளத்தில் புதிய ஆய்வுகள் ஏதேனும்செய்யப்பட்டுள்ளனவா? நூல்கள் ஏதேனும் உள்ளனவா? 300 வருடம் என்பது ஒரு வம்சம் அல்லது அரசாங்கம் முற்றிலும் வரலாற்றில் இருந்து மறைந்து போக முடியாத அளவுக்கு நீண்டது அல்லவா?
முகையூர்
அசதா
அன்புள்ள அசதா
களப்பிரர் காலத்தைப் பற்றி இப்போது அத்தகைய ஒற்றைவரி சொல்லப்படுவதில்லை– அதாவது அறிஞர் நடுவே. இப்போது ஏராளமான ஆய்வுகளும் புதிய ஊகங்களும் உருவாகி வந்துள்லன
ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் வரலாற்றை எழுதியவர்கள் சைவ அறிஞர்கள். அவர்களுக்கு சமணம் மீது ஒரு கசப்பு எப்போதும் இருந்தது. தமிழ்நாட்டில் நடந்த சமண சைவ பூசல்கள் அதற்கு முக்கியமான காரணம். தமிழ்கச் சைவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் சமணர்கள்.
ஆகவே அவர்கள் பொதுவாக இரு விஷயங்களைச் செய்தார்கள் ஒன்று, சமணநூல்களை சைவநூல்கள் என விளக்கும் பெரும் விளக்கநூல்களை எழுதினார்கள். சிறந்த உதாரணம் கா.சு.பிள்ளை எழுதிய திருக்குறள் உரைவிளக்க நூல் இரண்டாவதாக சமண மதத்தின் வரலாற்று பங்களிப்பை பெரும்பாலும் வெற்றிடமாகவே விட்டுவிட்டார்கள்
களப்பிரர்கள் சமணர்கள் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சமணர்கள் அக்காலத்தில் பெரிய ஆலயங்களை எழுப்பியதோ அவற்றில் கல்வெட்டுகளை பொறித்ததோ இல்லை. ஆரம்பகால தமிழ் வரலாறு பெரும்பாலும் நிவந்தங்களைப்பற்றிய கல்வெட்டுகளை சார்ந்தே எழுதபப்ட்டது. ஆகவே களப்பிரர் வரலாறு என்பது அனேகமாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. அதாவது அன்றைய வரலாற்றாய்வின் வழிகளில் அதை அறிய முடியவில்லை. ஆகவேதான் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வரி தோன்றியது
பின்னர் வரலாறு அரசியலுக்கான கருவியாக ஆகியது. தமிழர் என்ற அடையாள உருவாக்கத்துக்கு வரலாறு பயன்படுத்தப்பட்டது. அப்போது களப்பிரர்கள் மறக்கப்பட்டார்கள். மறுக்கவும் பட்டார்கள்
ஆனால் சமீப காலமாக பழைய சைவ ஆய்வாளர்களில் இருந்து முரண்படும் புதிய தலைமுறை ஆய்வாளர்கள் உருவாகிவந்தபோது களப்பிரர் குறித்த புதிய நோக்கு உருவாகி வந்தது. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவை. திருக்குறளும் அவற்றில் ஒன்று
களப்பிரர் காலகட்டத்தைச் சேர்ந்த பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. உதாரணம் சிதறால் மலை [குமரிமாவட்டம்] அப்பாண்டநாதர் கோயில் [ உளுந்தூர்பேட்டை] . அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு புதிய வரலாறு விரிவாக இனிமேல்தான் எழுதபப்டவேண்டும்
மேலும் நமது வரலாற்றாய்வு என்பது கடந்த ஐம்பதாண்டுக்காலமாக தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் நிலத்துக்குள்ளும் சுருங்கி விட்டது. பிறமொழியும் பிற பண்பாடும் அறிந்த வரலாற்றாசிரியர்கள் மிகவும் குறைவே. ஆகவே சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ல சமண மரபைச் சேர்ந்த நூல்களைக் கணக்கில் கொன்டு தமிழக வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை
இருப்பினும் சில முக்கியமான நூல்கள் வந்துள்ளன. முனைவர் க.ப.அறவாணன் களப்பிரர் காலம் குறித்து சில முக்கியமான ஆய்வுகளைச் செய்திருக்கிறார். அவரது ‘களப்பிரர்காலம் பொற்காலம்’ என்ற நூல் முக்கியமான ஒன்று.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது.
மதுரை முதல் புதுக்கோட்டை வரை இவர்கள் ஆண்டிருந்த நிலப்பகுதி என்றும் இப்பகுதியில் உள்ள பல ஊர்பெயர்கள் சாதிகளின் ஆசாரங்கள் ஆகியவற்ரைக் கோன்டு களப்பிரர் வரலாற்றை ஆராயலாம் என்றும் சொல்கிறார்கள்.
சைவர்களின் வெறுப்பு எவ்வாறு இருந்தது என்றால் களப்பிரர் காலகட்டத்தில் ஏராளமான நீதி நூல்கள் எழுதப்பட்டதற்குக் காரணம் அக்காலத்தில் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியால் நீதி வழுவி சமூகம் சீர்குலைந்ததுதான் என மீண்டும் மீன்டும் எழுதியிருக்கிறார்கள்! அப்படியானால் பக்தி காலகட்டத்தில் ஏன் அத்தனை பக்தி நூல்கள் எழுந்தன? பக்தி வழுவி நாத்திகம் மேலெழுந்தமையாலா? என்ன அபத்தமான பேச்சு!
ஆனால் அப்படித்தான் நம் ஆரம்பகால வரலாறு முற்றிலும் அடிபப்டைகள் இல்லாமல் எழுதப்பட்டது. அதற்குக் காரணம் அப்போது வரலாற்றை காலவரிசைப்படி எழுதுவது என்ற அளவிலேயே வரலாற்றெழுத்து நின்றுவிட்டிருந்தது. வரலாற்றின் கோட்பாடுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
இந்திய வரலாற்றாய்வில் முக்கியமான கோட்பாட்டு சட்டகங்கள் அக்காலகட்டத்தில்தான் முன்வைக்கபப்ட்டன. டி.டி.கோசாம்பியின் மரபு உருவாகி வந்தது.ஆனால் தமிழ்க அறிஞர்கள் அவற்றை எல்லாமறிந்திருந்தார்கள் என்பதற்கான தடையமே இல்லை
களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் சமணம் செழித்தது. சமணம் பல்வேறு இனக்குழு மக்களை அகிம்சை வழியில் ஒன்றாகத் திரட்டிய மதம். தமிழ்நாட்டில் நாக வழிபாடு அதிகமாக இருந்திருக்கலாம். ஆகவே ஐந்துதலை நாகம் தலைக்குமேல் நிற்கும் தீர்த்தங்காரரான பார்ஸ்வநாதர் இங்கே சமணர்களால் முன்னிறுத்தப்பட்டார். மக்கள் அதிகமாக அவரையே வழிபட்டிருக்கிறார்கள்.
சம்ணம் மருத்துவம், கல்வி ஆகிய இரு வழிகளில் மக்களிடம் சென்றடைந்தது. ஆகவே மருத்துவநூல்கள், நீதிநூல்கள், இலக்கணநூல்கள் ஆகியவையே அவர்களால் அதிகமும் எழுதபப்ட்டன. தமிழகத்தில் கல்வி பரவலாக அவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். சித்த மருத்துவத்தின் பிதாமகர்கள் அவர்களே.
சமணம் வணிகத்தின், வணிகர்களின் மதமும் கூட. தமிழகத்தை ஒன்றிணைக்கவும் விரிவான வணிக வழிகளை உருவாக்கவும் அது உதவியது. இது தமிழகத்தின் பொருளியல் வளார்ச்சிக்கு பெரும்பங்கு வகித்தது. பலநூற்றாண்டுக்காலம் தமிழ் பண்பாட்டின் முகமாக சமணமே விளங்கியது.
களப்பிரர்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் இங்குள்ள மக்களுடன் ஐக்கியமாகிவிட்டிருக்கக் கூடும். தமிழ்கத்தில் உள்ள பலசாதிகள் [குறிப்பாக முத்தரையர் போன்ற சாதிகள்] களப்பிரர் வழித்தோன்றல்களாக இருக்கலாம். அவர்களின் வரலாற்றை நாம் இன்று தெளிவாக பகுப்பாய்வுசெய்ய முடியாது. நெடுங்காலம் ஆகிவிட்டது.
ஆனால் அவர்களின் குலதெய்வங்கள் ஆசாரங்கள் ஆகியவற்றை வட இந்திய — குறிப்பாக ஆந்திர, கனன்டநாட்டு– குலதெய்வங்கள் ஆசாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்தால் புதிய வெளிச்சங்கள் கிடைக்கலாம்
களப்பிரர்காலகட்டம் தமிழகத்துக்கு முக்கியமான அரசியல்-பொருளியல்-பண்பாட்டுக் கொடைகளை வழங்கியது என்றே நான் எண்ணுகிறேன். வரும்காலத்தில் விரிவான ஆய்வுகள் வழியாக இது மேலும் நிறுவப்படக்கூடும்
ஜெயமோகன்
http://athimatham.blogspot.com/
முத்தரையர் சுரேஷ் தனது facebook- எழுதியது...
சுவர் புகைப்படங்கள்
...உண்மையான சிங்கமாக கர்சிப்போம்
இவரால்: Muthirayar Suresh..
24 ஆகஸ்டு, 07:41 க்கு ·விருப்பம்விருப்பமின்மை · · பகிர்தல்.Mutharaiyar Kpmkingமற்றும் Anbu Ganapathy ஆகியோர் இதை விரும்புகிறார்கள்..
Perumbidugu Mutharaiyar enaku therium nanba..but naam ninithal athai sari seiya mudium.....naam ean appati irukirom eantral nam inathil otrumai illai so first naam athai sariseithu kolla ventum ithu sammanthamaga enna help venum eantralum nan saiya katamai pattu irukiren.....eantrum anputan your friend.....
24 ஆகஸ்டு, 16:40 க்கு · விருப்பம்விருப்பமின்மை · 2 பேர்ஏற்றப்படுகின்றது....Muthirayar Suresh good friend , we wait and see how many friends saw the article ,how they reaction ,after we will be decided what we can do for them
24 ஆகஸ்டு, 17:47 க்கு · விருப்பம்விருப்பமின்மை · 2 பேர்ஏற்றப்படுகின்றது....Mannargudi Kurichi Mutharayar Singam naam nam enatthaiyum nalla valarchukku kondu varuvom ,, yeppavum MUTHARAYAR karsikkum SINGAM THAN....NANBA
ஞாயிறு, 13:59 க்கு · விருப்பம்விருப்பமின்மை.Perumbidugu Mutharaiyar thank you...nanba..
ஞாயிறு, 16:20 க்கு · விருப்பம்விருப்பமின்மை.Muthirayar Suresh எப்பவும் எல்லாரும் கர்சிகனும் அந்தகாலம் நம் பொற்காலம்.
ஞாயிறு, 16:30 க்கு · விருப்பம்விருப்பமின்மை.Perumbidugu Mutharaiyar when.....
ஞாயிறு, 16:31 க்கு · விருப்பம்விருப்பமின்மை.
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
முத்தரசர்
கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே.
(க-ரை) சொல் மாறாது இளகிய உள்ளத்தவராய்ப் புலவர்களை
ஆதரிப்பவர்களும் வீரத்தன்மையுள்ளவர்களுமான முத்தரசர்கள் ஆண்டது
கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு : முத்தரையர் என்பவர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட
அரசர்கள். ஆனால் நார்த்தாமலைச் சாசனத்தால், விடேல் விடுகு
முத்தரையன் மகன், சாத்தம் பழியிலியாவன். அவன் மகள் பழியிலி சிறிய
நங்கை என்பவள்; மீனவன் தமிழதியரை யனாயின மல்லனனந்தனை
மணந்தாளென்றிருப்பதால், மீனவராகிய தென்னவரும், முத்தரையரும் ஏக
காலத்தில் பாண்டி நாட்டையும் மற்றும் பெற்றுக்கொண்ட நாடுகளையும்
ஆண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை சமஸ்தானத்துள்ள குடுமியான் மலைக்
கோயில் சாசனத்தில், சத்துரு பயங்கர முத்தரையன், தஞ்சாவூருக்கு
வடமேற்கிலும், திருக்காட்டுப் பள்ளிக்கு இரண்டு மயில் தூரத்து முள்ள
சந்திரலேகை சதுர்வேதி மங்கல மென்ற பழம் பெயருள்ள செந்தலைக்
கிராமத்துள் மீனாட்சி சுந்தரேசுரர் கோயிலுள் குவான் மாறன் பெரும்பிடுகு
முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி வரையன்
மகனுமாகிய சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையன் என்பவர்களின்
சாசனங்களிருக்கின்றன. இக்காலம் சுமார் ஆயிர வருஷங்களாம்.
திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்தில் "முத்தரைய நல்லூர்" என ஓரூரிருக்கிறது.
இம்முத்தரையர் மிகுந்த புகழுடையவர்கள் என்பதை நாலடியாரிலுங்
காணலாம்.
(மேற்)
பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருணைச் சோறார்வர் கயவர் கருணையைப்
பேரூ மறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரு மரிதாய் விடும். மல்லன்மா ஞாலத்து வாழ்பவரு ளெல்லாஞ்
செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்.
(நாலடி)
இம்முத்தரையர் கொங்குநாடும் ஆண்டிருக்கிறார்கள் என்பதைத்
தமிழறியும் பெருமாள் கதை என்னும் புத்தகத்தில் - 'அங்காடி
கொள்ளப்போ யானை கண்டேனணி நகரமன்றியிலே சேனை கண்டேன்.
கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்' எனக் கூறப்பட்டுள்ளது காண்க.
கொங்கு நாட்டுள் அங்குமிங்குமாக அருகி வாழ்கின்ற வலையர் என்னும்
ஒரு வகுப்பினர்முத்தரசர் கூட்டத்தாரெனத் தங்களைப் புகழ்ந்து
கொள்கிறார்கள்.
FOR MORE DETAILS VISIT THE BELOW SITE.....
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=43
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
முத்தரையர் - டாக்டர். இரா. நாகசாமி
மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள். கி.பி. 4ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து.
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர்.
ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள்.
கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும், சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்.
மேலும் தகவல்களைப் படிக்க கிழ்கண்ட தளத்தினுள் செல்லவும்
http://tamilartsacademy.com/books/tavam/chapter43.xml
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
நன்றி தினமலர்
இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் குஞ்சான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பி.சி., எம்.பி.சி., பட்டியலில் உள்ள முத்தரையர் சமுதாய மக்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிக, மிக குறைந்த அளவே முன்னேறியுள்ளனர். மக்கள் தொகைக்கேற்ப முன்னேற்றமில்லை. ஆகவே, இரண்டாம் கட்ட போராட்டமாக கல்வி, வேலைவாய்ப்புகளில் முத்தரையருக்கு 15 சதவீதம் தனி இடஒதுக்கீடு கேட்டு, ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அரசாணை வெளியிட்டும் முத்தரையர் மக்களுக்கு அம்பலக்காரன் என்று ஜாதி சான்றிதழ் தர மறுக்கின்றனர். அம்பலக்காரன் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்க அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களையும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வந்து நிறைவேற்றினால் மட்டுமே, ஊழலை ஒழிக்க முடியும் என்று நம்புகிறோம். ஆகவே, அன்னா ஹசாரேவை ஆதரித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் முத்தரையர் சங்கமும் கலந்து கொள்வது.
திருச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் 41 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் கூட முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. ஆகையால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.,வில் அதிகளவு முத்தரையர்களுக்கு வாய்ப்பளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை கேட்டுக்கொள்கிறோம்.
நடக்கவுள்ள திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனைத்து கட்சியினரும் வாய்ப்பு தரவேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு
முத்தரையர் இனமக்கள் பிசி மற்றும் ஒபிசி பட்டியல்களில் இருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிக குறைந்த அளவே முன்னேறியுள்ளனர். எனவே மக்கள் விகிதாசாரப்படி முன்னேற்றம் இல்லை. இதனால் இரண்டாம் கட்ட போராட்டமாக கல்வி, வேலைவாய் ப்புகளில் முத்தரையர் இனத்தவர்களுக்கு 15 சதவீ தம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் பகுதியில் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டும் முத்தரையர் இனமக்களுக்கு அம்பலக்காரன் என்கிற சாதி சான்றிதழ் தர தாசில்தார் அலுவலகங்கள் மறுக்கின்றன. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நிறுத்திய 42 வேட்பாளர்களில் ஒருவர் கூட முத்தரையர் இனத்தை சேர்ந் தவர் இல்லை. வரும் உள்ளாட்சி தேர்தலில் முத்தரைய இனத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளா ளர் ரங்கராஜ், இளைஞரணி நிர்வாகிகள் பெரியகோபால், தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
காரியாபட்டி, ஜூலை 4: விருதுநகர் மாவட்ட முத்தரையர் கல்வி மற்றும் பொதுநல டிரஸ்ட் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு 2-ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவ,ஹ மாணவிகள் வீதம் 6 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான குழ. செல்லையா, மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ராஜேஸ்வரிக்கு பரிசுத் தொகை ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட்டது.
முத்தரையர் முப்பெரும் விழா காவோியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
வேலை வாய்ப்பு தகவல் ...!
Company Name: Leading Company in Muscat, Oman
POSITION :INTERNAL AUDIT MANAGER
Experience : 10 - 15 years, min 5 years in Senior position
Qualification : Should be CA with memberships in one or more professional bodies: ICAI,
ACCA, AIA, CIPFA.
Salary + Benefits : To be discussed
Location : Muscat, Oman
NOC Required : Yes
Nationality : Indians
POSITION : ASSISTANT STORE KEEPER
Experience : 2 to 5 years in industry, managing a large multiproduct environment
Qualification : Dip in Mech / Electrical / Electronics or communication / course in Inventory
store management
Salary + Benefits : to be discussed
Location : Muscat, Oman
Nationality : Indians
Description:
• Manage a large central warehousing facility for consumer electronics, electrical, security and
eighing products
• Capable of receiving, checking and delivery of goods from different sources and modes of
transport
• High turnaround of stocks calling for meticulous and accurate job execution
• Plan vehicle movement for deliveries and man management of delivery staff
• Shall be a team worker and be capable of working under pressure and to strict time schedules
• Ensure orderliness and neatness in stock storage
• Maintain records as per ISO requirements
POSITION : SENIOR GEOLOGIST
Experience : 15 years plus in Limestone, Coal Mining
Salary + Benefits : To be discussed
Location : Oman
NOC Required : Yes
Nationality : Indian
Send CV please visit : http://www.uaetamilsangam.com/jobopening.asp
Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com, rameshvis@gmail.com
SAUDI ARABIA
Company Name : Leading Elec Comp in Saudi Arabia
Position : Project Manager - Electrical
Experience : 10-15 yrs relevant exp
Qualification : B.E./B.Tech/Diploma in Electrical Engg
Salary + Benefits : To be discussed
Location : Saudi Arabia
NOC Required : Yes
Nationality : Indians
Description:
Knowledge of electrical engineering- Particularly knowledge of power systems and substations.
Finance- Knowledge of cash flow and taxation. Identifies and builds relationship with clients/potential
clients. Maintains and develops a range of contacts. Actively lobbies and wins support.Analyses issues
and breaks them down into their component parts.
Makes systematic and rational judgments based on relevant information.Delegates appropriately. Gets
people moving in a common and consistent direction.
Creates trust, loyalty and a sense of team spirit. Gets the work done through people. Is alert to and
acts upon development needs and opportunities for his staff.
Maximizes the motivation that staff derive from their work.
Send CV please visit : http://www.uaetamilsangam.com/jobopening.asp
Ramesh Viswanathan (Social Service) +971 50 5865375 ramesh_vis@hotmail.com, rameshvis@gmail.com
DUBAI
Company Name : Company dealing with HVAC/Electro mechanical Projects in Dubai
Position : Sr. Project Engineer & Project Manager
Experience : 7 to 10 years.
Qualification : BSc Engg graduates only.
Salary + Benefits : To be discussed
Location : Dubai
NOC Required : Yes
Nationality : Indians
Company Name : Company dealing with HVAC/Electro mechanical Projects in Dubai
Position : Estimation Engineer
Experience : 3 to 5 years
Qualification : B Tech – Mechanical Engineer degree
Salary + Benefits : Bachelor Position , Basic + Transport & accommodation
Location : Dubai
NOC Required : Yes
Nationality: Indians
Description:
Knowledge of codes & standards, SOLAS, API, AISC, ASME, EN, API, NFPA, International Plumbing
Code, National Plumbing Code, IEC, IECEX, ATEX, NEC, IEE, ASHRAE, SMACNA & DW 144.
• Knowledge and experience of offshore construction work and basic design knowledge of HVAC,
electrical /control systems.
• Must have experience in to raising RFQ, presenting cost reports, procurement etc
• Technical Requirements – minimum 3 years experience in oil & gas/marine industry and handling
HVAC and associated Electrical installations of various types of Chilled water and D-X installations.
Send CV please visit : http://www.uaetamilsangam.com/jobopening.asp
UAE
ஊச்சாத்துரை விழா
வியாழன், 30 ஜூன், 2011
முப்பெரும் விழா
திருச்சி அருகே இரு கிராம மக்களிடையே மோதல்: போலீஸார் குவிப்பால் பரபரப்பு
கடந்த மூன்று நாட்களுக்கு முன் மங்கலம் கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது, தாங்கள் கூறும் பாடல் தான் வேண்டும் என்று துலையாநத்தம் கிராம வாலிபர்கள் பிரச்னை செய்துள்ளனர். இதனால், மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும், துலையாநத்தத்தை சேர்ந்தவர்களுக்கும் வாய்தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது.
நேற்று காலை மங்கலம் கிராமத்தில் இருந்து காலை பள்ளிக்கு பஸ்ஸில் சென்ற மாணவ, மாணவிகளை துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் இறக்கி விட்டும், அவ்வழியே சென்ற வாலிபர் கர்ணனையும் தாக்கியுள்ளனர். இதையறிந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆண்கள் துலையாநத்தம் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடி, கிராம மக்களை சரமாரியாக அடித்து நொறுக்கி, ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில், துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல்(45), பிரகாஷ்(30) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் 108 ஆம்புலன்ஸ் வண்டி உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தா.பேட்டை போலீஸார் விரைந்து வந்தும், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான் தலைமையில், அதிரடிப்படை குழுவினர் குவிக்கப்பட்டு, மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் துலையாநத்தம் கிராம பொதுமக்கள் ஏற்கவில்லை. தங்கள் கிராம மக்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி முசிறி - துறையூர் மெயின்ரோட்டில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
முசிறி ஆர்.டி.ஓ., ஜெயசீலா, ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, தாசில்தார் பாலசுப்பிரமணியன், தொட்டியம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், தா.பேட்டை தமிழ்மாறன், தா.பேட்டை யூனியன் ஆணையர் ராணி, தேவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மோதல் தொடர்பாக மங்கலம் கிராமத்தை சேர்ந்த 40 பேரை போலீஸார் முசிறி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தை திருச்சி எஸ்.பி., லலிதா லட்சுமி நேரில் பார்வையிட்டு விசாரித்தார். இருப்பினும் இரு கிராமங்களுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஞாயிறு, 12 ஜூன், 2011
ராமேசுவரத்தில் பெரும் பிடுகு முத்தரையர் படம் அவமதிப்பு: மறியலில் ஈடுபட முயற்சி
ராமேசுவரம் அடுத்த கரையூரில் முத்தரையர் சங்கம் சார்பில் பெரும் பிடுகு முத்தரையர் படம் வரைந்த போர்டு வைக்கப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு “மர்ம” ஆசாமிகள் யாரோ பெரும் பிடுகு முத்தரையர் படத்தை அவமதித்திருந்தனர்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமா னோர் அங்கு கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து கிராம தலைவர் மலைராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலை மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலை முத்தரையர் படத்தை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவலறிந்த ராமேசுவரம் டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை யடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.1 1
வெள்ளி, 10 ஜூன், 2011
லோக்பால் மசோதா நிறைவேற்ற 25 கோடி பேர் ஆதரவு தேவை
ஊழல் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றுவதற்கென பல்வேறு தரப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அன்னா ஹசாரே, யோகாகுரு பாபா ராம்தேவ் என பலர் களம் இறங்கி அற வழியில் போராட்டம் நடத்தி இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
மத்திய அரசை வழிக்கு கொண்டு வர பலரும் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்ற குறைந்த அளவு 25 கோடி பேராவது ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,
அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க தோழர்கள் இந்த செய்தியினை குறுந்தகவல் மூலம் மற்றைய நண்பர்களுக்கு பகிர்ந்துக்கொள்ளவேண்டுகிறோம்
வியாழன், 9 ஜூன், 2011
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உயர்நிலைப் பள்ளி 100 சதம் தேர்ச்சி - நன்றி தினமணி
இந்தப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை 18 பேர் எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் செ. தமிழன்பன் 440, எஸ். சுதர்சன் 434, எம். பிரபாகரன் 432 ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இதில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேர் பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் அறக்கட்டளைத் தலைவர் டி. இந்திரன், தலைமையாசிரியர் ஆர். ரமணன், ஆசிரியர்கள் பாராட்டினர்.
கச்சிமேற்றளி
மரம்: மா மரம்
குளம்: விட்டுணு தீர்த்தம்
பதிகங்கள்: மறையதுபாடிப் -4 -43 திருநாவுக்கரசர்
நொந்தா வொண்சுடரே -7 -21 சுந்தரர்
முகவரி: திருமேற்றளித் தெரு
பிள்ளையார்பாளையம்
காஞ்சிபுரம் மாவட்டம், 631501
தொபே. 9865355572
இது செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியாகிய பிள்ளையார்பாளையத்தில் இருக்கின்றது.
திருஞானசம்பந்தர் வாழ்ந்திருக்கவும் பாடவும் பெற்றதால் இது பிள்ளையார் பாளையம் எனப் பெயர் பெற்றது.
தலச் சிறப்பு: இங்கே இரண்டு திருக்கோயில்கள் இருக்கின்றன. ஒன்று ஓத உருகீசுவரர்கோயில். இங்கே எழுந்தருளியிருந்தவர் திருமால். திருஞான சம்பந்தப் பெருமானாரின் திருப்பாடலைக் கேட்டுச் சிவலிங்கமாய் உருகினார். காஞ்சிப்புராணத்தில் இதற்கு ஆதாரம் உண்டு. மற்றொன்று திருமேற்றளி நாதர்கோயில். இவ்விரு திருக்கோயில்களுக்கும் கிழக்கே திருவீதியில் சம்பந்தர்கோயில் இருக்கின்றது. இத் தலத்திற்கு அப்பர் சுவாமிகள் பாடியருளிய திருநேரிசைப் பதிகம் ஒன்று இருக்கின்றது. காஞ்சி மாநகரம் சிறந்த திருத்தலமாகத் திகழ்வதுடன் எண்ணற்ற சிவதலங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இலங்குகின்றது. இவற்றுள் கச்சியேகம்பம், கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, திருஅனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக்காரைக்காடு என்ற ஐந்து சிவதலங்கள் தேவாரத் திருப்பாடல்கள் பெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன. இவ்வைந்து திருத்தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது திருக்கச்சிமேற்றளி. இது திருக்கச்சி யேகம்பத்திற்குத் தென்மேற்கே ஒரு கல் தொலைவில் அமைந்துள்ள அணி நகராகும். இந்நகரை ஸ்ரீ காஞ்சிமேற்றளியென்றும் திருமேற்றளியென்றும் வழங்குவர். திருக்கச்சியின் மேற்றிசையில் அமைந்திருத்தலால் இத்தலம் இப்பெயர் பெற்றதெனலாம்.
இத்தலத்திற்குச் சம்பந்தர்பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் உள.
காஞ்சி - திருமேற்றளி:
(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1921 No. 86-91; year 1923 No. 101-104. ( with the name of the village Pillayarpalayam))
இத்திருக்கோயிலில், சம்புவராய மன்னர்களில், சகலபுவனச் சக்கரவர்த்தி இராச நாராயண மல்லிநாதன் சம்புவராயரின் 16ஆம் ஆட்சி ஆண்டிலும், விசயநகர வேந்தர்களில், மகா மண்டலேசுவரன் சதாசிவ தேவ மகாராயர் (சகம் 1484) காலத்திலும், பல்லவ மன்னர்களில், தந்திவிக்கிரமவர்மன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இவைகளில் இறைவரின் திருப்பெயர் திருமேற்றளி உடைய நாயனார் என்றும், இறைவரின் திருக்கோயில் திருமேற்றளித் திருக்கோயில் என்றும் குறிக்கப் பெற்றுள்ளன.
இராசநாராயணமல்லிநாதன் சம்புவராயரின் கல்வெட்டு, எயிற்கோட்டத்துத் தேவதானம் நந்தவன்சுதர்விளாகம் என்னும் ஊரில் இருவேலி நிலத்தைத் திருமேற்றளி உடைய நாயனார்க்குக் கொடுத்ததையும், சதாசிவ தேவமகாராயர் கல்வெட்டு, தறி ஒன்றுக்கு ஐந்தரை பணத்தைச் செங்குந்தர்களிடமிருந்து வசூலித்து இறைவனுக்கு நாள் வழிபாட்டிற்கும்விளக்குக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, கொண்ட மய்யராசையா என்பவர் கட்டளையிட்டதையும், தந்திவிக்கரமவர்மன் கல்வெட்டு, ஒரு முத்தரையர் திருமேற்றளிக்கோயிலுக்கு அறச் செயல்கள் புரிந்ததையும், கோயிலைச் சார்ந்து திருமடம் ஒன்று இருந்ததையும் குறிப்பிடுகின்றன.
குறிப்பு: திருமேற்றளி நிலைபெற்றுள்ள ஊராகிய பிள்ளையார் பாளையத்தின் தெருக்களில் உள்ள துண்டுக் கல்வெட்டுக்கள் திரு வேகம்பன்தெரு என்று காஞ்சிபுரத்தில் ஒரு தெருவிற்குப் பெயர் வைக்கப்பட்டிருந்ததையும் சந்திரகிரியில் அப்பராச உடையார் என்னும் கவிஞர் ஒருவர் இருந்ததையும், ஏகாம்பரநாதர் கோயிலுக்குப் பழுது பார்ப்பதற்கு இரண்டு ஊர்களின் வரிகளைக் கொடுத்ததையும் உணர்த்துகின்றன.
வியாழன், 2 ஜூன், 2011
முத்தரையர் சங்கக் கூட்டம் - நன்றி தினமணி
திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று, 3-வது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக முசிறி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்.ஆர். சிவபதியை நியமித்ததற்கு நன்றி தெரிவித்தும், விபத்தில் இறந்த தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் என். மரியம்பிச்சை மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சிவராஜ், லோகநாதன், செல்ல மகேந்திரன், ஒன்றியச் செயலர்கள் விசுவநாதன், புஷ்பராஜ், ஜயசந்திரன், மருளாளி, அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் குஞ்சான் வரவேற்றார். மாவட்டச் செயலர் தங்கவேல் நன்றி கூறினார்.
செவ்வாய், 31 மே, 2011
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த தின விழா
முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல் - நன்றி தினமணி
தஞ்சாவூர், மே 29: முத்தரையர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மண்டல முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் திலகர் திடலில் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மண்டல முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1336-வது பிறந்த நாள் விழா மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். முத்தரையர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர் என 3 நிலைகளில் உள்ளதை மாற்றி 22.2.1996-ன் படி அறிவிக்கப்பட்ட 29 முத்தரையர் உட்பிரிவுகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பின் போது, 29 உட்பிரிவுகளையும் முத்தரையர் என்ற ஒரே ஜாதிப் பெயரில் மத்திய, மாநில அரசுகள் கணக்கில் கொண்டு வர வேண்டும். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு, அவர் ஆட்சி செய்த தஞ்சாவூரில் சிலையும், மணி மண்டபமும் அமைக்க வேண்டும்.
தமிழக வரலாற்றிலும், இலக்கியத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ள முத்தரைய மன்னர்களின் வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். தஞ்சாவூர் - திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள நேமம் கிராமத்தில் ஆயிரத்தளிமேடு (லிங்கமேடு) காவிரியின் போக்கு திசை மாறியதால், மண்மேடிட்டு இருக்கும் இடத்தை அகழ் வாராய்ச்சி செய்து முத்தரையர் மன்னர்களின் மேலும் பல சரித்திரச் சான்றுகளை தொல்பொருள் ஆராய்ச்சித் துறை மூலம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜெ. ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மக்கள் மறுமலர்ச்சி மன்ற மாநிலத் தலைவர் என். ராஜசேகரன் தொடக்கிவைத்தார். சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஆர். விசுவநாதன் சிறப்புரையாற்றினார். இளைஞரணிச் செயலர் ஆர்.வி. பரதன் கொடியேற்றிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலத் தலைவர் குழ. செல்லையா, முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலர் எஸ்.எம். மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஆர். பூபதி, கே. முருகேஷ், ஜி. நந்தகுமார், வழக்குரைஞர் சிவநேசன், கு.ப. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மானம்புச்சாவடியிலிருந்து தொடங்கிய பேரணியை முத்தரையர் சங்க மாநிலத் தலைவர் மு. ராஜமாணிக்கம் தொடக்கிவைத்தார். பேரணி ரயிலடி வழியாக திலகர் திடலை அடந்தது.
புதன், 25 மே, 2011
திங்கள், 23 மே, 2011
வருந்துகிறோம் ...!!!

வருந்துகிறோம் ...!!!
இன்று காலை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் பலியானார் என்ற துயர செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம், அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்த்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
வெள்ளி, 20 மே, 2011
மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1336 ம் ஆண்டு பிறந்த தின விழா.........!!!
பட்டுக்கோட்டை
அன்பான என் இன சகோதரர்களே, உங்களை வணங்குகிறேன்... நாளது நாள் 23.05.2011 ல் நமது இனத்தில் வரலாற்றில் இடம் பெற்ற மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1336 ம் ஆண்டு பிறந்த தின விழா.......... இந்நாளில் நாம் பெருமைப்பட தக்க ரீதியில் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் "சாதியையும் கணக்கில் எடுக்கப்படும்" என்ற அறிவிப்பு உள்ளது. இதனை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் , நமது இனத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள், இந்நாள் அமைச்சர் பெருமக்களுக்கும், எமது சமுதாய சங்கங்களின் தலைவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோளினை வைக்கிறோம், தயவுசெய்து உங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை கலைந்தோ, அல்லது உங்களின் தனிப்பட்ட செல்வாக்கினைப் பயன்படுத்தியோ தமிழக முதல்வரை சந்தித்து கணக்கெடுப்புக்கு முன்பாக 29 பட்ட பெயர்களுடன் தமிழகம் முழுவதும் பறந்து வாழும் முத்தரையர் சமுதாயத்தினர் தங்களின் பட்ட பெயர்களுக்கு முன்பாகவோ, பின்பாகவோ முத்தரையர் என்ற சொற்பதம் சேர்த்துக்கொள்ள அரசாணை வெளியிட வலியுறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், இது நமக்கு கிடைத்துள்ள மிக அற்புதமான சந்தர்ப்பம் இதனை நழுவ விட தயவு செய்து நீங்கள் காரணமாகி விடாதிர்கள், பல ஆண்டுகளாக நாம் கோரிக்கை விடுத்தது, கோரிக்கை விடுத்தது இப்பொழுதுதான் நமக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசு எடுத்துள்ளது. இப்பொன்னான வாய்ப்பினை நமக்கு சாதகமாக பயன்படுத்திட இனத்தின் பிரபலமானவர்கள், முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைக்க எமது இயக்கம் தன்னாலான பணியினை ஆற்றிடும் என்பதனை தெரியப் படுத்துகிறோம்.
மேலும் சகோதரர்களே, இனத்தின் வரலாற்றின் நாயகர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1336 ம் ஆண்டு பிறந்த நாள் விழாவன்று திருச்சி மாநகரின் மத்தியில் தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொது செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா வினால் திறந்துவைக்கப்பட்ட மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழித்திட பல்வேறு அரசியல் இயக்கங்களும், முத்தரையர் சங்கங்களும் தயாராகி வருகின்றன, அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம், மேலும் எமது இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவுக்கும், கொடியேற்று விழாவுக்கும், மேலும் மாமன்னர் படத்திற்கு மரியாதையை செலுத்தும் விழாவிற்கும் பட்டுக்கோட்டைக்கு அருகில் பழஞ்சூர் ரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை அறிவிப்பதோடு அனைவரையும் விழாவில் பங்கெடுக்கவும் அன்போடு அழைக்கிறோம்.
அன்புடன்....
K.சஞ்சய்காந்தி B.Com
ஒருங்கிணைப்பாளர் , இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
M.காந்தி B.E.,
செயலாளர் , இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9003834321
R.தேவா (எ) சுரேஷ் (M.Sc.,)
தலைவர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
Mobile: 0091-9677547381
வாழ்த்துக்கள்
மதிப்பெண் =1120/1200 AVG=93.33
அது மட்டும் அல்லாமல் குளித்தலை பள்ளியில் முதலிடம் பிடித்து இருக்கிறார் என்பதை பெருமிதம் கொள்கிறோம் .
"பள்ளியில் படித்தெல்லாம் மற்ற இனம்
முதலாவதாக வந்ததோ எங்கள் முத்தரைய இனம்"
சிங்கம் பெத்த புள்ள என்பதை நிருப்பித்தர்க்கு எங்கள் பாராட்டுகள் .
பெற்று இருக்கும் அவர்க்கு எங்கள் முத்தரைய இனத்தின் சார்பாக பாராட்டுகளை தெருவித்து கொள்கிறோம் .
THANKS: http://perumpiduku.blogspot.com/2011/05/1052011-thanks-for-malai-malar.html
ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி: 80 ஆண்டுகளுக்குப் பின் புதிய செயல் வடிவம்
நாட்டில் முதல் முறையாக 1931ம் ஆண்டு ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், ஜாதி அடிப்படையில் நடத்தப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாட்டின் மக்கள் தொகை 121.02 கோடி என்றும், ஆண்கள் 62.37 கோடி பேர், பெண்கள் 58.65 கோடி பேர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:
* ஜாதி மற்றும் மதம் உட்பட ஏழைகளைக் கண்டறியவும், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
* நகரங்கள் மற்றும் கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரை கண்டறிய, கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பில், விவரம் கேட்கப்படும் போது, அவர்களின் ஜாதி மற்றும் மதம் குறித்தும் கேட்டறியப்படும்.
* இந்த இரண்டு வகையான கணக்கெடுப்பு பணியும் ஜூன் மாதம் துவங்கும். இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வரும். அரசுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும்.
* ஏழைகளைக் கண்டறிய, பெரிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
* இந்த ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பணிகளை, மாநில அரசுகள் மேற்கொள்ளும். இதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்த, குறைந்த செலவிலான சிறிய கையடக்க கருவிகள் பயன்படுத்தப்படும்; பேப்பர்கள் எதுவும் பயன்படுத்தப்படாது.
* வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களில் எத்தனை பேர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் கண்டறியப்படும்.
* நகரங்கள் மற்றும் கிராமங்களில் சேகரிக்கப்படும், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் குறித்த இந்த விவரங்கள் எல்லாம், 12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பயன்படுத்தப்படும்.
* சமூகம், பொருளாதாரம் குறித்த விவரங்களுடன் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமென, பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.
* இப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியவில்லை எனில், மாநில அரசு ஊழியர்களே இதில் ஈடுபடுவர். இக்கணக்கெடுப்பில் ஏழு விதமான அளவீடுகள் பின்பற்றப்படும், என்றார்.
செவ்வாய், 17 மே, 2011
உயர் கல்விக்கு ஏங்கும் "முதல்' மாணவி - DINAMALAR NEWS
நாகலெட்சுமிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள், தாங்கள் அனுப்ப விரும்பும் தொகையை சின்னாளப்பட்டி கனரா வங்கி கிளை மூலம் அனுப்பலாம். வங்கி : கனரா வங்கி, சின்னாளப்பட்டி. அக்கவுண்ட் நம்பர் : 1003101028258. IFSC code : CNRB 0001003.
அவரது முகவரி : எஸ்.நாகலெட்சுமி, தந்தை பெயர் எ. சரவணன், 8/24/10, துர்கை அம்மன் கோயில் தெரு, கீழக்கோட்டை, சின்னாளப்பட்டி - 624301. திண்டுக்கல்.
தமிழக அமைச்சரவையில் ஒவ்வொரு சமூகம் பெற்ற பிரதிநிதித்துவம் - THANKS TO DINAMALAR
முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 33 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர். அதில் 24 பேர், புதுமுகங்களாக இடம் பெற்றுள்ளனர். கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், அனைத்து தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி வாகை சூடியது.வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவான கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி, சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்தது. அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள், அமோக வெற்றி பெற்றனர். எனவே, அச்சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எட்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கு விவசாயத் துறை, கே.வி.ராமலிங்கத்திற்கு பொதுப்பணித் துறை, தங்கமணிக்கு வருவாய் துறை, சண்முகவேலுக்கு தொழில் துறை, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெடுஞ்சாலைத் துறை, செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்து துறை போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, எஸ்.பி.வேலுமணிக்கு சிறப்பு திட்டங்கள் அமலாக்கம் என்ற புதிய துறையும் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வின் ஓட்டு வங்கியாக அருந்ததியர் சமுதாய ஓட்டுகளும் கணிசமாக உள்ளது. அந்த சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடு, கடந்த தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது.ஆனால், அச்சமுதாயத்தினரின் ஓட்டுகளும் அ.தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ளது. ஆனால், அமைச்சரவையில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அச்சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தனபாலுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறையும் அக்கட்சியில் நீடிக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க.,வினர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.ஆனால், அமைச்சரவை பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என தெரிய வந்ததும், அதிருப்தி அடைந்தனர். மூன்று முறை எம்.எல்.ஏ., இரண்டு முறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., தனது வெற்றியை கோலோச்சியுள்ளதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஆறு பேருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக வைத்திலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சராக செல்லூர் ராஜு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார், சட்டத்துறை அமைச்சராக சுப்பையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றிருந்தாலும், வட மாவட்டங்களிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தென்சென்னை மாவட்டச் செயலர் செந்தமிழனுக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி சி.வி.சண்முகத்திற்கும், சிறுதொழில்கள் துறை அமைச்சர் பதவி எம்.சி.சம்பத்திற்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி கே.பி.முனுசாமிக்கும், சமூக நலத்துறை அமைச்சர் பதவி, செல்வி ராமஜெயத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கருப்பசாமிக்கு கால்நடைத்துறை அமைச்சர் பதவியும், ஆதிதிராவிடர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி சுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.யாதவர் சமுதாயத்தில் கோகுல இந்திராவுக்கு வணிக வரித்துறையும், முத்தரையர் சமுதாயத்தில் சிவபதிக்கு விளையாட்டுத் துறையும், உடையார் சமுதாயத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உணவுத் துறையும், முதலியார் சமுதாயத்தில் டாக்டர் விஜய்க்கு சுகாதாரத்துறையும், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மரியம் பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறையும், படுகர் சமுதாயத்தில் புத்திசந்திரனுக்கு சுற்றுலா துறையும், மீனவர் சமுதாயத்தில் ஜெயபாலுக்கு மீன்வளத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.
செட்டியார் சமுதாயத்தில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், சமீபத்தில் பிஎச்.டி., முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள வைகைச்செல்வன் ஆகியோர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். பழ.கருப்பையாவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் பட்டிமன்றம், இலக்கியக் கூட்டங்களில் சிறப்பாக பேசுவார். ஆனால், சட்டசபைக்கு புதியவர் என்பதால் அவருக்கு அப்பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்களும் முரண்பாடாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது புதிய அமைச்சராக பதவி ஏற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெயர், எட்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சி.வி.சண்முகம் பெயர் 10வது இடத்திலும், எம்.சி.சம்பத் பெயர் 19வது இடத்திலும், எஸ்.பி.சண்முகநாதன் பெயர் 15வது இடத்திலும் இடம் பெற்றிருந்தது.
சுகாதாரம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய் துறை, உயர்கல்வித் துறை, போக்குவரத்து துறை புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திறமையாக நிர்வாகப் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மின் துறை தவிர, அனைத்து துறைகளுக்கும் பொறுப்பேற்றிருப்பவர்கள், துறை பற்றி இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
திங்கள், 9 மே, 2011
சிங்கத்தின் வம்சமே சீற்றம்கொள்..
இன்னும் எத்தனை காலம்
புழுக்களுக்கு ஆசைப்பட்டு
தூண்டியலில் மடியப்போகிறாய்..!
சிற்றின்பத்தில் சிக்குண்டு
எலிகளின் பொறிகளிலா
உன் காலத்தை கடத்தப்போகிறாய்..!
சிங்கத்தின் வம்சம் நீ
பிறகு ஏன்
நரிகளுடன் நட்புறவு...!
ஆலமரத்தின் விருட்சம் நீ
பிறகு ஏன் அரளிகளுடன்
ஆலாபனை..
ஓடிஓடி களைத்தவனே
வட்டத்திற்குள் ஓடியது போதும்
வெளியில் வா இங்கோ கோணங்கள் பலஉண்டு..
திரிகளாகவே இன்னும் எத்தனைக்காலம் கருகிக்கொண்டிருக்கப்போகிறாய்..
மாறுதலுக்காக இன்றுமுதல்
தூண்டுகோல்களை கொளுத்துங்கள்...
நண்பனே...
உலகமே உனக்காகத்தான்
அதில் எல்லைகள் பிரிக்க
உனக்கு அதிகாரம் இல்லை...
வேலிகளிட்டா
விருந்தோம்பலை வளர்க்கப் போகிறாய்..!
காற்று வழிப்போ
உன் காலம் தென்றலாய் கிடக்கும்
நாற்று வழிப்போ
உன் காலம் வசந்தமாய் கிடக்கும்..
நம்பிக்கையோடு புறப்படு
நாளைகள் எல்லாம் நமக்கே...
செவ்வாய், 3 மே, 2011
JOB OPENING FOR DAR AL RIYARH CAN ALL MY FRIENDS IF YOU WANT USED...!!!
JOB OPENINGS AT DAR AL RIYARH
DAR AL RIYADH, WAS ESTABLISHED IN 1975.
Dar Al Riyadh has successfully extended professional service capabilities from Engineering and Architecture into
Procurement & Construction Management.
Job Openings
# Job Title Position Discilpline VacanciesPosted On Expiry On
1 Head of Projects Head of Projects GIS 1 23 Feb 2011 30 Apr 2011
2 Photogrammetry Photogrammetry GIS 7 23 Feb 2011 30 Apr 2011
3 Architectural Inspector Architectural Inspector Civil/Architectural 70 11 Jan 2011 30 Apr 2011
4 Mechanical Inspector Mechanical Inspector Mechanical 70 11 Jan 2011 30 Apr 2011
5 Electrical Inspector Electrical Inspector Electrical 70 11 Jan 2011 30 Apr 2011
6 Civil Inspector Civil Inspector Civil/Architectural 70 11 Jan 2011 30 Apr 2011
7 Surveyor Surveyor Civil/Architectural 50 11 Jan 2011 30 Apr 2011
8 Quantity Surveyor Quantity Surveyor Civil/Architectural 30 11 Jan 2011 30 Apr 2011
9 Planning Engineer Planning Engineer Civil/Architectural 25 11 Jan 2011 30 Apr 2011
10 Architect Architect Civil/Architectural 50 11 Jan 2011 30 Apr 2011
11 Mechanical Engineer Mechanical Engineer Mechanical 50 11 Jan 2011 30 Apr 2011
12 Electrical Engineer Electrical Engineer Electrical 50 11 Jan 2011 30 Apr 2011
13 Structural Engineer Structural Engineer Civil/Architectural 50 11 Jan 2011 30 Apr 2011
14 QA/QC Engineer QA/QC Engineer Civil/Architectural 50 11 Jan 2011 30 Apr 2011
15 Civil Engineer Civil Engineer Civil/Architectural 50 11 Jan 2011 30 Apr 2011
16 Project Manager Project Manager Civil/Architectural 45 11 Jan 2011 30 Apr 2011
17 Sr. Environmental Engineer Sr. Environmental Engineer Civil/Architectural 2 11 Jan 2011 30 Apr 2011
18 Landscape Architect Landscape Architect Civil/Architectural 3 11 Jan 2011 30 Apr 2011
19 Planning Engineer Planning Engineer Civil/Architectural 5 11 Jan 2011 30 Apr 2011
20 Project Manager Project Manager Civil/Architectural 3 11 Jan 2011 30 Apr 2011
21 Quantity Surveyor Quantity Surveyor Civil/Architectural 4 11 Jan 2011 30 Apr 2011
22 Electrical Designer ELECTRICAL DESIGNER Electrical 5 11 Jan 2011 30 Apr 2011
23 Business Development Manager Business Development Manager Civil/Architectural 3 11 Jan 2011 30 Apr 2011
24 Sales & Mktg Manager Sales & Mktg Manager Sales & Mktg 1 11 Dec 2010 30 Apr 2011
25 Planner/Scheduler Planner/Scheduler Planning 1 11 Dec 2010 30 Apr 2011
26 Quality Engineer Quality Engineer Quality 1 11 Dec 2010 30 Apr 2011
27 CAD Designer-Communication CAD Designer-Communication Telecom 1 11 Dec 2010 30 Apr 2011
28 CAD Designer-Communication CAD Designer-Communication Telecom 1 11 Dec 2010 30 Apr 2011
29 Communication Engr Communication Engr Telecom 1 11 Dec 2010 30 Apr 2011
30 Sr. Communication Engr Sr. Communication Engr Telecom 1 11 Dec 2010 30 Apr 2011
31 CAD Designer-Civil/Str CAD Designer-Civil/Str Buildings 1 11 Dec 2010 30 Apr 2011
32 CAD Designer-Structural CAD Designer-Structural Buildings 1 11 Dec 2010 30 Apr 2011
33 CAD Designer-Civil Civil Design Engr Buildings 2 11 Dec 2010 30 Apr 2011
34 Civl/Str. Engineer Civl/Str. Engineer Buildings 1 11 Dec 2010 30 Apr 2011
35 Architect Architect Buildings 1 11 Dec 2010 30 Apr 2011
36 Civil Design Engr Civil Design Engr Buildings 1 11 Dec 2010 30 Apr 2011
Ramesh Viswanathan (Social Service) ramesh_vis@hotmail.com +971 50 5865375
37 Structural Design Engr Structural Design Engr Buildings 1 11 Dec 2010 30 Apr 2011
38 CAD Designer-Mech CAD Designer-Mech Piping & Mech 1 11 Dec 2010 30 Apr 2011
39 CAD Designer-Mech CAD Designer-Mech Piping & Mech 2 11 Dec 2010 30 Apr 2011
40 Mech Design Engr Mech Design Engr Piping & Mech 2 08 Dec 2010 30 Apr 2011
41 CAD Designer - Piping CAD Designer - Piping Piping & Mech 1 08 Dec 2010 30 Apr 2011
42 CAD Designer - Piping CAD Designer - Piping Piping & Mech 2 08 Dec 2010 30 Apr 2011
43 PDS Administrator PDS Administrator Piping & Mech 1 08 Dec 2010 30 Apr 2011
44 Piping Design Engr Piping Design Engr Piping & Mech 1 08 Dec 2010 30 Apr 2011
45 Piping Design Engr Piping Design Engr Piping & Mech 5 08 Dec 2010 30 Apr 2011
46 Sr. Piping Design Engr Sr. Piping Design Engr Piping & Mech 1 08 Dec 2010 30 Apr 2011
47 CAD Designer-Process CAD Designer-Process Process 1 08 Dec 2010 30 Apr 2011
48 CAD Designer-Process CAD Designer-Process Process 2 08 Dec 2010 30 Apr 2011
49 Process Design Engr Process Design Engr Process 1 08 Dec 2010 30 Apr 2011
50 SP P&ID Administrator SP P&ID Administrator Process 1 08 Dec 2010 30 Apr 2011
51 Sr.Process Design Engineer Sr.Process Design Engineer Process 1 08 Dec 2010 30 Apr 2011
52 CAD Designer-Inst CAD Designer-Inst Instrument 1 08 Dec 2010 30 Apr 2011
53 CAD Designer-Inst CAD Designer-Inst Instrument 2 08 Dec 2010 30 Apr 2011
54 Intool Administrator Intool Administrator Instrument 1 08 Dec 2010 30 Apr 2011
55 I&C Design Engineer I&C Design Engineer Instrument 1 08 Dec 2010 30 Apr 2011
56 I&C Design Engineer I&C Design Engineer Instrument 3 08 Dec 2010 30 Apr 2011
57 Sr. I&C Design Engineer Sr. I&C Design Engineer Instrument 1 08 Dec 2010 30 Apr 2011
58 CAD Designer-Electrical CAD Designer-Electrical Electrical 1 08 Dec 2010 30 Apr 2011
59 CAD Designer-Electrical CAD Designer-Electrical Electrical 2 08 Dec 2010 30 Apr 2011
60 Electrical Design Engineer Electrical Design Engineer Electrical 3 08 Dec 2010 30 Apr 2011
61 Electrical Design Engineer Electrical Design Engineer Electrical 2 08 Dec 2010 30 Apr 2011
62 Sr.Electrical Design Engineer Sr.Electrical Design Engineer Electrical 1 08 Dec 2010 30 Apr 2011
63 QS/Materials Engineer QS/Materials Engineer Materials 1 08 Dec 2010 30 Apr 2011
64 Sr.QS/Materials Engineer Sr.QS/Materials Engineer Materials 1 08 Dec 2010 30 Apr 2011
65 Secretary Secretary Project
Management
1 08 Dec 2010 30 Apr 2011
66 Proj Sec / Document custodian Proj Sec / Document custodian Project
Management
1 08 Dec 2010 30 Apr 2011
67 Project Engineer Project Engineer Project
Management
1 08 Dec 2010 30 Apr 2011
68 Project Manager Project Manager Project
Management
1 08 Dec 2010 30 Apr 2011
69 SP P&ID ADMINISTRATOR SP P&ID Administrator Instrument 5 07 Dec 2010 30 Apr 2011
70 SPI INTOOL ADMINISTRATOR SPI INTOOL ADMINISTRATOR Instrument 5 07 Dec 2010 30 Apr 2011
71 SR. PIPING DESIGN ENGINEER Sr. Piping Design Engr Petrochemical, Oil
& Gas
5 07 Dec 2010 30 Apr 2011
72 SR. INSTRUMENTATION & CONTROL
DESIGN ENGINEERS
I&C Design Engineer Petrochemical, Oil
& Gas
5 07 Dec 2010 30 Apr 2011
73 ROTATING EQUIPMENT ENGINEER ROTATING EQUIPMENT
ENGINEER
Petrochemical, Oil
& Gas
15 07 Dec 2010 30 Apr 2011
74 SENIOR PROCESS DESIGN ENGINEER Sr.Process Design Engineer Petrochemical, Oil
& Gas
5 07 Dec 2010 30 Apr 2011
75 ELECTRICAL DESIGN ENGINEERSSubstation
& Transmission
Electrical Design Engineer Electrical 5 07 Dec 2010 30 Apr 2011
76 CIVIL DESIGN ENGINEER-Substation Civil Design Engr Electrical 5 07 Dec 2010 30 Apr 2011
Ramesh Viswanathan (Social Service) ramesh_vis@hotmail.com +971 50 5865375
77 TURNAROUND PLANNING ENGINEER TURNAROUND PLANNING
ENGINEER
Petrochemical, Oil
& Gas
5 07 Dec 2010 30 Apr 2011
78 MAINTENANCE PLANNING ENGINEER MAINTENANCE PLANNING
ENGINEER
Electrical 10 07 Dec 2010 30 Apr 2011
79 PROCESS ENGINEER(PP/PE/EG) PROCESS ENGINEER Petrochemical, Oil
& Gas
5 07 Dec 2010 30 Apr 2011
80 PROCESS
ENGINEER(AMMONIA/UREA/DAP)
PROCESS ENGINEER Materials 5 07 Dec 2010 30 Apr 2011
81 PROCESS SAFETY ENGINEERS PROCESS SAFETY ENGINEERS Petrochemical, Oil
& Gas
5 07 Dec 2010 30 Apr 2011
82 INSTRUMENTATION RELIABILITY
ENGINEERS
INSTRUMENTATION RELIABILITY
ENGINEERS
Petrochemical, Oil
& Gas
3 07 Dec 2010 30 Apr 2011
83 ELECTRICAL RELIABILITY ENGINEERS ELECTRICAL RELIABILITY
ENGINEERS
Petrochemical, Oil
& Gas
3 07 Dec 2010 30 Apr 2011
84 MECHANICAL RELIABILITY ENGINEERS MECHANICAL RELIABILITY
ENGINEERS
Petrochemical, Oil
& Gas
5 07 Dec 2010 30 Apr 2011
85 MATERIAL AND CORROSION ENGINEERS MATERIAL AND CORROSION
ENGINEERS
Materials 3 07 Dec 2010 30 Apr 2011
86 PLANT INSPECTOR PLANT INSPECTOR Materials 10 07 Dec 2010 30 Apr 2011
87 PLANT INSPECTION ENGINEER PLANT INSPECTION ENGINEER Materials 15 07 Dec 2010 30 Apr 2011
88 CAD OPERATOR( Communication ) CAD Operator Communication 3 07 Dec 2010 30 Apr 2011
89 CAD OPERATOR( Structural ) CAD Operator Structural 3 07 Dec 2010 30 Apr 2011
90 CAD OPERATOR( Civil ) CAD Operator Civil 3 07 Dec 2010 30 Apr 2011
91 CAD OPERATOR( Piping & Mechanical ) CAD Operator Piping & Mech 3 07 Dec 2010 30 Apr 2011
92 CAD OPERATOR( Process) CAD Operator Process 3 07 Dec 2010 30 Apr 2011
93 CAD OPERATOR( Instrument ) CAD Operator Instrument 3 07 Dec 2010 30 Apr 2011
94 CAD OPERATOR( Electrical ) CAD Operator Electrical 3 04 Dec 2010 30 Apr 2011
95 INSTRUMENT DESIGNER INSTRUMENT DESIGNER Instrument 3 04 Dec 2010 30 Apr 2011
96 ELECTRICAL DESIGNER ELECTRICAL DESIGNER Electrical 3 04 Dec 2010 30 Apr 2011
97 MECHANICAL DESIGNER Mechanical Designer Piping & Mech 3 04 Dec 2010 30 Apr 2011
98 MAINTENANCE
ENGINEER(INSTRUMENTATION)
MAINTENANCE ENGINEER Instrument 5 04 Dec 2010 30 Apr 2011
99 MAINTENANCE ENGINEER(ELECTRICAL) MAINTENANCE ENGINEER Electrical 5 04 Dec 2010 30 Apr 2011
100 MAINTENANCE ENGINEER(MECHANICAL) MAINTENANCE ENGINEER Piping & Mech 5 04 Dec 2010 30 Apr 2011
101 INSTRUMENT DESIGN ENGINEERS INSTRUMENT DESIGN
ENGINEERS
Instrument 5 04 Dec 2010 30 Apr 2011
102 ELECTRICAL DESIGN ENGINEERS Electrical Design Engineer Electrical 5 04 Dec 2010 30 Apr 2011
103 MECHANICAL DESIGN ENGINEERS Mech Design Engr Piping & Mech 5 04 Dec 2010 30 Apr 2011
104 PROJECT ENGINEER(INSTRUMENTATION) Project Engineer Instrument 5 04 Dec 2010 30 Apr 2011
105 PROJECT ENGINEER(ELECTRICAL) Project Engineer Electrical 5 04 Dec 2010 30 Apr 2011
106 PROJECT ENGINEER(MECHANICAL) Project Engineer Piping & Mech 10 04 Dec 2010 30 Apr 2011
To apply and more details please visit
http://www.daralriyadh.com/Careers/CurrentOpenings.aspx?pid=1bb1d14b-a1b0-4e70-a917-
c7d3b50c465d&sid=fa276aa2-547c-444f-a04c-11212335f669
சனி, 23 ஏப்ரல், 2011
முத்தரையர் இளைஞர் அணி கூட்டம்
முத்தரையர் இளைஞர் அணி கூட்டம் 22 .4 .2011 அன்று எங்கள் ஊர் சித்தரேவு வில் நடை பெற்றது இந்த கூட்டத்தில் திரு. புகழேந்தி ,கவியரசு , மற்றும் நம்பி ,கார்த்திக் ,தினேஷ் ,காந்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . இந்த கூட்டத்தில் பல கருத்துகள் , மற்றும் ஆலோசனைகள் மக்களுக்கு கூறப்பட்டன .
மேலும் செய்திகளுக்கு ....
http://perumpiduku.blogspot.com/2011/04/blog-post.html
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
Muthirayar Suresh (Muthuraja)..தனது facebook ல் எழுதியது
இளம் சிங்கங்கள் அமைப்பு இதை செயவேண்டும் .மன்னார்குடிஇல் ஏன் DMK (மாற்று இன ) வேட்பாளரை ஆதரிகிறார்கள் என்று புரியவில்லை????? எந்த காரணத்தையும் நமது சமுகத்தை நினைத்து ஒன்று படுங்கள் .
வியாழன், 7 ஏப்ரல், 2011
'செய் அல்லது செத்து மடி': ஹசாரே
செய் அல்லது செத்து மடி என்று ஆவேசமாக குறிப்பிட்ட ஹசாரே, 'எனது இந்த போராட்டத்திற்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி தருகிறது. இதுவரை எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துள்ளன; அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த போரட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு மிக முக்கியம். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்தால் அவர்களை எவ்வித முன் அனுமதி இன்றியும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதா ஒன்றே ஊழலை ஒழிக்க வழி' என்றார்.
இதற்கிடையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் இந்தியா கேட் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர். தடையை மீறி அவர்கள் ஊர்வலம் சென்றனர். ஊழலுக்கு எதிரான இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஊர்வலங்களும் உண்ணாவிரதமும் நடைபெறுகின்றன.
ஊழலில் சிக்கியவர்கள் யாரும் தப்பி விடக்கூடாது , ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் மசோதா உருவாகும் தருணத்திலேயே கடுமையாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை துறக்க தயாராகி வரும் காந்திய சிந்தனைவாதி அன்னா ஹசாரேக்கு க்கு நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர்.
3வது நாளாக இவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த மத்திய அரசு சம்மதித்துள்ளது.இத்துடன இவரது கோரிக்கை நியாயமானது என்றும் , மக்கள் பிரதிநித்துவம் கேட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் கண்டிருக்கும் களம் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளன. அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இவர் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இழுத்து சென்ற அரசியல்வாதிகள் பரிசுத்தமில்லாதவர்கள் என வர்ணிக்கிறார்.
இவரின் போராட்டம் ஏன் ? : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 3 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க டில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளானவர்கள் இவரது மேடை அருகே கூடி வருகின்றனர். அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டார்.
ராணுவ வீரராக இருந்தவர்: கிசான் பபத் பபாரோ ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட மகாராஷ்ட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்திக் கிராமத்தை சேர்ந்தவர். இவரது வயது தற்போது 71. ஆரம் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு டிரைவராக இருந்த போது எதிர்பாராத விபத்து காரணமாக ராணு பணியை விட்டு பொதுநலச்சேவையில் ஈடுபட்டார். நதிநீர் இணைப்பு, தகவல் உரிமை பெறும் சட்டம், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். உயரிய பத்மபூஷண் விருது பெற்றுள்ளார்.
அரசியல்வாதிகள் பின்னால் தமிழக மக்கள்: அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தமிழகத்தில் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது வியப்பாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சரியான விழிப்புணர்வு, தமிழக மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை; ஊழலால் ஏற்படும் கடும் விளைவுகளை தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னால் அலையும் தமிழக மக்கள், ஊழலுக்கு எதிரான இத்தகைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.
அடுக்கடுக்காக பிரமிக்க வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம். இப்பட்டிப்பட்ட செய்திகள் காந்தியவாதியான அன்னா ஹசாரேவின் கோபத்தை, ஆவேசத்தை நியாயப்படுத்தத்தான் செய்கிறது. காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழல் ஒழிப்பு மசோதாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.
ஆறுக்கு நாலு கைப்பற்றும் வாய்ப்பில் அ.தி.மு.க.,:புதுக்கோட்டை மாவட்ட நிலவரம்
புதுக்கோட்டை: இத்தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் பெரியண்ணன் அரசு போட்டியிடுகிறார். அ.தி.மு.க., அணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முத்துக்குமரன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் முத்தரையர் சமுதாயத்தினர் அதிகம். இரண்டாவதாக முக்குலத்தோர் மற்றும் ஆதிதிராவிடர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என, பல்வேறு ஜாதி, மதத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.பிரதான கட்சி வேட்பாளர்கள் இருவரும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், அந்தச் சமுதாய ஓட்டு பிளவுபடுகிறது. முத்தரையர் ஓட்டுகளை அதிகமாக பெறும் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளது.அ.தி.மு.க., நேரடியாக போட்டியிடாத நிலையில், அந்தக் கட்சியின் மொத்த ஓட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. இதனால், புதுக்கோட்டை தொகுதியின் வெற்றி வாய்ப்பு, மதில் மேல் பூனையாக உள்ளது.
கந்தர்வகோட்டை (தனி): புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கவிதைப்பித்தன், அ.தி.மு.க., வேட்பாளர் சுப்பிரமணியன் இடையே தான் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே இருந்த குளத்தூர் (தனி) தொகுதிக்குட்பட்ட பல கிராமங்கள், கந்தர்வகோட்டை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. குளத்தூர் தொகுதி அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்ததால், கந்தர்வகோட்டை தொகுதியின் தேர்தல் முடிவும், அ.தி.மு.க.,வுக்குத் தான் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விராலிமலை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ரகுபதி மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர் போட்டியிடுகின்றனர். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். இரண்டாவதாக, முத்தரையர் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் உள்ளனர். கவுண்டர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினரும் அதிகம்.தி.மு.க., வேட்பாளர் ரகுபதி சிறுபான்மையினமான செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், முக்குலத்தோர் ஓட்டு அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்கும். அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமின்றி, மண்ணின் மைந்தர் என்பதால், இவருக்கு அந்தச் சமுதாயத்தினரின் ஓட்டு அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முத்தரையர் மற்றும் கவுண்டர் ஓட்டுகளும் கிடைக்குமென்பதால், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
திருமயம்: இத்தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் வைரமுத்து மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சுப்புராம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. "சிட்டிங்' எம்.எல்.ஏ., சுப்புராம், 2006 தேர்தலில், 314 ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அப்போதைய தே.மு.தி.க., வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், 10 ஆயிரத்து 490 ஓட்டுகள் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., வுடன், தே.மு.தி.க., கூட்டணி சேர்ந்துள்ளதால், அ.தி.மு.க., வேட்பாளர் வைரமுத்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஆலங்குடி: இத்தொகுதியில், தி.மு.க., அணியில் பா.ம.க., வேட்பாளர் அருள்மணி போட்டியிடுகிறார். அ.தி.மு.க., வேட்பாளராக, கு.ப.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இருதரப்பிலும் போட்டி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அது, தேர்தல் முடிவை மாற்றக் கூடும். முத்தரையர் சமுதாய மக்களின் ஓட்டு சிந்தாமல், சிதறாமல் யாருக்கு கிடைக்கிறதோ, அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எதிர்ப்பை சரிகட்டி அச்சமுதாய ஓட்டுகளைப் பெற, கு.ப.கிருஷ்ணன் முயன்று வருகிறார்.
அறந்தாங்கி: இத்தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜநாயகம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 1977 முதல், 96 வரை நடந்துள்ள ஆறு தேர்தல்களில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசர், தொடர்ந்து வெற்றி பெற்றார்.2006 தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் உதயம்சண்முகம் வெற்றி பெற்றார். 30 ஆண்டுக்குப் பின் தொகுதி மீட்கப்பட்டதால், தி.மு.க.,வினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.தொகுதியைத் தக்கவைக்கும் விதமாக உதயம்சண்முகம் எம்.எல்.ஏ., உட்பட, கட்சி நிர்வாகிகள் பலர், வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். வாய்ப்பு காங்கிரசுக்குப் போனதால், தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அவர்களைச் சரிக்கட்டினால் மட்டுமே திருநாவுக்கரசர் வெற்றி பெற முடியும்.
முக்கிய தொழில் :விவசாயம், கல் குவாரிகள், மீன் பிடி தொழில், முந்திரி.
நீண்ட கால கோரிக்கைகள் :கொள்ளிடம் உபரிநீர் திட்டம், காவிரி குடிநீர் திட்ட விரிவாக்கம், மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு, மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை.








