Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

முத்தரையர் - டாக்டர். இரா. நாகசாமி

கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்" என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு காலம் ஆண்டார்கள்? இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும், அக்கால முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு? முத்தரையர் என்ற சொல் எதைக் குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப் பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள். கி.பி. 4ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து.
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர்.
ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள்.
கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும், சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்.


மேலும் தகவல்களைப் படிக்க கிழ்கண்ட தளத்தினுள் செல்லவும்

http://tamilartsacademy.com/books/tavam/chapter43.xml

கருத்துகள் இல்லை: